ஆன்மிக தகவல் – தலவிருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

5/5 - (44 votes)

ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு கடவுளின் அம்சத்தைப் பெற்றிருக்கும். அதேப்போல் நிறைய மரங்கள் சாத்வீக சக்திகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் எந்த மரத்தை வளர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு கோயிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும். இந்த தல விருச்சத்தை நீங்கள் கோயிலில் இருக்கும் கடவுளை தரிசித்து வணங்குவது போல, வணங்கினால் கட்டாயம் நற்பலன்கள் கிடைக்கும். அப்படி ஒருசில கோயில்களில் இருக்கக்கூடிய தல விருட்சங்கள் பற்றியும், அதனை நீங்கள் வழிபடுவதின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

 துளசி :

துளசி மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசியிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.

சந்தன மரம் :

சந்தனமரம் மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றது. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.

 அத்தி மரம் :

அத்திமரம் தத்தாத்திரேயின் அம்சமாகும். மஹாவிஷ்ணுவும் இதில் குடியிருப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மன சாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும்.

 மாமரம் :

மாமரம் மஹாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுப காரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது.

 அரச மரம் :

அரச மரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கீழ் தீபம் ஏற்றி வலம் வர புத்திர தோஷம் நீங்கும்.

ஆல மரம் :

ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைக்கூடும்.

 மருதாணி :

மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணை அடியில் வைத்து கொண்டால் கெட்ட கனவுகள் வராது.

ருத்ராட்ச மரம் :

ருத்ராட்ச மரம் சிவனின் அம்சமாகும். ருத்ராட்ச கொட்டையை அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகும்‌. கோபம் குறையும்‌. மனதில் சாந்தம் உண்டாகும்.

 வேப்பமரம் :

வேப்ப மரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தை சுற்றி மஞ்சள், குங்குமம் பூசி மஞ்சள் ஆடையை கட்டி மாலை சூட்டி மரத்தை வலம் வந்து வணங்கினால் சக்தியின் அருள் கிடைக்கும்.

 வில்வ மரம் :

வில்வ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

கடம்ப மரம் :

இந்த கடம்ப மரத்தை நீங்கள் வழிபடுவதன் மூலம் உங்களுக்கு கல்வி அபிவிருத்தி ஏற்படும்.

பலா மரம் :

குற்றால நாதரின் தலவிருட்சமாக அமைந்துள்ளது. இந்த தல விருட்சத்தை நீங்கள் வணங்குவதின் மூலம் உங்களுக்கு இனிய வாழ்வு ஏற்படும்.

மூங்கில் :

இந்த மூங்கில் மரத்தை நீங்கள் வணங்குவதன் மூலம் உங்களுக்கு இசை மற்றும் ஞானம் அதிகளவு கிட்டும்.

செண்பக மரம் :

இந்த செண்பகமரத்தை நீங்கள் வழிபட்டு வந்தீர்கள் என்றால் உங்களுக்கு திருமண யோகம் விரைவில் ஏற்படும். திருமண வரத்தை தரக்கூடிய ஆற்றல் இந்த தல மரத்திற்கு உள்ளது.

இலந்தை மரம் :

இந்த இலந்தை மரத்தை நீங்கள் வணங்குவதின் மூலம் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவதோடு, தீர்க்க சுமங்கலி யோகமும் கிட்டும்.

ஆலயத்திற்கு (Temple) செல்வது இறைவழிப்பாட்டிற்க்கு என்பது முக்கியமான காரணியாக இருந்தாலும், இயற்கையையும் மரத்தை மதிப்பதும் இந்து மத கலாசாரத்தில் பாலோடு நீர் போல் கலந்துவிட்டது. அதன் நோக்கம் மரங்களை தனது சுயநலத்திற்காக மனிதன் அழித்துவிடக்கூடாது என்பதே…  

You may also like...