தந்தையர் தின வாழ்த்துக்கள்

5/5 - (1 vote)

தந்தையர் தினம் ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 19, 2022: தந்தையர் தின வாழ்த்துக்கள் ஏன்? இந்த வருடம் தந்தையர் தினம் ஜூன் 19 ஆம் தேதி. அப்பா அனைத்து தந்தையற்கும் தந்தையர் தின வாழ்த்துகள். சமீபத்துல டான் படம் வெளியான போது அதிகம் புழங்கிய வார்த்தை Toxic Parenting. சமுத்திரகனி ஒரு தந்தை யா ஆரம்பத்துலருந்து தன் மகன் சிவகார்த்திகேயன் ட்ட கடுகடு னு இருப்பாப்ள. தன்னோட வாழ்நாள் முழுக்க தன் பையன்ட்ட சிரிச்சு பேசுன நிமிடங்கள் கூட இருக்காது!

ஆனா கடைசியா ஒரு கட்டத்துல தன்னோட ஏக்கங்கள் ஆதங்கங்கள மகன் கொட்டித் தீர்த்த பிறகு அந்த சோகம் தாங்காம இறந்து போயிருவாப்ள…தன்னோட அம்மா ப்ளாஷ்பேக் போய் அப்பா ஒழிச்சு வச்சுருந்த பாச குடோன அவிழ்த்த பிறகு தான் இறந்து கிடக்குற அப்பா வோட வெடித்த பாதங்கள பார்த்து இவ்ளோ காலம் நமக்காக உழச்சே தந்தையோட பாதங்கள் இப்டி இருக்கே னு உடஞ்சு அழுவாப்ள சிவா…..

இந்த மாதிரி இறுக்கமான தந்தை மகன் உறவுகள மையமா வச்சு வெளிவந்த “எம்டன் மகன்”,”சந்தோஷ் சுப்ரமணியம்” மாதிரியான படங்களுக்கும் டான் க்கும் பெரிய வித்தியாசம் உண்டு…..

எம் மகன்,சந்தோஷ் சுப்ரமணியம் ல லாம் ரிங் மாஸ்டர் தந்தைகள் தங்களது தவற உணர்ந்து திருந்துற மாதிரி எடுத்துருப்பாங்க….ஆனா டான் ல இதெல்லாம் உனக்காக தான் அப்பா செஞ்சார் னு Toxic parenting அ Glorify பண்ணி இதய தெய்வமாக்கி,அந்த மகன குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிடுவாய்ங்க….

எப்போதுமே பிள்ளைகளோட சேர்ந்து நாமளும் வளரனும்…அப்போ தான் அவங்க காலத்துல இருக்க பிரச்சினைகள புரிஞ்சு அவங்களுக்கு தேவப்படுற அரவணைப்ப கொடுக்க முடியும்….நான் இப்டி கண்டிப்போட இருந்தா தான் அவன் ஒழுங்கா வளர்வான்/ள் னு நினச்சா அது முட்டாள்த்தனம்….நீங்க காட்டும் கண்டிப்பும், கடுகடுப்பும் வாழ்க்கை மீதான ஒவ்வாமையை கொடுத்து விடும்…

பயந்தே வளர்ந்த பிள்ளை வெளி உலகை காண்கையில் மிரண்டு துவளவும் வாய்ப்புண்டு,அல்லது அப்பா ங்கிற ரிங் மாஸ்டர் இங்க இல்லயே னு இது வரைக்கும் வாளாத வாழ்வ வாழ நினச்சு வரம்புகள் இல்லாம சிதைந்து போகவும் வாய்ப்புண்டு….Parenting ரொம்ப முக்கியம் பிகிலு…..

இப்போ ஏன் இத பத்தி எழுதுறேன் னா “என்னோட தகப்பனுக்கு தந்தையர் தின வாழ்த்து சொல்லலாம்” னு தான்…..முந்துன பத்திகள் ல சொன்ன அந்த சீன் லாம் இங்க இல்ல ங்குற மாதிரியான Parenting என் தந்தையோடது….

ஒரு தந்தை யா அவங்க கொடுத்த Comfort Zone இந்த உலகத்துல நான் தடுமாறாம இருக்க நிறையவே உதவிருக்கு….உனக்காக இத செஞ்சேன்,அத செஞ்சேன் னு லாம் அனுதாப அலை ல பிள்ளைகளின் மனதை வெல்வது சிறந்த வளர்ப்பு முறை இல்லை…..யார் என்ன பத்தி என்ன சொன்னாலும் அவன் அப்டி செஞ்சுருக்க மாட்டான் னு பட்டுனு சொல்ற ஒரு தந்தை தான் என் தந்தை…

நண்பனுக்கு நண்பனா வும் மறைமுகமான ஒரு கடிவாளம் மூலமா நம்மள கட்டுக்குள்ள வச்சுக்குற மாஸ்டராவும் தான் இதுவரை வாழ்ந்துருக்காங்க….தனி மனிதனாகவும் சிறந்த குணநலன்கள் கொண்ட மனிதர்

தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா!!! தந்தையர் தின வாழ்த்து கவிதைகள்! மனம் கவர்ந்த தந்தைக்கு நீங்களும் சொல்லலாம்!

Mohamed Abbas Abs (அப்பாஸி )

You may also like...

1 Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *