பாபர் மசூதி தினத்தையொட்டி ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே போலீசார் ரயில்களில் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் நினைவு கூறுவதை முன்னிட்டு இன்று எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வந்த விரைவு ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதை முன்னிட்டு, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.
இதுதவிர, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களிலும், போலீசார் சோதனை நடத்தினர். ரயில்களில் வந்த பயணிகளின் உடமைகளும் கடும் சோனைக்கு உட்படுத்தப்பட்டன.