திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8வது வார்டு காந்தி முதலியார் நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்தப் பணியை நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகரமன்ற பொறியாளர் நகராட்சி பணியாளர்கள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பூங்காக்களில் புல் தரைகள், பாறை, மண், மரங்களைக் காணலாம்; தவிரவும் கட்டிடங்களும் நினைவுச் சின்னங்கள், நீரூற்றுக்கள் போன்ற கட்டமைப்புக்களும் விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்படலாம். பல பெரிய பூங்காக்களில் கால்பந்து, அடிபந்தாட்டம், கால்பந்தாட்டம் போன்றவையும் கூடைப் பந்தாட்டம் போன்றவற்றிற்கான கட்டமைப்புக்களும் இருக்கும். உடற்பயிற்சி கூடங்களும் நடைப்பயிற்சி தடங்களும் மிதிச்சக்கர வண்டித்தடங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.