அவுட் ஆஃப் ஃபார்ம் விராட் கோலி & சச்சின்: சீக்கிரமா அந்த ஒத்த செஞ்சுரி
அவுட் ஆஃப் ஃபார்ம் விராட் கோலி & சச்சின்: சச்சின் தன் வசம் வைத்திருக்கும் 100 செஞ்சுரி எனும் சாதனையை அநாயசமாக முறியடித்து விட்டு கடந்து செல்லக்கூடிய சாத்தியமுள்ள ஒரே வீரனாக விராட் கோலியை தான் அநேகரும் நினைத்திருந்தோம்…
ஆனால் “அவுட் ஆஃப் ஃபார்ம் விராட் கோலி” குறுக்க வந்து கால தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
சச்சினுக்கும் கூட 2005-2006 கால கட்டங்கள் சரியானதாக அமைந்து விடவில்லை… அவ்ளோ தான் முடிஞ்சுது ஏன் பாரமா இருக்கனும் அணி ல னுலாம் அப்போ இருந்த பெருசுகள் பேசிக்கொண்டது நினைவிலுண்டு.
அவ்வபோது வந்து போகும் டென்னிஸ் எல்போ பிரச்சினைகளால் வரும் இடைவேளைகள் னு சில மோசமான காலகட்டங்கள் உண்டு ஆனால் 2007க்கு பிறகு ரிட்டையர் ஆகும் வரை சச்சின் செய்த சாதனைகள் ஏராளம்
2008 C.B சீரீஸ் பைனல்ஸ் ல ஆஸ்திரேலியாக்கு எதிரா ஆடிய ஆட்டம்லாம் காலத்துக்கும் நின்னு பேசும்.
2011 உலக கோப்பை ஃபார்ம் – ஒருநாள் போட்டிகள்ல முதல் இரட்டை சதம் னு நிறைய சாதனைகள் வந்து சேர்ந்தன.
சச்சினின் 100 சதங்கள் எனும் சாதனை விராட் கோலியால் எளிதில் கடந்து விட கூடியது னு தான் நினச்சோம்…ஆனா அது அவ்ளோ சாதாரணமானதல்ல…
அவுட் ஆஃப் ஃபார்ம்” எனும் பிணி இவனையும் விட்டு வைக்கவில்லை. ஆனா செஞ்சுரி தான் அடிக்கலை யே தவிர ரன் அடிக்காம இல்ல.
2019 இறுதிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் செஞ்சுரி வராத காலங்களிலும் கூட சிறந்த வீரர்களுக்கு இணையான சராசரியை வைத்திருக்கிறான்.
2019 இறுதிக்கு பிறகு விராட்டிடம் இருந்து அந்த பிணி தீர்க்கும் ஒற்றை செஞ்சுரி மட்டும் தான் வந்தபாடில்லை…கிட்டத்தட்ட 70 செஞ்சுரிகள் அடித்திருந்த போது இருவரின் வயதும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் விராட் கோலி தற்போது தேங்கி நிற்கிறான்….
ஏற்கெனவே அவசர கதியில் கேப்டன் பதவிகள் விராட்டிடமிருந்து வில(க்)கி சென்றிருக்கும் நிலையில் ஒரு ப்ளேயராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டாலொழிய அந்த 100 செஞ்சுரி எனும் மகுடத்தை அணிய முடியும் இந்த அரசன்.
சச்சினின் காலம் போல் அல்லாமல் தற்போது நிறைய இளசுகள் காலியிடங்களை நிரப்ப காத்துக்கொண்டிருக்கின்றன்….
சீக்கிரமா அந்த ஒத்த செஞ்சுரி ய அடிச்சுட்டு டாப் கியர் ல அடிச்சு கிளம்பு ராசா. நாங்க பார்த்து வியந்த ரன் மெஷினாவே அரியணையிலிருந்தும் இறங்கி செல்…
அன்புடன் அப்பாஸி
1 Response
[…] இழக்காமல் இருந்தால் நீங்கள் சச்சின் டெண்டுல்கர் […]