கற்றது தகுதி: நம்ம வாழ்க்கை முன்னேற நம்மதான் முயற்சி செய்யணும்
கற்றது தகுதி: படிப்பில் ஆர்வமும் விளையாட்டில் சுறுசுறுப்பும் உள்ளவள்தான் ” கற்கி “. அவளுக்கு சிறுவயதில் இருந்தே ” மித்ரா ” என்ற நெருங்கிய தோழி உண்டு. இருவரும் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கின்றனர். இருவருமே 12ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள். இருவருமே மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள்தான். விளையாட்டு படிப்பில் மட்டும் தோழிகள் என்பது இல்லாமல், எப்போதும் ஒருவருக்கொருவர் குடும்பத்தில் நடக்கும் நல்ல செய்திகளை பரிமாறி சந்தோசம் கொள்வதும், குடும்பத்தில் நடக்கும் கஷடங்களை சொல்லி ஆறுதல் அடைவதும் உண்டு.
மித்ரா, கற்கி என இருவரும் இணை பிரியா தோழிகள் என்றாலும், மித்ராவுக்கு கற்கியை தவிர்த்து தோழிகளின் எண்ணிக்கை அதிகம். கற்கிக்கு வகுப்பறையில் அவளை சுற்றி பலர் இருந்தாலும், கற்கிக்கு மித்ரா ஒருவளே தோழி, காரணம்
மித்ரா அருகில் இருந்தால் எல்லாமே தனக்கு இருப்பது போல் உணர்ந்து கொள்வாள். படிப்பில் இருவருமே சமம் என்றாலும் மித்ராவை அனைவருக்கும் பிடிக்கும், அனைத்து ஆசிரியர்களுக்கும் பிடிக்கும் ..!
அவளுக்கு எப்போதும் எங்கு சென்றாலும் தனி மரியாதை உண்டு அவளும் எதார்த்தமாக அனைவரிடமும் பேசுவாள், தன் தோழியை அனைவரும் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்ற சந்தோசமும் கற்கிக்கு எப்போதும் உண்டு ..! தன் தோழி அடையும் சந்தோசம், வெற்றி என எதையும் பின்னால் இருந்து ரசித்து கொண்டு இருப்பாள்…! படிப்பிலும் சர, குடும்ப வேலையிலும் சரி.. அத்தியாசிய பண உதவியிலும் சரி .. மனகஸ்டத்திலும் சரி ..என மித்ராவும் தன் தோழிக்கு என்ன உதவி தேவையோ அதை எப்போதும் உடன் இருந்து குடுத்து கொண்டேதான் இருப்பாள்.. மித்ராவுக்கு தெரியும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் தன் தோழி கற்கி, வேறு யாரிடமும் இது போல் எதையும் எதிர் பார்க்க மாட்டாள் என்று ..!
பள்ளி வாழ்க்கை முடிந்தது ..! 12ம் வகுப்பு இறுதி தேர்வில் இருவரும் நன்றாக படித்து 1030 என்ற நல்ல மதிப்பெண்களை ஒரே போல் எடுத்தனர். பள்ளி வாழ்க்கையை போல் இருவரும் கல்லூரியிலும் ஒன்றாக படிக்க நினைத்தனர்.. ஆனால் நினைத்த கல்லூரியில் அப்பிளிகேசனை குடுத்தாலும் அங்கு அரசு கோட்டாவில் குறைந்த செலவில் படிக்கும் சீட்டு குறைவாக இருப்பதால் கிடைப்பது
சந்தேகம் என்று மித்ரா வெளியில் விசாரித்ததை வைத்து கூறினாள், அதனால் கல்லூரியில் ரெக்கமன்டேசன் மூலம் போனால் குறைந்த செலவில் படிக்கும் கோட்டா கண்டிப்பாக கிடைக்கும் என்றும் கற்கியிடம் மித்ரா கூறினாள். குடும்பத்தில் அதிக பணம் செலுத்தி கல்லூரியில் படிக்கவைக்க பணவசதியும் கிடையாது,மேற்படிப்பு படிக்கவும் ஆசை, அதனால் கவெர்மென்ட் கோட்டாவில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் கற்கி, ஆனால் வெளியில் யாரிடமும் பேசி பழக்கம் இல்லாததால் ரெகமன்டேசன் சம்மந்தமாக யாரிடமும் நேராக போய் பேச தயக்கம் கொண்டு தன் அதிக மதிப்பெண்ணை மட்டும் நம்பி எந்த வித முயற்சியையும் எடுக்காமல் இருந்துவிட்டாள் கற்கி …!
