காலையில் வீட்டில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? தினமும் காலையில் சைடு டிஷ் முடிவு செய்வதே பெரிய வேலையா இருக்கா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரே சட்னியை செய்தால் மிகவும் குறைவாகவே சாப்பிடுகிறார்களா? இன்று நீங்கள் இதுவரை செய்திராத ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் காரைக்குடி கார சட்னியை செய்யுங்கள். இந்த கார சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் டக்கென்று ஒரு சட்னி செய்ய நினைத்தால், இந்த சட்னியை செய்யலாம். அந்த அளவில் ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு காரைக்குடி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
Ingredient | Quantity |
---|---|
Garlic (பூண்டு) | 10-15 cloves (10-15 பல்) |
Tamarind (புளி) | Size of a small lemon (சிறு எலுமிச்சை அளவு) |
Green chili (வரமிளகாய்) | 5 |
Shallots (சின்ன வெங்காயம்) | 20 |
Tomato (தக்காளி) | 2 |
Salt (உப்பு) | To taste (சுவைக்கேற்ப) |
Oil (எண்ணெய்) | 1 tablespoon |
Mustard seeds (கடுகு) | 1 teaspoon |
Curry leaves (கறிவேப்பிலை) | 1 bunch |
Water (தண்ணீர்) | 1 cup |
செய்முறை
- முதலில் மிக்சர் ஜாரில் 10-15 பல் பூண்டு, புளி, 4-5 வரமிளகாய் மற்றும் 20 சின்ன வெங்காயத்தை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்பு அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின் மிக்சர் ஜாரில் நன்கு கனிந்த 2 தக்காளியை துண்டுகளாக்கி போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு வாணலியில் உள்ள வெங்காயத்துடன் அரைத்த தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான காரைக்குடி கார சட்னி தயார்.