ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி, சென்னையில் நடத்த நடவடிக்கை! – மு.க. ஸ்டாலின்‌

Rate this post

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி: பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி: அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்‌ அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

ஏபிஜி என்றும் அழைக்கப்படும் ஏசியன் பீச் கேம்ஸ் (ABG), ஆசியா முழுவதிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் மத்தியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பல விளையாட்டு நிகழ்வு ஆகும். இந்த விளையாட்டுப் போட்டிகளை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு, இரண்டாவது பெரிய ஆசிய பல விளையாட்டு நிகழ்வாக இந்த விளையாட்டு விவரிக்கப்படுகிறது.

3×3 கூடைப்பந்து, அக்வாத்லான், கடற்கரை தடகள, கடற்கரை கைப்பந்து, கடற்கரை கபடி, கடற்கரை கால்பந்து, கடற்கரை கைப்பந்து, கடற்கரை மரப்பந்து, கடற்கரை மல்யுத்தம், டிராகன் படகு, ஜு-ஜிட்சு, திறந்த நீர் நீச்சல், பவர்போட், இயங்கும் பாராகிளைடிங்,

திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடிதம்‌

சென்னையில்‌ ஆசிய சுடற்கரை விளையாட்டுப்‌ போட்டிகளை நடத்துவது
தொடர்பாக ஆசிய ஒலிம்பிக்‌ கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை ஒன்றிய
இளைஞர்‌ விவகாரங்கள்‌ மற்றும்‌ விளையாட்டு அமைச்சகம்‌ விரைவில்‌ வழங்கிட
உரிய நடவடிக்கைகளை எடுக்கக்‌ கோரி, மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌
திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌
திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடிதம்‌ எழுதியுள்ளார்‌.

Asian Beach Games
Asian Beach Games

மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ எழுதியுள்ள கடிதத்தில்‌, சென்னையில்‌
நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட்‌ தொடக்க விழாவில்‌ கலந்து
கொண்டமைக்கும்‌, இவ்விளையாட்டுப்‌ போட்டிகளை தமிழ்நாட்டில்‌ நடத்துவதற்குத்‌
தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும்‌ தனது நன்றியை மாண்புமிகு
இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களுக்குத்‌ தெரிவித்துள்ளார்‌.

இந்தியாவில்‌ விளையாட்டுகளை ஊக்குவிப்பதில்‌ மாண்புமிகு இந்தியப்‌
பிரதமர்‌ அவர்கள்‌ காட்டிவரும்‌ ஆர்வத்தை தனது கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ள
மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, சென்னையில்‌ ஆசிய கடற்கரை விளையாட்டுப்‌
போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்‌
கொண்டுள்ளார்‌.

தமிழ்நாடு அரசின்‌ வேண்டுகோளையேற்று, 2024 ஜனவரியில்‌ ஆசிய
குடற்கரை விளையாட்டுப்‌ போட்டிகளை தமிழ்நாட்டில்‌ நடத்துவதற்கு, 6-5-2022
அன்று தாஷ்கண்டில்‌ நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக்‌ கவுன்சில்‌ நிர்வாகக்‌ குழுக்‌
கூட்டத்தில்‌ கொள்கை அளவில்‌ ஏற்றுக்‌ கொண்டுள்ளதைச்‌ சட்டிக்காட்டியுள்ள
மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌.

இவ்விளையாட்டுப்‌ போட்டிகளை நடத்துவதற்குத்‌ தேவையான உத்தரவாதங்களை ஒன்றிய இளைஞர்‌ விவகாரங்கள்‌ மற்றும்‌ விளையாட்டு அமைச்சகம்‌ விரைவில்‌ வழங்கிட வேண்டியுள்ளதாகக்‌ குறிப்பிட்டுள்ளார்‌. ஏற்கெனவே மாண்புமிகு ஒன்றிய தகவல்‌: மற்றும்‌ ஒலிபரப்பு. இளைஞர்‌ விவகாரங்கள்‌ மற்றும்‌ விளையாட்டுத்‌ துறை:
அமைச்சருக்கு இதுதொடர்பாக 23-5-2022 அன்று கடிதம்‌ எழுதியுள்ளதாகவும்‌,
செப்டம்பர்‌ 2022 இறுதிக்குள்‌ ஆசிய ஒலிம்பிக்‌ கவுன்சிலுக்கு இந்த
உத்தரவாதங்கள்‌ வழங்கப்பட வேண்டியுள்ளதால்‌.

இளைஞர்‌ விவகாரங்கள்‌ மற்றும்‌ விளையாட்டு அமைச்சகம்‌ விரைவில்‌ அதனை வழங்கிட உரிய நடவடிக்கை: எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, மாண்புமிகு இந்தியப்‌
பிரதமர்‌ அவர்களைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை

இண்டை ண இ 6 ர: இ சையலகலுள்‌


You may also like...