முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

5/5 - (2 votes)

தினமும் ஒரு கையளவு முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

உடல் ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் நம்மால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உடல் ஆரோக்கியத்திற்கு நாம் நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான உணவுகள் உள்ளன. அதில் பாரம்பரியமாக உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உட்கொள்ளப்பட்டு வந்த ஒரு உணவுப் பொருள் தான் முளைக்கட்டிய பச்சை பயறு.

முளைக்கட்டிய பச்சை பயறை தினமும் உட்கொண்டு வந்தால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். பொதுவாக பயறு வகைகளை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை எளிதில் பெறலாம்.

அதுவும் பச்சை பயறை முளைக்கட்ட வைத்து சாப்பிடும் போது, அதிலிருந்து நார்ச்சத்து மட்டுமின்றி, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.

இதன் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை தடுப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். முக்கியமாக இது ஆரோக்கியமானது மட்டுமின்றி, மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.

வைட்டமின் கே அதிகம் :

முக்கியமாக முளைக்கட்டிய பச்சை பயறில் வைட்டமின் கே அதிகமாக உள்ளன. அதுவும் ஒரு கப் முளைக்கட்டிய பச்சை பயறில் 5.45 mcg வைட்டமின் கே உள்ளன. இது உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை அளிக்கின்றன. உதாரணமாக, தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது மற்றும் இரத்தம் உறையும் அபாயத்தைக் குறைக்கிறது.

இது தவிர இதில் ஆஸ்டியோகால்சின் என்னும் ஆரோக்கியமான எலும்பு திசுக்களை உருவாக்க வைட்டமின் கே-விற்கு தேவைப்படும் ஒரு வகையான புரோட்டீன் உள்ளது. எனவே வயதான காலத்திலும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமானால் முளைக்கட்டிய பச்சை பயறை சாப்பிடுங்கள்.

இதயத்திற்கு நல்லது :

முளைக்கட்டிய பச்சை பயறு இதயத்திற்கு பல வழிகளில் நன்மை அளிக்கிறது. அதில் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, இரத்தக் குழாக்ளில் அடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

செரிமான மண்டலத்திற்கு நல்லது :

முளைக்கட்டிய பச்சை பயறை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், அது பல வழிகளில் வயிற்றுக்கு நன்மை அளிக்கிறது. முக்கியமாக இது குடல் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதன் விளைவாக செரிமானம் மென்மையாக நடந்து, மலச்சிக்கல் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவும் சீராக இருக்கும்.

எலும்புகள் வலுவாகும் :

முளைக்கட்டிய பச்சை பயறை தினமும் உட்கொண்டு வந்தால், எலும்புகள் வலுவாகும். ஏனெனில் இதில் உள்ள சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, மூட்டு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இது தவிர, தசைகளும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும் :

முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் காப்பர் சத்துக்களால் இரத்த சிவப்பணுக்களின் அளவு சரியான அளவில் பராமரிக்கப்பட்டு, உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

எடை குறைய உதவும் :

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு கையளவு முளைக்கட்டிய பச்சை பயறை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு என்பதால், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஸ்நாக்ஸாக முளைக்கட்டிய பச்சை பயறை சாப்பிடலாம். முக்கியமாக இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்யும்.

எனவே இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய முளைக்கட்டிய பச்சை பயிறை தினமும் உட்கொண்டு நீங்களும் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

You may also like...