உடல் சூட்டை தணிக்கும், சத்துக்கள் நிறைந்த நுங்கு ஃப்ரூட் சாலட்
நுங்கு ஃப்ரூட் சாலட்: வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க நுங்கு. இன்று நுங்கு ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் – நுங்கு சாலட்:
நுங்கு – 6 (பனங்காய்)
சுகர் லைட் (அல்லது) தேன் – தேவையான அளவு
பால் – 2 கப் (நன்கு காய்ச்சி ஆரவைத்தது)
ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை:
- பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். நுங்கின் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நுங்கை போட்டு அதில் பால், சுகர் லைட் (அ) தேன் சேர்க்கவும்.
- கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து ப்ரிஜ்ஜில் வைத்து 1 மணி நேரம் கழித்து சாப்பிட நன்றாக இருக்கும்.
- வெயிலுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.
நுங்கு ஃப்ரூட் சாலட் Benefitst
பனை நுங்கில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளெக்ஸ், சி ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், பொட்டாசியம் ஆகிய தாது உப்புகள் இருக்கின்றன. வைட்டமின்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வியர்வை காரணமாக நாம் இழக்கிற மினரல்களை சோடியமும் பொட்டாசியமும் ஈடுகட்டும். அதனால் சன் ஸ்ட்ரோக்கிலிருந்து நாம் தப்பிக்கலாம்.
வெயில் காலத்தில் நீர்ச்சத்து இழப்பு காரணமாக நிறைய பேருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நுங்கில் இருக்கிற அதிகப்படியான நீர்த்தன்மை நம் உடலின் நீரிழப்பை ஈடுகட்டுகிறது. அதே நேரம் இதில் இருக்கிற பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.
நுங்கின் தோல் வெயிலால் வருகிற சருமப் பிரச்னைகளைச் சரி செய்யும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு வேளை 4 அல்லது 5 நுங்கு மட்டும் சாப்பிட்டு டயட் இருக்கலாம்.