ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

Rate this post

“ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்” (hukum tiger ka hukum) – ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில் அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘காவாலா’ கடந்த வாரம் 6ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது சிங்கிள் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக வெளியான போஸ்டரில், பாலைவனம் போன்ற சூழலில் ரஜினிகாந்த் மக்கள் குழுவையும் இரண்டு ஜீப்புகளையும் நோக்கி நடந்து செல்வது போன்று காட்சியிருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பாடலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் ஹுக்கும் டைகர் கா ஹுக்கும் (hukum tiger ka hukum) என சொல்கிறார். இந்த பாடல் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

You may also like...