சேலத்தில் தக்காளி இலவசம் ‘ஹெல்மெட் வாங்கினால்
சேலத்தில் ஹெல்மெட் ஒன்று வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று விற்பனையாளரின் விளம்பரம் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
கடந்த பல நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.இந்நிலையில் சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த ஹெல்மெட் விற்பனையாளர் முகமது காசிம் அறிவித்த தக்காளி சலுகை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த சலுகை என்ன தெரியுமா? ‘தலைக்கவசமே உயிர் கவசம்’, ‘விவசாயத்தை காப்போம்’ என்பதை வலியுறுத்தி, ‘தலைக்கு ஹெல்மெட் முக்கியம், சமையலுக்கு தக்காளி முக்கியம்’ என சிறப்பு சலுகை அறிவித்துள்ளார்.
இதில் ரூ.349க்கு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக கிடைக்கும். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விற்பனையை நடிகர் பெஞ்சமின் துவக்கி வைத்தார். சேலத்தில் தக்காளி, 100 ரூபாய் வரை விற்கப்படுவதால், ஏராளமானோர் ஹெல்மெட் வாங்கி, தக்காளியை இலவசமாக பெறுகின்றனர்.