ஆன்மிக தகவல் – அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, திருவள்ளூர்

Rate this post

சுயம்பு அம்பாள்:

 கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் இருக்கிறாள். இவளுக்கு பின்புறம் அம்பாள் சிலை ஒன்றுள்ளது. இந்த அம்பிகை அக்னி ஜுவாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள். காலையில் கோபூஜை நடக்கிறது.

 தினமும் மாலை பிரதோஷ வேளையில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. அம்பாள் சன்னதியில் விளக்கு ஒன்று உள்ளது. இதனை பதி விளக்கு என்கின்றனர். இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிரெதிரே சூரியன், சந்திரன் ஆகியோர் இருப்பது விசேஷமான அமைப்பு. மயில், நாகம் மற்றும் சிம்ம வாகனங்களும் இருக்கிறது. இதில் சிம்மத்தின் மீது அம்பிகை அமர்ந்திருக்கிறாள். இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது. பக்தர்கள் அம்பிகையையும், இந்த விளக்கையும் தரிசித்தால் குடும்பத்தில் என்றும் குறையில்லாத நிலை இருக்கும் என்பது நம்பிக்கை.

புற்று சன்னதி:

கோயிலுக்கு வெளியில் திருச்சாம்பல் பொய்கை தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி எதிரில் கொடிமரம் உள்ளது. பெரும்பாலான அம்பாள் தலங்களில் திருவிழாவின்போது, காப்புக்கட்டித்தான் விழா நடத்துவர். இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. பசு சாணத்தில் செய்த சாம்பலையே இக்கோயிலில் பிரசாதமாக தருகின்றனர். புற்றிற்கு அருகில் விநாயகர், நாகர் இருக்கின்றனர். பொதுவாக விநாயகர் வலது கையில் தந்தமும், இடக்கையில் மோதகமும் வைத்திருப்பார். இவர் வலது கையால் ஆசிர்வதித்து, இடது கையை அபய முத்திரையாக வைத்திருப்பது வித்தியாசமான அம்சம். தேவி கருமாரியம்மனை வழிபடுபவர்கள் இங்கும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

பூட்டு நேர்த்திக்கடன்:

கைலாயத்தில் சிவன் திருமணம் நடைபெற்றபோது, தென்திசை வந்த அகத்தியருக்கு, இத்தலத்தில் சிவன் திருமணக்காட்சி கொடுத்தார். இவர், கருமாரியம்மன் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். அகத்தியருக்கு காட்சி தந்த வேற்கன்னி அம்பாள் இக்கோயிலில் தனிச்சன்னதியில் காட்சி தருகிறாள். அருகில் அகத்தியர் வணங்கியபடி இருக்கிறார்.

சிறப்பம்சங்கள்:

முன்பு இத்தலத்தில் புற்றிற்குள் இருந்த நாகம், கோயில் கட்டும்போது கோயிலைவிட்டு வெளியேறியது. இந்த நாகம் ராஜகோபுரத்திற்கு இடப்புறம் ஒரு மரத்தின் கீழ் தங்கியது. இவ்விடத்தில் பெரிய புற்று உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இப்புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.

You may also like...