ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணி, அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு: மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. Senthil Balaji அவர்கள் மின் கட்டண வசூல் மையத்தில் நடைபெற்று வரும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்கள்.
முகாம்கள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. டிசம்பர் 31ஆம் தேதிவரை அதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன. பண்டிகை நாட்களை தவிர அதாவது ஞாயிற்று கிழமைகள் உட்பட அனைத்து தினங்களிலும் பிரிவு அலுவலகங்களில் ஆதார் எண்ணை
இணைப்பதற்கான பணிகள் நடைபெறும், எனவே, பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொண்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை செய்து கொள்ளலாம்.
பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வளைதளங்களில் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் உண்மைக்கு மாறாக கருத்துக்கள் பகிரப்படு கின்றன. அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரமாக இருந்தாலும் சரி கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரமாக இருந்தாலும் சரி, விவசாய மின் இணைப்பாக ஒருந்தாலும் சரி ஏற்கனவே, அரசு நடைமுறையில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறதோ, இலவச மின் திட்டங்கள் மற்றும் அரசு வழங்கக்கூடிய மானியங்கள் அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்படும். அதே
நடைமுறையில் தான் இருக்கும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
TNEB Website Link to Upload Aadhaar: https://nsc.tnebltd.gov.in/adharupload/
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கின்ற பொழுது அரசு வழங்கும் இலவச மின் திட்டங்கள், அரசு வழங்கக்கூடிய மானியங்கள் ரத்தாகிவிடும் என்ற உண்மைக்கு மாறான தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இலவச மின்சாரம் உள்ளிட்ட அரசு மானியம் வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுூத்தப்படும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் என்பது எவ்வளவு பேர் சொந்த வீட்டில் குடியிருக்கிறார்கள் மற்றும் எவ்வளவு பேர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள், ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்பு ஒருக்கிறது
மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.@V_Senthilbalaji அவர்கள் மின் கட்டண வசூல் மையத்தில் நடைபெற்று வரும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்கள். 1/2#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/24sZfIDjFB
— TN DIPR (@TNDIPRNEWS) November 28, 2022
எந்தவிதமான தரவுகளும் மின் வாரியத்தில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகளில் 115 கோடி மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் இருந்தன. மின்சார வாரியத்தை மேம்படுத்தும் பொருட்டு புதிய தொழில்நுட் பத்திற்கேற்ப நவீனமயமாக்குவதற்காக மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
எந்தந்த இடங்களில் எவ்வளவு மின் உற்பத்தி செய்கிறோம், எவ்வளவு கொள்முதல் செய்கிறோம், எவ்வளவு கணக்கீடு செய்கிறோம், எவ்வளவு மீதம் இருக்கிறது என்பதை அறிந்தால் தான் இழப்பீடுகள் கணக்கிட முடியும். அதன் மூலம் நவீனமயமாக்கல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற
நடைமுறைகளை செயல்படுத்தினால் மட்டுமே இழப்பீடுகளை குறைக்கமுடியம்.
ஒருவர் எத்தனை மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் சரி அவர்களுக்கு ஏற்கனவே வழங்கக்கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
இந்த மாதமோ அல்லது டிசம்பர் மாதமோ மின் கட்டணம் செலுத்துவதில் எந்த பாதிப்பும் இல்லை. ஒருவேளை முன்னோர்கள் இறந்திருந்தால் அவர்கள் பெயரில் உள்ள மின் இணைப்பை உரிய
ஆவணங்கள் அளித்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்து கொள்ள இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் ஆதார் எண்ணுடன் இணைத்துள்ள அலைப்பேசி எண்ணிற்கான அலைப்பேசியை கையோடு கொண்டு வரும்போது அந்த எண்ணில் வரும் ஓ.டி.பி எண்ணை உடனடியாக தெரிவித்து பணியினை விரைவாக முடித்துக் கொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுவத்துவதற்கு தனிக் கவுண்டர்களும், கூடுதல் வசதியாக ஆதார் எண்ணை இணைப்பதற்கு
தனிக் கவுண்டர்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைக்கும் சர்வர் வேகத்தை துரிதப்படுத்த உரிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு நெட்வொர்க் பிரச்சனைகள் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும்.
டிசப்பர் 31 ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசரமின்றி பொறுமையாகவே பதிவு செய்துக் கொள்ளலாம். ஆதார். எண்ணை இணைத்தவுடன் உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட நுகர்வோர்க்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
அமைச்சர் ஆய்வு: மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் நடந்து வரும் செயல்முறைகளை ஆய்வு செய்தார்.
இவ்வாறு, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9