Good Bad Ugly BGM GV Prakash
Good Bad Ugly BGM GV Prakash

அஜித் ரசிகர்களுக்கு ஜி.வி. பிரகாஷ் கொடுத்த டபுள் ட்ரீட்

5/5 (10)

அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி பிரகாஷ் படத்தை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவு அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மறுபக்கம் அனிருத் விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் பற்றி பதிவிட்டுள்ளார்

அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையில் வெளியாகவுள்ளது. கடைசியாக 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு படமும் இதுவரை வெளியாகவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் வெளியாகவுள்ளன. இதில் முதலில் அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் காம்போவில் உருவாகும் குட் பேட் அக்லி ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாக இருக்கின்றது.

முதலில் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருப்பதாக தெரிகின்றது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது குட் பேட் அக்லி படத்தை பற்றி ஜி.வி பிரகாஷ் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் celebration of life மாதிரி ஒரு பாடலுக்கு டான்ஸ் ஷூட் பண்ணா எப்படி இருக்கும் ? செமையா இருக்கும்ல என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து விடாமுயற்சி படத்திற்கு இசையமைக்கும் அனிருத் அப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இவ்வாறு அஜித்தின் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு அப்டேட்ஸ் வெளியாகியிருக்கிறது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் படங்கள் வெளியாகாத நிலையில் அவர்கள் மிகவும் ஏக்கத்துடன் இருந்து வந்தனர்.

ஆனால் தற்போது அடுத்தடுத்து ஐந்து மாதங்களில் இரண்டு படங்கள் வெளியாக இருப்பதாலும், அடுத்தடுத்த அறிவிப்புகளாலும் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் ஒருபக்கம் விடாமுயற்சி மறுபக்கம் குட் பேட் அக்லி என அடுத்தடுத்து இரண்டு அப்டேட்ஸ் அஜித் ரசிகர்களுக்கு காத்துகொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2 Comments

Comments are closed