தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா – திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு விருது

Rate this post

திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு விருது: மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறந்த ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

மாநில மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் அருண் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதலமைச்சர் வெளியிட்டார்.

பின்னர் நடைபெற்ற விழாவில், ஆட்சியர்கள், எஸ்.பிக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.

Read Cricket News on www.ipl.ae

மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டது ஆகியவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு விருது

அதன்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

திருவாரூர் தற்போதைய ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மிகவும் திறமையும் துடிப்பும் மிக்க ஐஏஎஸ் அதிகாரியாக மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் அவ்ரகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

You may also like...

1 Response

  1. 24/01/2023

    […] மிகப்பெரிய தியாகராஜர் கோயில் திருவாரூர் தியாகராஜர் […]