முழங்கால் மூட்டு வலியால் அவதியா? இந்த சூப்பை குடித்தால் போதும்… வலி பறந்துவிடும்!!

5/5 - (1 vote)

முழங்கால் மூட்டு வலியால் அவதியா? இந்த சூப்பை குடித்தால் போதும்… வலி பறந்துவிடும்!!

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்:

இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார்கள். நம் வீட்டில் யாருக்காவது 2 பேருக்கு மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் இந்த மூட்டு வலியை போக்கும் மிகச் சிறந்த இயற்கை மருந்து முடக்கத்தான் கீரை தான்.

முடக்கத்தான் கீரையில் எண்ணற்ற மருத்துவ பண்புகளை பெற்றுள்ளது. முடக்கத்தான் கீரை சூப் வாரத்திற்கு 2 முறை குடித்து வந்தால் நிச்சயமாக மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சரி மூட்டு வலியை போக்க முடக்கத்தான் கீரை சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

முடக்கத்தான் கீரை200 கிராம்
சீரகம்2 ஸ்பூன்
சாம்பார் வெங்காயம்10
கறிவேப்பிலைதேவைக்கேற்ப
கொத்தமல்லிதேவைக்கேற்ப
மிளகு2 ஸ்பூன்
தக்காளி2
பூண்டு10 பற்கள்
உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து, காம்புகளுடன் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் முடக்கத்தான் கீரை, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

நன்றாக கொதிக்கவிட்டு, அதன் பின்பு வடிக்கட்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை போட்டால் முடக்கத்தான் கீரை சூப் ரெடி. வாரத்திற்கு இரு முறை இந்த சூப்பை குடித்து வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

You may also like...