New Jersey Indian ODI Team
New Jersey Indian ODI Team

இந்திய ஒருநாள் அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்

5/5 (14)

இந்திய ஒருநாள் அணிக்காக அடிடாஸ் நிறுவனம் சார்பாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மனப்ரீத் கவுர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருவரும் இணைந்து ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ளது. டாப் 8 அணிகள் பங்கேற்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கேற்ப மத்திய அரசு இந்திய அணிக்கு பாகிஸ்தான் பயணிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ அணி தரப்பில் ஐசிசி-யிடம் நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த முடியாது என்று நேரடியாகவே தெரிவிக்கப்பட்ட்து.

இதனால் ஐசிசியும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணையை வெளியிட முடியாமல் திண்டாடி வருகிறது. இதற்காக ஐசிசி தரப்பில் பிசிசிஐ மற்றும் பிசிபி நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்பட்டும் என்று தகவல் வெளியாகியது. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் மற்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகிறது.

மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இந்திய ஒருநாள் அணிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. பழைய ஜெர்சியை விடவும் புதிய ஜெர்சியில் நீல நிறம் குறைவாக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் தோள் பகுதியில் இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் புதிய டிசைன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஜெர்சியுடன் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் என்பதால், அதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.

1 Comment

Comments are closed