மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதில் உள்ள சந்தேகங்களும் அதற்க்கான பதில்களும்

5/5 - (11 votes)

Tamil Nadu, October 3, 2023: தமிழகத்தில் இலவச மின்சாரம் மானிய மின்சாரம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. ஆதார் இணைப்பதில் உள்ள சந்தேகங்களும், பதில்களும்…

மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது

மேலும் ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  இருந்தும் நுகர்வோர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகின்றது இதனால் பலர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க முன்வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.   

👉வாடகை வீட்டில் உள்ளவர்கள் ஆதாரை வாடகைக்கு உள்ள  வீட்டின் மின் இணைப்போடு இணைக்க வேண்டுமா?  

👉ஆதார் இணைத்த பிறகு வாடகைதாரர் வேறு வீட்டிற்க்கு மாறிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?  

👉மின் இணைப்புடன் வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால் மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?  

👉எனது, தந்தை/ தாய்/ தாத்தா/ பாட்டி ஆகியோர் பெயரில் மின் இணைப்பு உள்ளது ஆனால் அவர்கள் இறந்துவிட்டார்கள் நான் எப்படி ஆதாரை இணைப்பது?

👉நான் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது?

👉ஆதார் எண்ணை இணைத்தால் தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?

👉நான் கடை வைத்துள்ளேன் அதன் மின் இணைப்போடு ஆதார் இணைக்க வேண்டுமா

👉ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?

👉மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி?   

பல்வேறு சந்தேகள் ஏற்படுகின்றது உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்க்கான பதில்களும்

ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி முழு விவரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்

👉வாடகை வீட்டில் உள்ளவர்கள் ஆதாரை வாடகைக்கு உள்ள  வீட்டின் மின் இணைப்போடு இணைக்க வேண்டுமா?

வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ள நீங்கள் ஆதார் கார்டை மின் இணைப்புடன் பதிவு செய்துகொள்ள முடியும்.    

👉ஆதார் இணைத்த பிறகு வாடகைதாரர் வேறு வீட்டிற்க்கு மாறிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

வாடகைதாரர் மாறும் போது, புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதாரை இணைக்கலாம்.    

👉மின் இணைப்புடன் வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால் மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?

கண்டிப்பாக மாறாது ,  வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும்.     👉எனது, தந்தை/ தாய்/ தாத்தா/ பாட்டி ஆகியோர் பெயரில் மின் இணைப்பு உள்ளது ஆனால் அவர்கள் இறந்துவிட்டார்கள் நான் எப்படி ஆதாரை இணைப்பது?     இறந்தவர்களின் பெயரில் மின் இணைப்பு இருந்தால், மின் இணைப்பு எண்ணை யார் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறார்களோ..அவர்களது ஆதார் எண்ணை இணைக்கலாம்  

👉நான் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது?

உங்கள் ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்க முடியும். அதனால், எந்தப் பாதிப்பும் இல்லை.   ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி முழு விவரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்  

👉ஆதார் எண்ணை இணைத்தால் தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?

ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும்.  

👉நான் கடை வைத்துள்ளேன் அதன் மின் இணைப்போடு ஆதார் இணைக்க வேண்டுமா / வேண்டாம்?

வீடு,  விசைத்தறி,  விவசாயம்  மற்றும் குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.   

👉ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?

கண்டிப்பாக இல்லை ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்பது வதந்தி யாரும் நம்பவேண்டாம்.  

👉மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி?  

ஆன்லைன் மூலம் நீங்கள் இணைக்கலாம்   அல்லது மின் அலுவலகத்தில் சென்றும் இணைத்துக்கொள்ளல்லாம்   மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக டிசம்பர் 31 ஆம் தேதி வரை  சிறப்பு முகாம்கள் நடைபெறும்  நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி முழு விவரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

https://nsc.tnebltd.gov.in/adharupload

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதில் உள்ள சந்தேகங்களும் அதற்க்கான பதில்களும், முழு விவரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *