திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் | இன்று (24.7.2022)
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்: திருவாரூர் மாவட்டத்தில் இன்று (24.07.2022) 400 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்றினை கட்டூப்படூத்த மாண்புமிகு
தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை
எடூத்துவருகிறார்கள்.
இன்றைய தடுப்பூசி போடும் இடங்கள் | Thiruvarur, Tamil Nadu, India
அதனடிப்படையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த தடிப்பூீசி ஒன்றே தீர்வாக உள்ளது. எனவே, நம்மையும், நமது சமுதாயத்தையும் பாதுகாத்து கொள்ள தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இம்முகாமில் 12 வயதிற்குமேற்பட்டவர்களில் இதுநாள் வரை கொரோனா
தடுப்பூசி எடூத்துக்கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி
கொண்டு இரண்டாம் தவணைதடுப்பூசி தகுதியேற்புநாள் கொண்டவர்கள்
இரண்டாம் தவணைதடுப்பூசி போட்டூக்கொள்ளவும்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (24.7.2022) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.
— Collector Thiruvarur (@CollectorTVR) July 23, 2022
கொரோனாவிலிருந்து நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் #Collectorthiruvarur pic.twitter.com/QuSDs1bPBJ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவர்களின் ஆணைக்கிணங்க
முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்குமேற்பட்ட இணை நோய்
உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை ஊக்குவிப்புதவணை கொரோனா
தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
Check out the list of Village in Thiruvarur
அனைத்து முன்களப்பணியாளர்கள் மற்றும் இணை நோய் கொண்டுள்ள 60
வயதிற்குமேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில்
6 மாதங்கள் கடந்தவர்கள் இந்ததடூப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை
ஊக்குவிப்புதவணை கொரோனா தடுப்பூசி செலுத்துகொள்ளுமாறு கேட்டூக் கொள்ளப்படுகிறது.
Check out the List of Taluk in Thiruvarur
பொதுமக்களுக்கு எந்தவிதசிரமமின்றி எளிதில் அணுக கூடியஅளவிலும்,
மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயும், இந்த கொரோனா தடுப்பூசி
முகாம்கள்.
Time: காலை 7:00 மணிமுதல் இரவு 7:00 மணிவரை நடைபெறவுள்ளது.
அந்தவகையில், 24.7.2022 (ஞாயிற்றுக்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில்,
- ஊராட்சி பகுதிகளில் 242 இடங்களிலும்,
- நகராட்சிகளில் 40 இடங்களிலும்,
- பேரூராட்சிகளில் 18 இடங்களிலும்,
- 50 அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும்,
- 8 அரசு மருத்துவமனைகளிலும்,
- திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
- நடமாடும் கொரோனா தடுப்பூசிகுழு 40 என
மொத்தம் 400 இடங்களில் கொரோனா தடிப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.