பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) 2020-21
பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) 2020-21-ன் கீழ் திருவாரூர்
மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு (General Category) 40% மானியமும் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (Scheduled Caste)
60% மானியமும் கூடிய புதிய திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. அதன் விவரம்
பின்வருமாறு,
— Collector Thiruvarur (@CollectorTVR) December 16, 2022
நீரினை மறுசுழற்சி முறையில் சிறிய அளவிலான தொட்டிகள் அமைத்து நன்னீர்
மீன்வளர்ப்பு செய்தல் திட்டத்திற்கு (RecirculatoryAqua Culture System-RAS) 2 அலகு
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அலகு ஒன்றிற்கு ஒப்பளிக்கப்பட்ட தொகை ரூ7,50,000-ல்
பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு (General Category) 40% மானியமாக ரூ.3,00,000/-
தொகையும், ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (Scheduled Caste) 60% மானியமாக
ரூ4,50,000/- தொகையும் வழங்கப்படும்.
மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் மற்றும்
நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கேற்றவாறு திட்டவழிகாட்டு நெறிமுறைகளின்படி முழுமையாக
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்கும் பயனாளிகளில் முதலில் வரும்
விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு
தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு கடந்த 2018-19-லிருந்து 2020-21 ஆண்டு வரை
உள்ள கால கட்டத்தில் மத்திய/மாநில அரசிடமிருந்து மானியம் பெற்ற மீன் வளர்ப்பு
விவசாயிகள் இம்மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலினத்தை
சார்ந்த பயனாளிகளிடமிருந்து இத்திட்டத்திற்கு உரிய விண்ணப்பம் பெறப்படாததால்
இத்திட்டத்தினை செயல்படுத்த இயலவில்லை.
எனவே, இத்திட்டத்தை செயல்படுத்தி பயன்பெற விருப்பமுள்ள பட்டியல் இனத்தை சார்ந்த பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் 210-213 2-வது தளம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டிடம், திருவாரூர். தொலைபேசி எண்.04366 – 290420
அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து
உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 26.12.2022-க்குள் திருவாரூர் மீன்வளம்
மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்கலாம்.