விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள், கூட்டத்திற்கு தலைமையேற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

5/5 - (1 vote)

விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் 28 July 2022: திருவாரூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ விவசாயிகள்‌. குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்‌.,இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது…

திருவாரூர்‌ மாவட்டத்தில்‌ ஜுலை-2022 மாத இயல்பான மழையளவு 72.74 மி.மீ. ஆகும்‌.

நடப்பாண்டில்‌ ஜுலை மாதத்தில்‌ 80.41 மி.மீ மழை பெறப்பட்டது. 27.07.2022 அன்று மேட்டூர்‌ அணையின்‌ நீர்‌ மட்டம்‌ 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 23,950 கன அடி நீர்‌ வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 24,714 கன அடி நீ்‌ வெளியேற்றப்படுகிறது.

திருவாரூர்‌ மாவட்டத்தில்‌ விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள்:

குறுவை பருவத்தில்‌ 60,000 ஏக்கரிலும்‌, சம்பா மற்றும்‌
தாளடி பருவத்தில்‌ 1,46,500 வெறக்டேரிலும்‌, கோடை சாகுபடி 9,500 எக்டேரில்‌ ஆக மொத்தம்‌ 1,92,000 எக்டேரில்‌ சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதில்‌ குறுவை பருவத்தில்‌ 33,605 ஏக்கரில்‌ நேரடி நெல்‌ விதைப்பு முறையிலும்‌, 79,128 ஏக்கரில்‌ செம்மை நெல்‌ சாகுபடி முறையிலும்‌, 23,355 ஏக்கரில்‌ சாதாரண நெல்‌ நடவு முறையிலும்‌, 79,128 ஏக்கரில்‌ செம்மை நெல்‌ சாகுபடி முறையிலும்‌, 23,355 ஏக்கரில்‌ சாதாரண நெல்‌ நடவு முறையிலும்‌ ஆக மொத்தம்‌ 1,36,088 ஏக்கரில்‌ குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, 28,912 ஏக்கரில்‌ குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்‌, குறுவை சாகுபடிக்கு தேவையான நாற்றாங்கால்‌, செம்மை நெல்‌ சாகுபடி
முறையில்‌ 791.3 ஏக்கரிலும்‌, சாதாரண நடவு முறையில்‌ 2,335.5 ஏக்கரிலும்‌ இருப்பு உள்ளது. மேலும்‌, 490.2. ஏக்கரில்‌ குறுவை சாகுபடிக்கு தேவையான நாற்றாங்கால்‌
எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின்‌ கிசான்‌ சம்மான்‌ நிதி திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைய, விவசாயிகள்‌ தங்கள்‌
ஆதார்‌ விபரங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ நிலம்‌ உள்ள
விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம்‌ ஆண்டிற்கு ரூ.6000
வேளாண்‌ இடுபொருட்கள்‌ வாங்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ, மாவட்டத்தில்‌ 58 ஆயிரத்து 973 விவசாயிகள்‌ பயனடைந்து
வருகின்றனர்‌. இதுவரை, 11 தவணைகள்‌ வழங்கப்பட்டூள்ளன. இத்திட்டத்தில்‌ ஆதார்‌
அடிப்படையிலான நிதிவிடூவிப்பு நடைபெறுவதால்‌, தகுதியான விவசாயிகள்‌ தங்கள்‌ வங்கிக்‌ கணக்கு எண்ணுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்க 111 181571 வலைதளத்தில்‌ 6-1470-ஐ பதிவேற்றம்‌ செய்வது அவசியமாகிறது.

எனவே வரும்‌ ஆகஸ்ட்‌ 2022 முதல்‌ நவம்பர்‌ 2022 வரையுள்ள காலத்துக்கான, 12-வது தவணையை பெற தங்கள்‌ ஆதார்‌ விபரங்களை உறுதி செய்தல்‌ வேண்டும்‌.

ஆதார்‌ எண்ணுடன்‌ மொபைல்‌ எண்ணை இணைத்துள்ள விவசாயிகள்‌
www.pmkisan.gov.in என்ற வலைதளத்தில்‌ தங்களின்‌ ஆதார்‌ எண்‌ விபரத்தை
பதிவிட்டால்‌, அதில்‌ ஓடி.பி, எண்‌ மொபைலுக்கு வரும்‌. அதை பதிவு செய்தால்‌ விபரங்கள்‌
சரிபார்க்கப்படும்‌.

இதுவரை ஆதார்‌ எண்ணுடன்‌ மொபைல்‌ போன்‌ எண்ணை இணைக்காதவர்கள்‌, உடனடியாக இணைத்து, விரல்‌ ரேகைகளை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்‌.

பி.எம்‌.கிசான்‌ திட்ட வலைதளத்தில்‌ விவசாயிகள்‌ ஆதார்‌ விபரங்களை ஜுலை 31ஆம்‌
தேதிக்குள்‌ பதிவேற்றம்‌ செய்தால்‌ மட்டூமே, திட்டத்தின்‌ கீழ்‌ பதிவு செய்த விவசாயிகளுக்கு 12-வது தவணை விடூவிக்கப்படம்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்‌.,இ.ஆ.ப அவர்கள்‌ தெரிவித்தார்‌.

You may also like...