பார்க்கிங் கட்டணம் மட்டும் ரூ.11 லட்சம்.. சென்னை மெட்ரோவை திகைக்க வைத்த தொழிலதிபர்! இவ்வளவு எப்படி
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோ சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொழிலதிபர் ஒருவர் சென்னையில் மெட்ரோ பார்க்கிங் கட்டணம் மட்டும் ரூ. 11.11 லட்சம் செலுத்தியுள்ளார்.
சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு வருகிறது.
கடந்த ஜூன் 23இல் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.
சென்னை மெட்ரோ:
இதற்கிடையே சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோர் வசதிக்காக அங்கே பார்க்கிங் சேவையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் கட்டணமும் கூட சமீபத்தில் தான் உயர்த்தப்பட்டது. முன்பு மெட்டரோ பார்க்கில் வாகனம் நிறுத்த 6 மணி நேரத்திற்கு 10 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் தான் அது 20 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேபோல மாதாந்திர கட்டணமும் 500 ரூபாயாக இருந்த நிலையில், அது 700 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ பார்க்கிங்கிற்கு தொழிலதிபர் ஒருவர் பல லட்ச ரூபாய் வாடகை கொடுத்துள்ளார் தெரியுமா. அது குறித்துப் பார்க்கலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் பார்க்கிங் எப்போதுமே பிரச்சினை தான்.
இப்போது கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் பார்க்கிங் வசதி இருக்கிறது. ஆனால், பழைய வீடுகளில் பெரும்பாலும் பார்க்கிங் இருக்காது. இதனால் சாலைகளிலேயே பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவார்கள்.
21 சொகுசு கார்கள்
சாலை ஓரத்தில் நிறுத்தும் போது வானிலை, பாதுகாப்பு இருக்காது என பல விஷயங்களால் கார்கள் பாதிக்கப்படலாம். இதனால் பணக்காரர்கள் தங்கள் கார்களை பாதுகாப்பாக நிறுத்த இடங்களைத் தேடி அலைந்து சுற்றுவார்கள். அப்படித்தான் சொகுசு மற்றும் பழமையான கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்ட சென்னை தொழிலதிபர் பார்க்கிங்கிற்கு இடமில்லாமல் தேடியுள்ளார். அவரிடம் மொத்தம் 21 சொகுசு மற்றும் அரிய வகை பழமையான கார்கள் இருந்துள்ளது.
இது கடந்த 2019இல் நடந்தது. அப்போது மெட்ரோவில் பார்க்கிங் குறித்துக் கேள்விப்பட்ட அவர், அங்கே கார்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் மெட்ரோ தரப்பிடம் கேட்டுள்ளார். அப்போது மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்த நிலையில், பார்க்கிங்கும் காலியாகவே இருந்தது. இதனால் மெட்ரோ தரப்பும் இவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு காருக்கு மாதம் ஒன்றுக்குச் செலுத்த வேண்டும் என மெட்ரோ தரப்பு சொல்லியுள்ளது.
கார் பார்க்கிங்
கார்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் அவரும் இதை ஒப்புக் கொண்டார். ஷெனாய் நகர் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ நிலைய பார்க்கிங் பகுதிகளில் இவர் தனது கார்களை நிறுத்தியுள்ளார். கொரோனா உள்ளிட்ட காலங்களிலும் கார் பாதுகாப்பாக இருந்துள்ளது. இதனால் தொடர்ந்து அங்கேயே கார்களை விட்டுவிட்டார். இதற்கிடையே சமீப காலங்களாக மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் பயணிகள் மெட்ரோ பார்க்கிங்கை பயன்படுத்துவதும் அதிகரிக்கிறது. இதனால் ஷெனாய் நகர் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மெட்ரோவில் இவரது கார்களை எடுத்துக் கொள்ளுமாறு இப்போது மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் இதுவரை சென்னையில் மெட்ரோ பார்க்கிங் கட்டணம் மட்டும் 11.11 லட்ச ரூபாயை செலுத்தியுள்ளார்.
தனது நிறுவனத்தில் பணிபுரியும் பல ஊழியர்கள் சென்னை மெட்ரோவை தான் பயன்படுத்துவதாகவும் அதைக் கருத்தில் கெண்டாவது பார்க்கிங்கை தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இருப்பினும், மெட்ரோ நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
1 Response
[…] அமைச்சருமான டி.எம்.அன்பரசன் இந்த புதிய செயலியை புதன்கிழமை திறந்து […]