தற்போது இதன் ஃப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. 30 கிராபிக்ஸ் டிஸைனர்கள் இந்தப் படத்துக்காக பணிபுரிகின்றனர். பிப்ரவரி 3 சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படம் குறித்த புதிய அறிவிப்பு அல்லது போஸ்டர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த, ‘மாநாடு’ படம் வெற்றி பெற்றதை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ படங்களில் நடித்தார் சிம்பு. அந்த படங்களும் சிம்புவிற்கு தொடர் வெற்றிகளை கொடுத்தது.
சிம்பு அடுத்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர். இந்நிலையில் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. சிம்புவின் 48வது படமான இது பீரியட் ஆக்ஷன் கதையைக் கொண்ட படம் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாகவும், சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதில் முற்றிலும் வித்தியாசமான இருவேடங்களில் சிம்பு நடிக்கிறார். இந்தப் படமும் கைவிடப்பட்டதாக வதந்தி கிளம்பிய நிலையில், இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்க உள்ளதாக ராஜ் கமல் அலுவலக வட்டாரம் கூறுகிறது.
தற்போது இதன் ஃப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. 30 கிராபிக்ஸ் டிஸைனர்கள் இந்தப் படத்துக்காக பணிபுரிகின்றனர். பிப்ரவரி 3 சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படம் குறித்த புதிய அறிவிப்பு அல்லது போஸ்டர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் எஸ்டிஆர் 48 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க பூஜா ஹெக்டே கமிட்டாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் ஏற்கனவே தமிழில் முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.