தமிழ்த்தாய் வாழ்த்து, Tamil Thai Valthu | Tamil Anthem Lyrics in Tamil & English

3/5 - (2 votes)

தமிழ்த்தாய் வாழ்த்து, Tamil Thai Valthu Song, Lyrics in Tamil, Meaning, MP3 Free Download, Writer, Meaning, English Translation of Official Tamil Nadu State Song!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Valthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில் பாடப்படும்.

தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் யார்?

தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதி 1891 வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள்

தமிழ் தாய் வாழ்த்து வரிகள்

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

தமிழ்த்தாய் வாழ்த்து பொருள்

இப்பாடலின் பொருள், நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

தமிழ்த்தாய் வாழ்த்து இனி அரசின் மாநில பாடல்!

Government of Tamil Nadu

Tamil Thai Valtu in English Translation – Invocation Of Mother Tamil

Tamil Thai Valtu in English Translation which is called “Invocation Of Mother Tamil“.

Brimming Sea drapes exuberant Dame Earth!
With Beautified face in this exalted Indian Continent!

South! In particular Divine Dravidian Country!
As Aesthetic Thilakam on its beauteous curved forehead!

Like the Fragrance of that Thilakam, for the entire world to be delirious!
Your fervor spread in all directions!

Oh! Tamil Lady!

Ever remain afresh
Thee alone! Purity intact too!
Delighted! Praise thou beauteous Tamil, youthful forever!

Awestruck!

Praise unto thee!

Praise unto thee!

தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடல்

தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Valthu) இனி அரசின் மாநில பாடல்! 2021-ஆம் ஆண்டு திசம்பர் 17-தேதி அன்று மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து இனி அரசின் மாநில பாடல்!

தமிழ்த்தாய் வாழ்த்து அரசாணை

தமிழ்த்தாய் வாழ்த்து: நிற்காத சங்கராச்சாரியாரும், நீதிபதி கருத்தும்! அரசு  அதிரடி உத்தரவின் பின்னணி | Why Tamilnadu government made Tamil Thai Vazhthu  mandatory for ...

2021 திசம்பரில் வெளியிட்ட தமிழ்நாடு அரசாணையில் நீராரும் கடலுடுத்த பாடலைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் விழா நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் கட்டாயம் பாடவேண்டும். பாடலைப் பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் (மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு) இப்பாடலை 55 விநாடிகளில் முல்லைப்பாணி இராகத்தில் (மோகனராகம்) மூன்றாம் நடையில் (திகரம்) பாடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது

தமிழ்த்தாய் Tamil Thai Valthu 320 Kbps Mp3 Song Download

தமிழ்த்தாய் வாழ்த்து MP3 | Tamil Thaai Vazhthu Download | Thamizh Thaai Vaazhthu Audio Song Download | தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் Download | Tamil Thai Valthu MP3 Free Download

You may also like...

4 Responses

  1. April 20, 2022

    […] ‘இந்தியாவின் மொழி‘ என்று வர்ணித்த மத்திய உள்துறை […]

  2. June 25, 2022

    […] அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் […]

  3. July 27, 2022

    […] Tamil Thai Valthu (Invocation to Tamil Mother) […]

  4. August 7, 2022

    […] கூறப்படுகிறது.இது தொடர்பாக மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில், மாவட்ட கல்வி […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *