மாண்டஸ் புயல் பெயர்: ‘மேன்-டஸ்’ பெயர் அர்த்தம், ஏன்? எப்படி உச்சரிப்பது?
மாண்டஸ் என்ற பெயர் ஏன்?
மாண்டஸ் புயல் பெயர்: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா இடையே நாளை கரையை கடக்க இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலுக்கு மாண்டாஸ் (Cyclone Mandous)
இந்த புயலுக்கு மாண்டாஸ் (Cyclone Mandous) என பெயரிடப்பட்டுள்ளது.
புயல் எதிரொலியாக 8ம் தேதி, 09 மற்றும் 10ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகப்பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியள்ள இந்த புயலுக்கு மாண்டஸ் (Cyclone Mandous) என்ற பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்திருந்தது.
உலக வானிலை மையத்தின் தலைவராக இருப்பவர் அப்துல்லா அல் மாண்டஸ். இவர் ஐக்கிய அரபு நாடுகளை (UAE) சேர்ந்தவர். இவரது பெயரில் உள்ள மாண்டஸ் என்ற பெயரைத்தான் அந்த நாடு புயலுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. ஐக்கிய அரபுகள் நாட்டில் பிறந்த அப்துல்லா அல் மாண்டஸ் 1989 இல் அறிவியலில் பட்டப்படிப்பு முடித்தவர் அவர் அமெரிக்காவில் உள்ள செயிண்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தில் வானிலையியல் பிரிவில் பட்டம் பெற்றவர். பின்னர் அதே துறையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் படித்தார். 2012 ஆம் ஆண்டு செர்பியாவில் உள்ள பெர்கிரேட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்துள்ளார்.
மாண்டஸ் புயல் பெயர் வைப்பு
உலக வானிலை மையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் புயல்களுக்கு பெயர்களை பரிந்துரைத்து வருகிறது. அந்த வகையில் வெப்ப மண்டல புயல்களுக்கு பெயர் வைக்கும் குழுவில் வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் ஏமன் ஆகிய 13 நாடுகள் உள்ளன. அவரை 13 பெயர்களை பரிந்துரைக்கும். ஆக மொத்தம் 169 பெயர்கள் அகர வரிசையாக வைக்கப்படும். இதுதான் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையாகும்.
மாண்டஸ் புயல் பெயர் அர்த்தம்
‘மேன்-டஸ்’: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக வானிலை அமைப்பின் (WMO) உறுப்பினர் என்ற பெயரைக் கொடுத்தது. அரபு மொழியில், இந்த வார்த்தைக்கு ‘புதையல் பெட்டி’ என்று பொருள்.
‘மேன்-டஸ்’ எப்படி உச்சரிக்க வேண்டும்
Cyclone Mandous: நெருங்கி வரும் புயலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) என பெயரிட்டுள்ளது. ‘மேன்-டஸ்’ என்று உச்சரிக்கப்படுகிறது.
நிசர்கா
அந்த வகையில் நிசர்கா, கடி, நிவர், புரேவிஸ தாக்டே, யாஸ், குலாப், ஷாஹீன், ஜவாத், அசானி ஆகிய பெயர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது முதல் செட்டில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஏமன் முறையே பரிந்துரைத்த மாண்டஸ் மற்றும் மோச்சா ஆகிய இரு பெயர்கள் மட்டுமே பாக்கி உள்ளன. வைத்த பெயர்கள் மீண்டும் வைக்கப்படாத வகையில் உலக வானிலை மையம் பெயர்களை அறிவிப்பதற்கு முன்பாக நன்கு சோதனை செய்துவிட்டே அறிவிக்கிறது.
புயல் நிலவரம்
மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவே நீடித்து வந்த நிலையில் தற்போது புயலாக வலுவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் நேற்று மாலை நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கில், 700 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் தமிழக வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
டிசம்பர் 8 ஆம் தேதி
அதாவது இன்று டிசம்பர் 8 ஆம் தேதி காலை தமிழகம் – புதுவை மற்றும் அதனையொட்டி உள்ள தெற்கு ஆந்திர பிரதேசம் பகுதிகளை வந்தடைந்தது. இதனால் வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திராவில் 8ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுவை, ஆந்திரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை 9 ஆம் தேதி முதல் காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும்.
புயல் எதிரொலியாக 09 மற்றும் 10ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகப்பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 ஆம் தேதி நிலவரம்
‘மாண்டஸ்’ புயல், இன்று இரவுக்கு பின், தமிழக – ஆந்திர எல்லையில் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மாண்டூஸ் புயல் இன்று இரவு தமிழகத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.