ஜன கண மன! Jana Gana Mana (2022) Movie!
சமீபகாலமா இந்த Pan India படம் எதுங்குற போட்டிகளும்,வியாபாரத்தில் எது சிறந்ததுங்குற கலந்துரையாடல்களும் நம்மள பெருமளவில் ஆட்கொண்டு விட்டது….சமீபத்துல விக்ரம் பார்த்துட்டு வெளில வந்த பசங்கள்ட்ட யூட்யூப் சேனல்கள் எடுத்த பேட்டிகள் ல “KGF” மாதிரியான Pan India படங்கள் லாம் நம்மள்ட இருந்து கிடைக்காதோ னு நினச்சோம்..,ஆனா லோகேஷ் அந்த ஏக்கத்த போக்கிட்டார் னு அவர்கள் ஆரவாரமிட்டத பார்க்க முடிஞ்சது….
இந்த வசூல் ரீதியான கமர்ஷியல் படங்கள், போட்டிகள் பத்திலாம் நாம சண்ட போட்டுக்குறது தேவையில்லாத ஆணி…வசூல் பிரச்சினைகள் லாம் இல்லாம அமேசான் OTT ல வந்து கடும் விவாதங்களை உண்டாக்கிய “ஜெய் பீம்” கூட நம்ம தமிழ் சினிமா வோட உலக தரமான சம்பவம் தான்…கமர்ஷியல் தாண்டி குறைந்தபட்ச அறத்துடன் எடுக்கப்படும் மக்களுக்கான எந்த படமும் நாம் பெருமைபட்டுக்கொள்ள வேண்டிய படைப்புகள் தான்….அத்தகைய படைப்பாளிகள் இங்கு அநேகம்….அது தான் நமக்கான அடையாளமும் கூட….
அந்த வகைல பார்த்தா மலையாள சினிமா தனி ரகம் தான் ….பெரும்பாலும் எந்த விதமான பூச்சுகளும் இல்லாமல் நம் வாழ்விற்கு நெருக்கமாக நின்று இயல்பை பேசும் படைப்புகள்,நம் சுயத்தை கேள்வி கேட்கும் படைப்புகள் னு வந்து கொண்டே இருக்கின்றன….
“ஜன கண மன” திரைப்படம் சமீபத்தில் Netflix OTT தளத்தில் வெளியாகியுள்ள மலையாள திரைப்படம்….தமிழிலும் உள்ளது…
நேர்கொண்ட பார்வை மாதிரியான கோர்ட் ரூம் டிராமா தான்…அதில் குறிப்பிட்ட ஒற்றை விஷயம் பேசப்பட்டிருக்கும்,ஆனால் இந்த படம் நிகழ் காலத்தில் நிகழ்ந்தேறும் அத்தனை அநீதிகளையும் தொட்டு அடித்திருக்கிறது….
கல்லூரி பேராசிரியை யாக இருக்கும் சபா மரியம்(மம்தா மோகன்தாஸ்) என்பவர் இரவில் சாலை ஓரத்தில் எரித்துக்கொள்ளப்படுகிறார்…மறுநாள் அனைத்து ஊடகங்களிலும் அந்த செய்தி ஆக்கிரமிக்கிறது….அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும்,முன்பு நிகழ்ந்தவைகளும் நீதிமன்ற அறையினுள் அவிழ்க்கப்படுவது தான் திரைக்கதை….
ப்ருத்விராஜின் வழக்காடும் கர்ஜனையும்,உடல் மொழியும்,வார்த்தைகளும் நம்முள் அத்தனை அநீதிகளின் சாரத்தையும் உள் செலுத்தி உலுக்குகிறது….
ACP சஜ்ஜனாக வரும் சூரஜ் அவர்களின் நடிப்பு தான் இந்த படத்தின் அச்சாணி…Great Indian Kitchen படத்தில் ஆணாதிக்க சமூகத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக வந்து பல பெண்களின் சாபங்களை வாங்கி கொண்ட மனிதர் அவர் ….இந்த படத்திலும் போலிஸ் அதிகாரியாக கனக்கச்சிதமாக பொறுந்தி போகிறார்…பெரிதாக எந்த உணர்வுகளையும் பொது வெளியில் வெளிக்காட்டிக் கொள்ளாத அதிகாரியாக தனித்து தெரிகிறார்…
**ரோஹித் வெமுலா,IIT MADRAS ஃபாத்திமா லத்தீப் போன்றோறின் Institutional Murders
**சமீபத்துல அம்பலமான ஹைதராபாத் போலி என்கவுன்ட்டர் கேஸ்
**Stereotyping Of Individuals Based on Race,religion,caste etc.,etc.,(இவனா இவன் இத செஞ்சுருப்பான் ங்கிற முன்முடிவுகளோட அனுகுதல்)
**ஃபாஸிஸ மத வெறுப்பரசியல்
போன்ற ஏகப்பட்ட நிகழ்கால கொடுமைகள் அனைத்தும் பேசப்பட்டு,நமக்குள்ளும் பல கேள்விகளையும்,விடைகளையும் கொடுத்திருக்கிறது இந்த படம்….
அவ்வபோது இது போன்ற படங்கள் வெளிவந்து நம் தேசத்தின் கூட்டு மனசாட்சியை அசைத்து பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்…
தவற விடாம பார்த்துருங்க
As a college professor’s brutal murder sparks student unrest, a cop launches an investigation while a lawyer seeks justice in the the courtroom.
Movie | Information |
Movie Name | Jana Gana Mana (2022) |
IMDB Rating | 8.4/10 |
Director | Dijo Jose Antony |
Actor | Prithviraj Sukumaran Suraj Venjaramoodu Mamta Mohandas |
Budget/Box Office | Budget: 10 Crore Box office: est.₹50 crore |
LLC information for Sharjah, Dubai & Abu Dhabi | Order Plant on Plantsouq.com
4 Responses
[…] the film will stream in multiple languages like Tamil (original) and dubbed versions in Telugu, Malayalam, Kannada, and […]
[…] Genre: Drama […]
[…] ‘பொன்னியின் செல்வன்‘ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த […]
[…] (National Geographic) சேனல் இந்த புகைப்படத்தை 2013 ஆம் ஆண்டின் […]