பிரதோஷம் என்றாலே விசேஷமானது தான். அதிலும் ஒவ்வொரு நாளில் வரக் கூடிய பிரதோஷம் அந்த நாளுக்குரிய விசேஷத்தையும் சேர்த்து தரும். அந்த வகையில் தை மாதம் செவ்வாய்க்கிழமையில் வளர்பிறை உடன் வரும் பிரதோஷம் நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமையானது அங்காரகாரகன் முருகப்பெருமான் ஆகியோருக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. கடன் தொல்லைகள் தீர்க்க வழிபடக் கூடிய நன்னாளாகவும் இந்த செவ்வாய்க்கிழமை அமைந்துள்ளது.இந்த பிரதோஷ தினத்தை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தடைப்பட்ட காரியம் நடக்க பிரதோஷ வழிபாடு ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்களோ ஆசைகளும் இருக்கும். அதை நிறைவேற்றுவதற்காக தான் அவர்களுடைய ஒவ்வொரு நாள் உழைப்பும் தேடலுமாக இருக்கும். ஆனால் இது அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடாது.
ஒரு சிலருக்கு எந்த காரியங்களும் அவ்வளவு எளிதில் நடந்தும் விடாது. அது போன்ற காரிய தடைகளை நீக்கவும் இந்த பிரதோஷ வழிபாடு துணை புரியும். நீண்ட நாட்கள் நினைத்தும் நடக்க முடியாத காரியங்களை நடத்திக் கொள்ளவும், வீட்டில் மங்கள காரியங்கள் தடைபட்டிருந்தால் அந்த தடை நீங்கி மங்கள காரியங்கள் சிறப்பாக நடைபெறவும் இந்த பிரதோஷ வழிபாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது நந்தி பகவானுக்கு ஒரே ஒரு பொருளை அபிஷேகத்துக்கு வாங்கித் தருவதுதான்.
பிரதோஷ வேளையிலே நந்தி பகவானுக்கு விசேஷமான அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடைபெறும். பிரதோஷ வழிபாடு நந்தி பகவானுடைய வேண்டுதலுக்கு உருவானது தான் என்ற புராண கதைகளும் உண்டு. ஆகையால் இந்த பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவருக்கு முக்கிய பங்கு உண்டு.
அத்தகைய முக்கியமான நந்தி தேவருக்கு பிரதோஷ வேளையில் நடக்கும் அபிஷேகத்தின் போது ஒரே ஒரு இளநீரை நீங்கள் வாங்கிக் கொடுத்தாலே போதும். நந்தி பகவான் எந்த அளவுக்கு மனம் குளிர்ந்து அபிஷேகத்தை ஏற்றுக் கொள்கிறாரோ, அந்த அளவிற்கு சிவபெருமானுடைய மனதும் குளிரும்.
இதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் இருப்பது வரை இருந்த தடைகள் நீங்கி வெற்றிகள் அமையும். குடும்பத்தில் இருந்து இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். அனைத்து துன்பங்களும் நீங்கி நீங்கள் இன்பமாக வாழக் கூடிய யோகத்தை இந்த ஒரு தானம் உங்களுக்கு பெற்றுத் தரும்.
பிரதோஷ வேளையில் நீங்கள் எப்போதும் செய்யும் வழிபாட்டுடன் இந்த ஒரு பொருளை நந்தி தேவருக்கு தரமாய் தருவதன் மூலம் இத்தனை நலன்களை பெற முடியும். இந்த ஆன்மீக தகவலின் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இன்றைய பிரதோஷ வழிபாட்டை மேற் கொண்டு பலன் அடையுங்கள்.