தற்போது திருவாரூரில் புதிய சுற்றுலா மையமாக உருவாகியுள்ள கலைஞர் கோட்டம்
திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருவாரூரில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள இந்த கலைஞர் கோட்டத்தில் வெள்ளை பளிங்கு கற்களால் ஆன கலைஞர் சிலை, முத்துவேலர் நூலகம், கலைஞர் நினைவுகளை போற்றக்கூடிய பழமையான புகைப்படங்கள், அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், கலைஞர் அடைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை சிறை போன்ற கட்டமைப்புகள், கலைஞர் பயன்படுத்திய கண்ணாடி, பேனா போன்றவற்றை பொதுமக்கள் தொட்டுப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவதற்காக மெய்நிகர் தோற்றம் மேலும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பும் வண்டபங்களும் உள்ளன. கையில் இரண்டு சிறிய திரையரங்குகளும் இங்கு இடம் பெற்றுள்ளன. மேலும் இதே வளாகத்தில் இரண்டு திருமண மண்டபங்களும் உள்ளன.
கலைஞரின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுப்பது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உற்சாகமாக செஃல்பி எடுத்துக்கொள்கின்றனர்.
தினம்தோறும் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும் மாலை 3:00 மணி முதல் மாலை 7:00 மணி வரையிலும் இந்த கலைஞர் கோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. இங்கு பெரியவர்களுக்கு 20 ரூபாயும், குழந்தைகள் மற்றும் சிறியவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.