மித்ரா தனது ஊரில் உள்ள எம்.ல்.ஏ வை நேராக பார்த்து கல்லூரி சீட்டு சமந்தமாக ரெகமன்டேசன் லெட்டரும் வாங்கி கல்லூரியிலும் குடுத்து விட்டாள்…! இறுதியில் கல்லூரியில் மித்ராவுக்கே அரசு கோட்டாவில் சீட்டு கிடைத்தது, அதே மதிப்பெண்களை எடுத்த கற்கிக்கு சீட்டு கிடைக்கவில்லை…!
“12ம் வகுப்பில் அவளை மட்டும் நல்ல மதிப்பெண்களை எடுக்க சொல் அவளை நான் கல்லூரியில் சேர்த்து விடுகிறேன்” என்று கற்கியின் அம்மா அப்பாவிடம் சொன்ன அவளுடைய உறவினர்களும் ஒரு முயற்சியையும் எடுத்து அவளுக்கு உதவி செய்யவில்லை. அப்படி உதவி செய்ய நினைத்த உறவினர்களின் முயற்சியும் எடுபட வில்லை..!
தனியார் கல்லூரியில் படித்தால் செமஸ்ட்டர்க்கு 4 மடங்கு பீஸ் கட்ட வேண்டியது வருமே என்றும் அதிகமதிப்பெண்களை எடுத்து விட்டால் தனியாரில் படிக்க அவசியம் இல்லை , படிப்பிற்கு பீஸ்ம் அதிகம் கட்ட தேவை இல்லை . குடும்பமும் தன்னை படிக்க வைக்க பணரீதியாக கஷ்டபடாது என்று எல்லாம் மனக்கோட்டை கட்டி இருந்தால் …. இவள் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு காரணமும் அதுதான்.. அது மட்டும் தான் ..!
ஒரே மதிப்பெண் எடுத்தும் தோழியுடன் படிக்க முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தமும், அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும்.., நம்மளுடைய உறவினர்கள் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை வீணாக போனதும், அரசு கோட்டாவில் குறைந்த செலவில் படிக்க முடியாமலும் போய்டே என்ற வருத்தமும் அதிகமாகி மிகுந்த மனஉளைச்சல்க்கு ஆளானாள் கற்கி..! கஷ்டப்பட்டாள், அழுதாள் தேம்பி தேம்பி ..!
இறுதியில் வேறு வழிகள் இல்லாமல் அவளது குடும்பத்தினர், தனியார் கல்லூரியில் பீஸ் அதிகம் கட்டி சேர்த்தனர் ..!
அவளுடைய ஊரில் மட்டும் இல்லாமல் பல ஊர்களில் இருந்து வந்து அவளுடன் படித்து கொண்டு இருந்தனர் . முதல் முறையாக தன்னுடைய தோழி மித்ரா உடன் இல்லாமல் படிப்பின் வாழ்க்கையை தொடங்குகிறாள் கற்கி. கல்லூரி ஆரம்பித்து முதல் 6 மாதங்களுக்கு தன்னுடைய தோழி உடன் இல்லாததால் தனிமையை உணர்ந்தாள் கற்கி..! அவள் உடன் இல்லாமல் எந்த ஒரு முடிவையும் அவளால் எடுக்க முடியவில்லை.. காரணம் அவளை சார்ந்து மட்டுமே இத்தனை வருடங்கள் அவள் இருந்ததால். அதை அவள் முழுமையாக உணர்ந்தாள், வழக்கம் போல் அங்கும் நன்கு படித்தும் நல்ல பெயர் இல்லை .. அவள் நன்கு படிப்பாள் என்ற வார்த்தையை தவிர ..! அவளுடன் இப்போது படித்த யாருமே இவளுக்கு மேல் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து வரவில்லை ..! அவளுக்கு அப்போது படிப்பில் அதிக மதிப்பெண்கள் மேல் உள்ள நம்பிக்கையை போய் விட்டது..! அதிக மதிப்பெண் எடுத்தும் சரியான ஒரு இடத்தில் நாம் இல்லையே என்ற எண்ணமும் அவளுக்கு வந்தது..! அவளுக்கு அந்த தாழ்வு மனப்பான்மை கொஞ்சம் கூட குறைய வில்லை படித்த படிப்பிற்கு “படிப்பாள்”
என்ற அங்கீகாரம் தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை, உறவினர்களும் சரியான நேரத்தில் கை கொடுக்கவில்லை, நல்ல மதிப்பெண்களுக்கும் அதற்குரிய தகுதி இல்லை, இது போல் மனதில் பல அவளுக்கு யோசனைகள் வந்து கொண்டே இருந்தது …!
