ஆன்மிக தகவல் – ஓம்காரேஷ்வரர் கோயிலின் சிறப்புகள்
12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான ஓம்காரேஷ்வரர் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?
விந்திய மலையானது தான் வளர்வதற்கு ஓம்காரேஸ்வரரை வேண்டிக்கொண்டு அதனால் வளர்ந்து வருவதாக ஒரு புராணக்கதை உண்டு.
ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான ஓம்காரேஷ்வர் ஆலயம், மத்தியப்பிரதேச மாநிலத்தின் கான்வா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நர்மதை நதியானது இவ்விடத்தை சுற்றி ஒடுகிறது. விந்திய மலையானது தான் வளர்வதற்கு ஓம்காரேஸ்வரரை வேண்டிக்கொண்டதகவும், அதனால் அது வளர்ந்து வருவதாகவும் ஒரு புராணக்கதை உண்டு. அது என்ன என்பதை பார்க்கலாம்.
இமயமலை என்று சொல்லப்படும் விந்தியமலைக்கு ஒருமுறை நாரதர் வந்துள்ளார். நாரதர் வந்ததை கண்ட விந்திய ராஜன் அவரை வரவேற்கும் பொருட்டு தனது பெருமைகளை மறைமுகமாக பறை சாற்றிக்கொண்டான். “நாரதரே… உலகத்திலே மிக உயர்ந்தவனாக செழிப்புடன் இருப்பவன் நானாக இருந்தாலும், நீங்கள் இங்கு வந்ததால் மேலும் நான் பெருமை அடைகிறேன்” என்றதாம்.
இதை கேட்ட நாரதர், “ஏதேது… உன்னைவிட உயர்ந்தவன் மேருமலை. விண்ணை தொடும் வரை உயர்ந்திருந்த அவனை நீ பார்த்ததில்லையா?” என்று சொன்னாராம். இதை கேட்டதும், விந்தியராஜன் மேருமலையை விட அதிகம் வளர ஆசைக்கொண்டு மண்ணை ஓம்கார வடிவில் சிவபெருமானாக வடித்து அவரை நினைத்து தவம் இருந்தாராம். சிவபெருமானும் விந்தியராஜன் தவத்தினால் மனம் மகிழ்ந்து அங்கு ஓம்கார வடிவில் தோன்றி விந்தியராஜனின் விந்தியமலைக்கு கேட்ட வரத்தையும் தந்தாராம்.
தொடர்ந்து தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் இங்கேயே வீற்றிருக்கிறார் என சொல்லப்படுகிறது. சிவபெருமானிடம் வரத்தை பெற்ற விந்தியமலை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இங்கு சிவபெருமான் ஓம்காரேஷ்வரராக சிவபுரியிலும், அமரேஷ்வரராக விஷ்ணுபுரியிலும் வீற்றிருக்கிறார்.
மமலேஷ்வரர் சன்னதியில் தினமும் மண் லிங்கங்கள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. நர்மதையின் போக்கில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் அதிக முக்கியத்துவம் பெற்றது. இங்கு பித்ருக்களுக்கு கர்மா செய்வது மிகவும் உகந்தது. இங்கு 5 முக விநாயகர் சன்னதியும் உண்டு.
ஒவ்வொரு நாள் இரவும், அர்த்த ஜாம பூஜை முடிந்ததும், சிவபெருமான் பார்வதி தேவியுடன் இங்கு விளையாட வருவதாக ஐதீகம் உள்ளது.
இக்கோவிலுக்கு அருகே உள்ள காளிகாதேவியின் கோவிலுக்கு அருகில் ஒரு குகை உள்ளது. இதுதான் கோவிந்த பகவத் பாதர் (ஆதி சங்கரரின் குரு) தவம் மேற்கொண்ட இடமாம். இங்கு தான் தன் குருவிடமிருந்து ஆதி சங்கரர் ராஜயோகத்தை கற்றுக்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.