சென்னை:கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலவச சிற்றுந்து வசதி சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தகவல்

5/5 - (2 votes)

இந்தியா – ஆஸ்திரேலியா-இலவச சிற்றுந்து வசதி

செய்தி வெளியீடு எண்: 36/2023|நாள்: 21.03.2023|பத்திரிக்கை செய்தி

கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலவச சிற்றுந்து வசதி சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தகவல். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இலவச சிற்றுந்து வசதியை இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இலவச சிற்றுந்து சேவை நாளை 11:00 மணி ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:-
இந்தியா – ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள். இதற்காகவே சென்னை மெட்ரோ இரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை வசதியை நாளை காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும்வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது.

22-03-2023, அன்று மட்டும் மெட்ரோ இரயில் சேவை நெரிசல்மிகு நேரமான
மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உள்ள நெரிசல்மிகு நேரத்தை
இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், சென்னை மெட்ரோ இரயில் வாகனநிறுத்தும் இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னை பெருநகர மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும், பொதுமக்களும், மெட்ரோ இரயில் நிர்வாகம் செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.


வெளியீடு: இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை – 600 035.

You may also like...