Polling stations glowing pink
Polling stations glowing pink

பிங்க் நிறத்தில் பளபளக்கும் வாக்குச்சாவடிகள்! PINK பூத்களின் ஸ்பெஷல் என்ன?

5/5 (5)

நாளை லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்காக சென்னையில் பிங்க் நிற வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிங்க் நிற வாக்குச்சாவடிகள் எதற்காக? அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம். லோக்சபா தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை நடைபெறுகிறது.
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குகளைச் செலுத்தலாம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி ஓட்டு போடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 16 இடங்களில் பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ஒரு பிங்க் நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிங்க் நிற வாக்குசாவடிகளில் உள்ள அனைத்து அலுவலர்களும், போலீசாரும் பெண்களாக மட்டுமே இருப்பார்கள்.

இந்த பிங்க் வாக்குச்சாவடி மையங்களில் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பிங்க் நிற வாக்குச்சாவடி மையத்தின் முக்கிய அம்சங்கள்: பிங்க் நிற பூத்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே.

கோடை வெயிலில், பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிங்க் பூத்களில் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு அனைவரும் வாக்களிக்கலாம்.

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

    Comments are closed