ஆன்மீகம் : தன்வந்திரி_பகவான்
மக்களைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். அவற்றை தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார். ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன.
திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது.அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு,சக்கரம், அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்! தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவமருத்துவ கடவுள்.
தன்வந்திரி பகவான் ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து காக்கத் தன்வந்திரி பகவான் வழிபாடு ஒன்றே நம்மைக் காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.
தன்வந்திரிபகவான்துதி
// ஓம் நமோ பகவத்தே மகா சுதர்ஷனா வாசுதேவய தன்வந்தரே
அம்ருதா கலசா ஹஸ்தய சர்வ சர்வா வினாசய சர்வ சர்வ ரோகா நிவாரணயா
த்ரி லோக்யா பதய் த்ரி லோக்கியா நிதாயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபா
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆஷத சக்ரா நாராயண ஸ்வாஹா //
பொருள்:
மகாவிஷ்ணுவின் அவதாரமான சுதர்ஷன வாசுதேவ் தன்வந்தரி என்று அழைக்கப்படும் தன்வந்தரி பகவாவனை வணங்குகிறேன்.
நீங்கள் உங்கள் கைகளில் பிடித்துக் கொள்ளுங்கள், அழியாத அமிர்தத்தால் நிரப்பப்பட்ட கலாஷா! கடவுளே, நீங்கள் எல்லா அச்சங்களையும் நோய்களையும் அகற்றவேண்டும்.
நீங்கள் மூன்று உலகங்களையும் பாதுகாக்கின்றீர்கள்; மேலும் நீங்கள் உருவாக்கிய அனைத்து உயிரினங்களுக்கும் நல்வாழ்த்துகள். நீங்கள் ஆயுர்வேத இறைவன், விஷ்ணுவின் சொரூபமானவரே!