இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை (நவ.30) திருவாரூர் நீலக்குடியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் மற்றும் மத்திய பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வருகை தருகிறார்.
நவ.30ஆம் தேதி இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அங்கு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதோடு திரவுபதி முர்மு, சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ( CUTN ) திருவாரூரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். பேராசிரியர் எம். கிருஷ்ணன் இந்த மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.
முன்னதாக, இரண்டு நாள் பயணமாக கடந்த ஆண்டு தமிழகம் வந்த திரெளபதி முர்மு, சென்னை உத்தண்டியில் உள்ள கடல் சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரின் தமிழகம் வருகையையொட்டி, திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தவுள்ளனர்.