ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் நள்ளிரவு முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் சற்று குறைந்துள்ளது. முன்னதாக மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நெருங்கி வந்த நிலையில் தற்போது அதன் வேகத்தை குறைத்துள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்க அதன் வேகம் மேலும் குறையும் எனவும் இதனால் புயல் மெதுவாக நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் தற்போது மேற்கு வட மேற்கு திசையில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து 190 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
முன்னதாக ஃபெஞ்சல் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. மேலும் இன்று பிற்பகல் பெஞ்சல் புயல் இன்று பிற்பகல் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. ஆனால் ஃபெஞ்சல் புயல் நகரும் வேகத்தை பொறுத்து அது கரையை கடக்கும் நேரம் தாமதமாகும் என்றும் வானிலை மையம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் தற்போது ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் இடமும் மாறி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஃபெஞ்சல் புயல் சென்னை – புதுச்சேரி இடையே மரக்காணம் அருகே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. முன்னதாக காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் இடத்தை மாற்றியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் இடம் மாறி இருப்பதால் கடலூர் பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். வழக்கமாக கடலூர் மாவட்டம் புயல் தாக்குதல்களில் சிக்கும். இம்முறையும் ஃபெஞ்சல் புயலால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தற்போது புயல் கரையேரம் திசை மாறி இருப்பதால் கடலூர் மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
மரக்காணம் அருகே புயல் கரையை கடக்கும் என்பதால் அப்பகுதியில் கடல்சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள மீனவர்களும் தங்களின் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஃபெஞ்சல் புயல் மரக்காணம் அருகே கரைய கடக்க உள்ள நிலையில் அதன் தாக்கம் புதுச்சேரியிலும் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Comments are closed