Hibiscus Tea Health Benefits
Hibiscus Tea Health Benefits

மன அழுத்தம் முதல் உடல் பருமன் வரை பல நோய்க்கு மருந்தாகும் செம்பருத்தி டீ

5/5 (11)

ஆரோக்கியத்திற்கு அற்புத நலன்களை வழங்கும் பல வகையான டீ வகைகளை பற்றி பலரும் அறிந்திருக்க கூடும். ஆனால் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகயும் இருக்கும் செம்பருத்தி டீ பற்றி தெரியுமா…

செம்பருத்தி டீ, ஆக்சிஜனேற்ற பண்புகள் உட்பட பல மருத்துவ குணங்கள் அடங்கியது. கலோரி மற்றும் காஃபின் இல்லாத, மிகச் சிறந்த மூலிகை டீ இது. செம்பருத்தி பூ முதுமையை விரட்டி இளமையை தக்க வைத்துக் கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல், அதன் மருத்துவ குணங்கள் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செம்பருத்தியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் காணப்படுகின்றன. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கவும் மற்றும் பல கடுமையான நோய்களில் (Health Tips) இருந்து விடுபடவும் இதனை உட்கொள்ளலாம்.

செம்பருத்தி டீ குடிப்பதால் கிடைக்கும் பல விதமான நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தி

செம்பருத்தியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பண்புகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது. தொண்டை புண் போன்ற பொதுவான குளிர்கால தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.

மன அழுத்தம்

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த செம்பருத்தி டீ, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், மன சோர்வை நீக்கவும் செம்பருத்தி உதவுகிறது.

உடல் பருமன்

செம்பருத்தி டீ வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இதனால், அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இதனை வழக்கமாக உட்கொள்வது, எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம்.

கூந்தல் ஆரோக்கியம்

செம்பருத்தி கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். அதே போன்று செம்பருத்தி டீ அருந்துவதால், முடி உதிர்வு பிரச்சினை குறைவதோடு மட்டுமல்லாமல், கூந்தல் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும்.

தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு

செம்பருத்தியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பராசிடிக் கூறுகள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பல வகையான உடல் தொற்றுகளைத் தடுக்கும்.

செரிமான பிரச்சனைகள்

செம்பருத்தி டீ, செரிமான அமைப்பை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அமிலத்தன்மை அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

செம்பருத்தி டீ தயாரிப்பது எப்படி?

செம்பருத்தி தேநீர் தயாரிப்பது எளிது, இதற்கு முதலில் புதிய அல்லது உலர்ந்த செம்பருத்தி பூக்களை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து குறைந்தது 10 நிமிடம் கொதிக்க விடவும். அதன் பிறகு, அதை வடிகட்டி, அதில் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் செம்பருத்தி தேநீர் மட்டுமே குடிக்கவும். இதனை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

1 Comment

Comments are closed