இறுதியில் உணர்ந்தாள் ” படிப்பு மட்டுமே நம் வாழ்க்கையை உயர்த்தாது என்றும் ..! யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்றும் ..! நம்ம முன்னேறணும்னா நம்மதான் ஓடனும் என்றும் உணர்ந்து .. தான் செய்த தவறுகளை எல்லாம் மாற்ற முடிவு செய்தாள் கற்கி …! இதுவரை அமைதியாக இருந்த அவள் கல்லூரியில் தனது வகுப்பில் எல்லோரிடமும் பேச ஆரம்பித்தாள் ..! உடன் படித்த அனைவரிடமும் பேசும் போதும், அனைவரிடமும் நிறைய பழக்கங்கள் இருந்தாலும், அவள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் நற்பண்புகளை தனது வாழ்க்கைக்கு எடுத்து கொண்டாள்..! இதுவரை படிப்பில் மட்டும் கவனம் காட்டிய கற்கி . படிப்பில் தேர்வு பெற்றால் போதும் என்ற எண்ணத்திற்கு வந்தாள். கல்லூரியில் நடக்கும் சிறப்பு திறன்கள் சம்பந்தமான அனைத்து போட்டிகளிலும் தனக்கு அந்த திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதில் பங்கேற்க்க ஆரம்பித்தாள் ..!
மேடை ஏறும் போதெல்லாம் அங்கு திறமையை சரியாக வெளிப்படுத்தாமல் கீழே கை தட்டுபோவர்களிடம் நிறையாக கேலி கிண்டல்களுக்கு ஆளானாள் ..!
ஆனால் அவள் எதையும் தன் மனதிற்கு கொண்டு செல்லவில்லை . நடக்கும் ஒவ்வொரு விசயத்தையும் அவள் தனக்கு கிடைத்த நல்ல அனுபவமாக நினைத்து ஏற்று கொண்டாள்..! பல முறை தனக்கு கேலி கிண்டல் வந்து ஆளான கற்கிக்கு ஒரு சில மாதங்களுக்கு பிறகு மேடை பேச்சில் அவளுக்கு கைதட்டல் கிடைக்க ஆரம்பித்தது.. அதற்க்கு பிறகு மேடை பேச்சி என்றாலே ” கற்கி ” தான் என்று அனைவராலும் பேச படும் அளவுக்கு உயர சென்று விட்டாள் கற்கி. மூன்று வருடங்கள் கடந்தது ..கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வந்தது.. புரிந்துபடிக்க தெரிஞ்ச கற்கிக்கு அணைத்து செமஸ்டர்களிலும் அதிக மதிப்பெண்கள் இல்லாவிட்டாலும் எதிலும் தேர்ச்சி பெறாமல் இருந்தது இல்லை ..! இறுதி மாதத்தில் கல்லூரியில் பேங்க் வேலைக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆள் எடுக்க கேம்பஸ் இன்டெர்வியூ நடந்தது ..! அதில் அவள் கல்லூரியில் படிக்கும் தருணத்தில் மேடை ஏறி பேசும் போது தனக்கு கீழ் உக்காந்து அவளை கிண்டல் செய்த யாரும் தேர்ச்சி பெற முடியவில்லை.
அவள் உடன் படித்து அவளை விட அதிக மதிப்பெண் எடுத்த யாரும் தேர்ச்சி பெற முடியவில்லை காரணம் இன்டெர்வியூயில் ஒரு பகுதியான குரூப் டிஸ்கஷனில் சரியாக செயல் படாததால்..! இன்டெர்வியூல் கல்லூரியில் இருந்து கலந்து கொண்டவர்கள் 750 பேர்கள் ..! அதில் தேர்ந்தெடுத்தது 75 பேர்கள்.. அதில் தேர்ந்தெடுத்த முதல் ஆள் ” கற்கி”
அவளுடைய தோழி மித்ராவும் அவள் கல்லூரியில் நடைபெற்ற கேம்பஸ்இன்டெர்வியூல் நல்ல வேலைக்கு தேர்ந்தெடுக்க பட்டாள்..! தன்னை கஷ்டபட்டு படிக்க வைத்த குடும்பத்தை தனக்கு கிடைத்த வேலையின் மூலம் இருவருமே முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றனர்..!
Read More Cricket News on www.ipl.ae
கற்றது தகுதி: இருவருமே வாழ்க்கையையும் வென்றனர் ..! படிப்பு மட்டும் நம் வாழ்க்கையை உயர்த்தாது ..! படிப்பு நம் வாழ்க்கையில் முன்னேற ஒரு தகுதிதானே தவிர படிப்பு மட்டுமே வழி இல்லை ..! ஆனால் பெற்ற அனுபவங்கள் என்றைக்கும் நமக்கு ஒரு பாடமே ..! என்னதான் நெறையா பேரு நம்மளோட வாழ்க்கையில நம்ம கூட பயணம் செஞ்சாலும் .. நம்ம வாழ்க்கை முன்னேற நம்மதான் முயற்சி செய்யணும் ..!
கற்றது தகுதி என்றால்.. பெற்றது அனுபவம் என்னும் சொத்து. கற்றது தகுதி