Ian Redpath
Ian Redpath

ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஐயன் ரெட்பாத் காலமானார்

5/5 (110votes)

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் ஐயன் ரெட் பாத். இவருக்கு தற்போது 83 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர் கடந்த 1964ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியுள்ளார்.

இவர் தொடக்க ஆட்டக்காரராக 66 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 1969-70-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 32 ரன்களை விளாசி ஒரு ஓவரில் அதிக ரன்களை அடித்த ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையை தற்போதும் தக்க வைத்துள்ளார். மேலும் அவருடைய மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.