எல்லாம் இன்பமயம் – இருக்கு; ஆனா இல்லை..!

Rate this post

எல்லாம் இன்பமயம் இருக்கு; ஆனா இல்லை..!

ஓர் அலுவலகம். அதுலே ஒரு தலைமை அதிகாரி. அவர் ரொம்பவும் உண்மையானவர் … நேர்மையானவர். அலுவலகத்துலே உள்ள ஒவ்வொரு பொருளையும் ரொம்பவும் பத்திரமா பாதுகாத்து வந்தார். மேஜை … நாற்காலி … குப்பைக்கூடை எல்லாம் அந்தந்த இடத்துலே இருக்கான்னு பார்த்துக்குவார். நாற்காலியிலே ஒரு கால் உடைஞ்சிருந்தாலும் அதை உடனே பழுதுபார்த்து சரி செஞ்சுடுவார். அதாவது அவர் எப்படின்னா … அந்த அலுவலகத்துலே உள்ள ஒவ்வொரு பொருளையும் தன்னுடையதா நினைச்சி பாதுகாத்து வந்தார்.

அந்த அதிகாரிக்கு ஒருநாள் திடீர்ன்னு மாற்றல் உத்தரவு வந்தது – Transfer Order.
உடனே என்ன பண்றார்? தன்னுடைய பெட்டி படுக்கையைக் கட்டிக்கிட்டுப் புறப்பட்டுடறார். இப்ப அந்த அலுவலகத்துலே உள்ள மேஜையைப் பற்றியோ, நாற்காலியைப் பற்றியோ அவரு கவலைப்படலே.


அந்த அலுவலகத்துலே இருந்த வரைக்கும் அங்கே இருந்த எல்லா பொருள்களுக்கும் அவரே பொறுப்பு. அதேவிதமா … அவர் எல்லாத்தையும் தன்னுடையதா பாவித்து அக்கறையா கவனிச்சுக்கறார். இதை ‘மாரகம்’ – அப்படின்னு சொல்றாங்க.

அவரை அடுத்த ஊருக்கு மாற்றிய உடனே இது எல்லாம் தன்னுடையதில்லே … சமுதாயத்தைச் சேர்ந்தது … அப்படிங்கற எண்ணம் வந்துடுது. தான் வெறும் ‘பொறுப்பாளி’ மட்டுமே (Custodian) என்கிற எண்ணம் உருவாகுது. இதைக் காப்பாற்றுவது மட்டும்தான் என்னுடைய கடமை என்கிற எண்ணத்தோடு செயல்படறார். இதுவும் ‘மாரகம்’ – தான். ஆனா …. ‘தாரகம்’ -ங்கறது வேறே.

அதே அலுவலர் மாற்றலாகிப் போகும்போது வீட்டிலே உள்ள எல்லாத்தையும் கட்டி மகரயாழ் லாரியிலே ஏத்தறார். பழைய செருப்பு – துடைப்பம் … எதையும் விட்டு வைக்கலே … ! என்ன காரணம்? எல்லாம் என்னுடையது – ங்கற எண்ணம். ஆக … எல்லாம் என்னுடையது -ங்கற எண்ணம் தாரகம். என்னுடையதில்லை -ங்கற எண்ணம் மாரகம்.

இந்தத் ‘தாரகம்’ , ‘மாரகம்’ இரண்டிற்கும் இடையிலே தான் மனித வாழ்க்கை ஊசலாடுகிறது -ங்கறது பெரியவர்கள் ( சாயிபாபா ) கருத்து .

எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கலாம் . ஆனா எதுவும் என்னுடையதில்லை -ங்கற எண்ணம் நமக்கு வரணும். இருக்கிறதெல்லாம் இயற்கை கொடுத்திருக்கிற பிரசாதம். அரசாங்கம் கொடுத்திருந்ததை அந்த அதிகாரி காப்பாற்றினார். பொறுப்புலே இருக்கிற வரைக்கும் இதையெல்லாம் காப்பாற்ற வேண்டியது தனது கடமைன்னு நினைச்சார் அவர்.

போ – ன்னு அடுத்த ஊருக்குப் சொன்னதும் அங்கே இருக்கிற எல்லாத்தையும் உதறிபுட்டுக் கிளம்பிட்டார். இந்த உலகியல் கடமையை ஒரு யோகமாகச் செய்யணும். இந்த உலகத்துலே இருக்கிறவரைக்கும் … என் வீடு … என் மனைவி … என் மக்கள் … இது எல்லாமே இயற்கை அல்லது இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற பிரசாதம் -ன்னு உணரணும். அப்படிப் புரிஞ்சிக்கிட்டு நம்முடைய கடமைகளைச் செய்யணும் .

எல்லாம் என்னுடையது என்கிற ‘மாரகம்’ வந்துடப்புடாது. ஒரு மனிதனுக்கு எது நிரந்தரம்? எதுவரை இருக்கப் போகிறான்? யாருக்கும் தெரியாது. அதனாலே வாழும்வரை கடமையாற்றிக் கொண்டே காலம் கழிக்க வேண்டும். எல்லாம் இயற்கை தந்த வரப்பிரசாதம் என்கிற பாவனையோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

~ தென்கச்சி கோ சுவாமி

You may also like...