இரு கைகளும் இல்லையென பெற்றோரால் கைவிடப்பட்டு மாணவி +2 தேர்வில் தேர்ச்சி; மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்..!

Student Who Wrote Class XII Exam Without Two Hands
Student Who Wrote Class XII Exam Without Two Hands
Rate this post

இரு கைகளும் இல்லையென பெற்றோரால் கைவிடப்பட்டு மாணவிக்கு பாராட்டுக்கள்: சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை வெளியிட்டார்.

மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 கைகளும் இல்லாத லெட்சுமி என்ற மாணவி, ஆசிரியை உதவியுடன் கடந்த மே மாதம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.

இரு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியை உதவியுடன் தேர்வெழுதிய ஆதரவற்றோர் காப்பகத்தை சேர்ந்த மாணவி லட்சுமி 277 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மாணவி பதிலளிக்க ஆசிரியர் அதை எழுதினார்.

பிறந்தபோதே 2 கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால், பெற்றோர்கள் இவரை பராமரிக்க இயலாமல் கைவிட்டதால், மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் 2 வயது குழந்தையாய் இருந்தபோதிலிருந்து அங்கு வளர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், மாணவி லட்சுமி 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அவர் 277 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிக்கு பாராட்டுக்கள்

இதையடுத்து ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகிகள், காப்பாளர்கள் மாணவி லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*