விஜய்.,புஸ்ஸி ஆனந்த் அதிரடி அறிவிப்பு!!

Rate this post

வரும் 15 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இரவு பாடசாலை திட்டத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஆனால் இது குறித்து விஜய் தற்போது வரை அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இளம் வாக்காளர்களை கவரும் விதமாக 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பாடாக சாலை அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்,

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தளபதி” அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்” ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...