ராகவா லாரன்ஸ் & எல்வின் புதிய படம்
தம்பி உடையான் படக்கு அஞ்சான்…., ராகவா லாரன்ஸ் & எல்வின் புதிய படம்…,
தமிழ் சினிமா இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘சந்திரமுகி 2’ படத்தை முடித்துள்ளார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கங்கனா ரணாவத், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சகோதரர் எல்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ‘டைரி’ என்ற திகில் படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்குகிறார்.
இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. தற்போது, ராகவா லாரன்ஸ் தனது தம்பியுடன் இணையும் புதிய படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தம்பி அண்ணனை போல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவாரா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.