Thirukkural | திருக்குறள் | 1330 in Tamil

2/5 - (2 votes)

திருக்குறள் | Thirukkural

திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Thirukkural), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.

ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன.

Thirukkural is an ancient book of wisdom, the greatest classic of the Tamil language, the distillation of the essential genius of the Tamil Nadu.

Thirukkural is a collection of 1330 Tamil couplets (kurals) organised into 133 chapters written by Thiruvalluvar who lived 2000 years ago.

Holy Thirukkural. Greatness of ThirukkuralThirukkural is a precious gem among the classics, unique in the deliverance of code of conduct to the mankind 

TamilTthirukkural xls format · View 9999 · Download 999

குறள் எண்குறள்பால்இயல்அதிகாரம்
1அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.அறப்பால்பாயிரவியல் கடவுள் வாழ்த்து
2கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.அறப்பால்பாயிரவியல் கடவுள் வாழ்த்து 
3மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.அறப்பால்பாயிரவியல் கடவுள் வாழ்த்து 
4வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.அறப்பால்பாயிரவியல் கடவுள் வாழ்த்து 
5இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.அறப்பால்பாயிரவியல் கடவுள் வாழ்த்து 
6பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.அறப்பால்பாயிரவியல் கடவுள் வாழ்த்து 
7தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.அறப்பால்பாயிரவியல் கடவுள் வாழ்த்து 
8அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.அறப்பால்பாயிரவியல் கடவுள் வாழ்த்து 
9கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.அறப்பால்பாயிரவியல் கடவுள் வாழ்த்து 
10பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.அறப்பால்பாயிரவியல் கடவுள் வாழ்த்து 
11வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.அறப்பால்பாயிரவியல்வான்சிறப்பு 
12துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.அறப்பால்பாயிரவியல்வான்சிறப்பு 
13விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.அறப்பால்பாயிரவியல்வான்சிறப்பு 
14ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.அறப்பால்பாயிரவியல்வான்சிறப்பு 
15கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.அறப்பால்பாயிரவியல்வான்சிறப்பு 
16விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.அறப்பால்பாயிரவியல்வான்சிறப்பு 
17நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்காது     ஆகி விடின்.அறப்பால்பாயிரவியல்வான்சிறப்பு 
18சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.அறப்பால்பாயிரவியல்வான்சிறப்பு 
19தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.அறப்பால்பாயிரவியல்வான்சிறப்பு 
20நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.அறப்பால்பாயிரவியல்வான்சிறப்பு 
21ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.அறப்பால்பாயிரவியல் நீத்தார் பெருமை
22துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.அறப்பால்பாயிரவியல் நீத்தார் பெருமை
23இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.அறப்பால்பாயிரவியல் நீத்தார் பெருமை
24உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.அறப்பால்பாயிரவியல் நீத்தார் பெருமை
25ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி.அறப்பால்பாயிரவியல் நீத்தார் பெருமை
26செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.அறப்பால்பாயிரவியல் நீத்தார் பெருமை
27சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என  ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.அறப்பால்பாயிரவியல் நீத்தார் பெருமை
28நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.அறப்பால்பாயிரவியல் நீத்தார் பெருமை
29குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.அறப்பால்பாயிரவியல் நீத்தார் பெருமை
30அந்தணர் என்போர் அறவோர்மற்று  எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுக லான்.அறப்பால்பாயிரவியல் நீத்தார் பெருமை
31சிறப்பு ஈனும் செல்வமும்  ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.அறப்பால்பாயிரவியல்அறன்வலியுறுத்தல் 
32அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.அறப்பால்பாயிரவியல்அறன்வலியுறுத்தல் 
33ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்.அறப்பால்பாயிரவியல்அறன்வலியுறுத்தல் 
34மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற.அறப்பால்பாயிரவியல்அறன்வலியுறுத்தல் 
35அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.அறப்பால்பாயிரவியல்அறன்வலியுறுத்தல் 
36அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.அறப்பால்பாயிரவியல்அறன்வலியுறுத்தல் 
37அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.அறப்பால்பாயிரவியல்அறன்வலியுறுத்தல் 
38வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.அறப்பால்பாயிரவியல்அறன்வலியுறுத்தல் 
39அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் புறத்த புகழும் இல.அறப்பால்பாயிரவியல்அறன்வலியுறுத்தல் 
40செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.அறப்பால்பாயிரவியல்அறன்வலியுறுத்தல் 
41இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.அறப்பால்இல்லறவியல் இல்வாழ்க்கை 
42துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.அறப்பால்இல்லறவியல் இல்வாழ்க்கை 
43தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை.அறப்பால்இல்லறவியல் இல்வாழ்க்கை 
44பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்அறப்பால்இல்லறவியல் இல்வாழ்க்கை 
45அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.அறப்பால்இல்லறவியல் இல்வாழ்க்கை 
46அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்?அறப்பால்இல்லறவியல் இல்வாழ்க்கை 
47இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.அறப்பால்இல்லறவியல் இல்வாழ்க்கை 
48ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.அறப்பால்இல்லறவியல் இல்வாழ்க்கை 
49அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.அறப்பால்இல்லறவியல் இல்வாழ்க்கை 
50வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.அறப்பால்இல்லறவியல் இல்வாழ்க்கை 
51மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.அறப்பால்இல்லறவியல்வாழ்க்கைத்துணைநலம் 
52மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல்.அறப்பால்இல்லறவியல்வாழ்க்கைத்துணைநலம் 
53இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடைஅறப்பால்இல்லறவியல்வாழ்க்கைத்துணைநலம் 
54பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்.அறப்பால்இல்லறவியல்வாழ்க்கைத்துணைநலம் 
55தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.அறப்பால்இல்லறவியல்வாழ்க்கைத்துணைநலம் 
56தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.அறப்பால்இல்லறவியல்வாழ்க்கைத்துணைநலம் 
57சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.அறப்பால்இல்லறவியல்வாழ்க்கைத்துணைநலம் 
58பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு.அறப்பால்இல்லறவியல்வாழ்க்கைத்துணைநலம் 
59புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.அறப்பால்இல்லறவியல்வாழ்க்கைத்துணைநலம் 
60மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு.அறப்பால்இல்லறவியல்வாழ்க்கைத்துணைநலம் 
61பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.அறப்பால்இல்லறவியல்புதல்வரைப்பெறுதல் 
62எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின்.அறப்பால்இல்லறவியல்புதல்வரைப்பெறுதல் 
63தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.அறப்பால்இல்லறவியல்புதல்வரைப்பெறுதல் 
64அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.அறப்பால்இல்லறவியல்புதல்வரைப்பெறுதல் 
65மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.அறப்பால்இல்லறவியல்புதல்வரைப்பெறுதல் 
66குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.அறப்பால்இல்லறவியல்புதல்வரைப்பெறுதல் 
67தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.அறப்பால்இல்லறவியல்புதல்வரைப்பெறுதல் 
68தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.அறப்பால்இல்லறவியல்புதல்வரைப்பெறுதல் 
69ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.அறப்பால்இல்லறவியல்புதல்வரைப்பெறுதல் 
70மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.அறப்பால்இல்லறவியல்புதல்வரைப்பெறுதல் 
71அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.அறப்பால்இல்லறவியல் அன்புடைமை 
72அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.அறப்பால்இல்லறவியல் அன்புடைமை 
73அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.அறப்பால்இல்லறவியல் அன்புடைமை 
74அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.அறப்பால்இல்லறவியல் அன்புடைமை 
75அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.அறப்பால்இல்லறவியல் அன்புடைமை 
76அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.அறப்பால்இல்லறவியல் அன்புடைமை 
77என்பில் அதனை வெயில்போலக் காயுமே அன்பில் அதனை அறம்.அறப்பால்இல்லறவியல் அன்புடைமை 
78அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த்து அற்று.அறப்பால்இல்லறவியல் அன்புடைமை 
79புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு.அறப்பால்இல்லறவியல் அன்புடைமை 
80அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.அறப்பால்இல்லறவியல் அன்புடைமை 
81இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு.அறப்பால்இல்லறவியல்விருந்தோம்பல் 
82விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்றுஅறப்பால்இல்லறவியல்விருந்தோம்பல் 
83வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.அறப்பால்இல்லறவியல்விருந்தோம்பல் 
84அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.அறப்பால்இல்லறவியல்விருந்தோம்பல் 
85வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.அறப்பால்இல்லறவியல்விருந்தோம்பல் 
86செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.அறப்பால்இல்லறவியல்விருந்தோம்பல் 
87இனைத்துணைத் தென்பதொன்று இல்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.அறப்பால்இல்லறவியல்விருந்தோம்பல் 
88பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.அறப்பால்இல்லறவியல்விருந்தோம்பல் 
89உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.அறப்பால்இல்லறவியல்விருந்தோம்பல் 
90மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.அறப்பால்இல்லறவியல்விருந்தோம்பல் 
91இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.அறப்பால்இல்லறவியல்இனியவைகூறல் 
92அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.அறப்பால்இல்லறவியல்இனியவைகூறல் 
93முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொலின் அதே அறம்அறப்பால்இல்லறவியல்இனியவைகூறல் 
94துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு.அறப்பால்இல்லறவியல்இனியவைகூறல் 
95பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.அறப்பால்இல்லறவியல்இனியவைகூறல் 
96அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்அறப்பால்இல்லறவியல்இனியவைகூறல் 
97நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.அறப்பால்இல்லறவியல்இனியவைகூறல் 
98சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.அறப்பால்இல்லறவியல்இனியவைகூறல் 
99இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது?அறப்பால்இல்லறவியல்இனியவைகூறல் 
100இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந்து அற்று.அறப்பால்இல்லறவியல்இனியவைகூறல் 
101செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.அறப்பால்இல்லறவியல்செய்நன்றிஅறிதல் 
102காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.அறப்பால்இல்லறவியல்செய்நன்றிஅறிதல் 
103பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.அறப்பால்இல்லறவியல்செய்நன்றிஅறிதல் 
104தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.அறப்பால்இல்லறவியல்செய்நன்றிஅறிதல் 
105உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.அறப்பால்இல்லறவியல்செய்நன்றிஅறிதல் 
106மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.அறப்பால்இல்லறவியல்செய்நன்றிஅறிதல் 
107எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.அறப்பால்இல்லறவியல்செய்நன்றிஅறிதல் 
108நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.அறப்பால்இல்லறவியல்செய்நன்றிஅறிதல் 
109கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.அறப்பால்இல்லறவியல்செய்நன்றிஅறிதல் 
110எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.அறப்பால்இல்லறவியல்செய்நன்றிஅறிதல் 
111தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.அறப்பால்இல்லறவியல்நடுவுநிலைமை 
112செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.அறப்பால்இல்லறவியல்நடுவுநிலைமை 
113நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.அறப்பால்இல்லறவியல்நடுவுநிலைமை 
114தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்.அறப்பால்இல்லறவியல்நடுவுநிலைமை 
115கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி.அறப்பால்இல்லறவியல்நடுவுநிலைமை 
116கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.அறப்பால்இல்லறவியல்நடுவுநிலைமை 
117கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.அறப்பால்இல்லறவியல்நடுவுநிலைமை 
118சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.அறப்பால்இல்லறவியல்நடுவுநிலைமை 
119சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.அறப்பால்இல்லறவியல்நடுவுநிலைமை 
120வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.அறப்பால்இல்லறவியல்நடுவுநிலைமை 
121அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.அறப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை 
122காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு.அறப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை 
123செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.அறப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை 
124நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.அறப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை 
125எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.அறப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை 
126ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.அறப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை 
127யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.அறப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை 
128ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றுஆகாது ஆகி விடும்.அறப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை 
129தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.அறப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை 
130கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.அறப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை 
131ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.அறப்பால்இல்லறவியல்ஒழுக்கமுடைமை
132பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.அறப்பால்இல்லறவியல்ஒழுக்கமுடைமை
133ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.அறப்பால்இல்லறவியல்ஒழுக்கமுடைமை
134மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்  பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்.அறப்பால்இல்லறவியல்ஒழுக்கமுடைமை
135அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு.அறப்பால்இல்லறவியல்ஒழுக்கமுடைமை
136ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து.அறப்பால்இல்லறவியல்ஒழுக்கமுடைமை
137ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.அறப்பால்இல்லறவியல்ஒழுக்கமுடைமை
138நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.அறப்பால்இல்லறவியல்ஒழுக்கமுடைமை
139ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.அறப்பால்இல்லறவியல்ஒழுக்கமுடைமை
140உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்அறப்பால்இல்லறவியல்ஒழுக்கமுடைமை
141பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.அறப்பால்இல்லறவியல்பிறன்இல்விழையாமை 
142அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.அறப்பால்இல்லறவியல்பிறன்இல்விழையாமை 
143விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகு வார்அறப்பால்இல்லறவியல்பிறன்இல்விழையாமை 
144எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.அறப்பால்இல்லறவியல்பிறன்இல்விழையாமை 
145எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.அறப்பால்இல்லறவியல்பிறன்இல்விழையாமை 
146பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.அறப்பால்இல்லறவியல்பிறன்இல்விழையாமை 
147அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்.அறப்பால்இல்லறவியல்பிறன்இல்விழையாமை 
148பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.அறப்பால்இல்லறவியல்பிறன்இல்விழையாமை 
149நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.அறப்பால்இல்லறவியல்பிறன்இல்விழையாமை 
150அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.அறப்பால்இல்லறவியல்பிறன்இல்விழையாமை 
151அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.அறப்பால்இல்லறவியல்பொறையுடைமை
152பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.அறப்பால்இல்லறவியல்பொறையுடைமை
153இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.அறப்பால்இல்லறவியல்பொறையுடைமை
154நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி ஒழுகப் படும்.அறப்பால்இல்லறவியல்பொறையுடைமை
155ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.அறப்பால்இல்லறவியல்பொறையுடைமை
156ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.அறப்பால்இல்லறவியல்பொறையுடைமை
157திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.அறப்பால்இல்லறவியல்பொறையுடைமை
158மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தம் தகுதியான் வென்று விடல்.அறப்பால்இல்லறவியல்பொறையுடைமை
159துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.அறப்பால்இல்லறவியல்பொறையுடைமை
160உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.அறப்பால்இல்லறவியல்பொறையுடைமை
161ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.அறப்பால்இல்லறவியல் அழுக்காறாமை 
162விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.அறப்பால்இல்லறவியல் அழுக்காறாமை 
163அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம் பேணாது அழுக்கறுப் பான்.அறப்பால்இல்லறவியல் அழுக்காறாமை 
164அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.அறப்பால்இல்லறவியல் அழுக்காறாமை 
165அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது.அறப்பால்இல்லறவியல் அழுக்காறாமை 
166கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.அறப்பால்இல்லறவியல் அழுக்காறாமை 
167அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.அறப்பால்இல்லறவியல் அழுக்காறாமை 
168அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.அறப்பால்இல்லறவியல் அழுக்காறாமை 
169அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.அறப்பால்இல்லறவியல் அழுக்காறாமை 
170அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.அறப்பால்இல்லறவியல் அழுக்காறாமை 
171நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.அறப்பால்இல்லறவியல்வெஃகாமை 
172படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.அறப்பால்இல்லறவியல்வெஃகாமை 
173சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.அறப்பால்இல்லறவியல்வெஃகாமை 
174இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.அறப்பால்இல்லறவியல்வெஃகாமை 
175அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.அறப்பால்இல்லறவியல்வெஃகாமை 
176அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.அறப்பால்இல்லறவியல்வெஃகாமை 
177வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.அறப்பால்இல்லறவியல்வெஃகாமை 
178அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.அறப்பால்இல்லறவியல்வெஃகாமை 
179அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு.அறப்பால்இல்லறவியல்வெஃகாமை 
180இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு.அறப்பால்இல்லறவியல்வெஃகாமை 
181அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது.அறப்பால்இல்லறவியல்புறங்கூறாமை 
182அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை.அறப்பால்இல்லறவியல்புறங்கூறாமை 
183புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்.அறப்பால்இல்லறவியல்புறங்கூறாமை 
184கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.அறப்பால்இல்லறவியல்புறங்கூறாமை 
185அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.அறப்பால்இல்லறவியல்புறங்கூறாமை 
186பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.அறப்பால்இல்லறவியல்புறங்கூறாமை 
187பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.அறப்பால்இல்லறவியல்புறங்கூறாமை 
188துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.அறப்பால்இல்லறவியல்புறங்கூறாமை 
189அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.அறப்பால்இல்லறவியல்புறங்கூறாமை 
190ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.அறப்பால்இல்லறவியல்புறங்கூறாமை 
191பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.அறப்பால்இல்லறவியல்பயனிலசொல்லாமை 
192பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.அறப்பால்இல்லறவியல்பயனிலசொல்லாமை 
193நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.அறப்பால்இல்லறவியல்பயனிலசொல்லாமை 
194நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து.அறப்பால்இல்லறவியல்பயனிலசொல்லாமை 
195சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.அறப்பால்இல்லறவியல்பயனிலசொல்லாமை 
196பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல்.அறப்பால்இல்லறவியல்பயனிலசொல்லாமை 
197நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.அறப்பால்இல்லறவியல்பயனிலசொல்லாமை 
198அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.அறப்பால்இல்லறவியல்பயனிலசொல்லாமை 
199பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.அறப்பால்இல்லறவியல்பயனிலசொல்லாமை 
200சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.அறப்பால்இல்லறவியல்பயனிலசொல்லாமை 
201தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.அறப்பால்இல்லறவியல்தீவினையச்சம்
202தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.அறப்பால்இல்லறவியல்தீவினையச்சம்
203அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.அறப்பால்இல்லறவியல்தீவினையச்சம்
204மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.அறப்பால்இல்லறவியல்தீவினையச்சம்
205இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து.அறப்பால்இல்லறவியல்தீவினையச்சம்
206தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.அறப்பால்இல்லறவியல்தீவினையச்சம்
207எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.அறப்பால்இல்லறவியல்தீவினையச்சம்
208தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று.அறப்பால்இல்லறவியல்தீவினையச்சம்
209தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்.அறப்பால்இல்லறவியல்தீவினையச்சம்
210அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.அறப்பால்இல்லறவியல்தீவினையச்சம்
211கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு.அறப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல் 
212தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு.அறப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல் 
213புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.அறப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல் 
214ஒத்தது அறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.அறப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல் 
215ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.அறப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல் 
216பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.அறப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல் 
217மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.அறப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல் 
218இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்.அறப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல் 
219நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா ஆறு.அறப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல் 
220ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து.அறப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல் 
221வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.அறப்பால்இல்லறவியல்ஈகை 
222நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று.அறப்பால்இல்லறவியல்ஈகை 
223இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.அறப்பால்இல்லறவியல்ஈகை 
224இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு.அறப்பால்இல்லறவியல்ஈகை 
225ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.அறப்பால்இல்லறவியல்ஈகை 
226அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.அறப்பால்இல்லறவியல்ஈகை 
227பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.அறப்பால்இல்லறவியல்ஈகை 
228ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும்     வன்க ணவர்.அறப்பால்இல்லறவியல்ஈகை 
229இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.அறப்பால்இல்லறவியல்ஈகை 
230சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.அறப்பால்இல்லறவியல்ஈகை 
231ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.அறப்பால்இல்லறவியல்புகழ் 
232உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.அறப்பால்இல்லறவியல்புகழ் 
233ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.அறப்பால்இல்லறவியல்புகழ் 
234நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.அறப்பால்இல்லறவியல்புகழ் 
235நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.அறப்பால்இல்லறவியல்புகழ் 
236தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.அறப்பால்இல்லறவியல்புகழ் 
237புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்?அறப்பால்இல்லறவியல்புகழ் 
238வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.அறப்பால்இல்லறவியல்புகழ் 
239வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.அறப்பால்இல்லறவியல்புகழ் 
240வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.அறப்பால்இல்லறவியல்புகழ் 
241அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.அறப்பால்துறவறவியல்அருளுடைமை 
242நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை.அறப்பால்துறவறவியல்அருளுடைமை 
243அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.அறப்பால்துறவறவியல்அருளுடைமை 
244மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.அறப்பால்துறவறவியல்அருளுடைமை 
245அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.அறப்பால்துறவறவியல்அருளுடைமை 
246பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.அறப்பால்துறவறவியல்அருளுடைமை 
247அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.அறப்பால்துறவறவியல்அருளுடைமை 
248பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற்று ஆதல் அரிது.அறப்பால்துறவறவியல்அருளுடைமை 
249தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.அறப்பால்துறவறவியல்அருளுடைமை 
250வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து.அறப்பால்துறவறவியல்அருளுடைமை 
251தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?அறப்பால்துறவறவியல்புலான்மறுத்தல் 
252பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.அறப்பால்துறவறவியல்புலான்மறுத்தல் 
253படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.அறப்பால்துறவறவியல்புலான்மறுத்தல் 
254அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்.அறப்பால்துறவறவியல்புலான்மறுத்தல் 
255உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு.அறப்பால்துறவறவியல்புலான்மறுத்தல் 
256தினல்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.அறப்பால்துறவறவியல்புலான்மறுத்தல் 
257உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்அது உணர்வார்ப் பெறின்.அறப்பால்துறவறவியல்புலான்மறுத்தல் 
258செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.அறப்பால்துறவறவியல்புலான்மறுத்தல் 
259அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.அறப்பால்துறவறவியல்புலான்மறுத்தல் 
260கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.அறப்பால்துறவறவியல்புலான்மறுத்தல் 
261உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு.அறப்பால்துறவறவியல்தவம் 
262தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது.அறப்பால்துறவறவியல்தவம் 
263துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.அறப்பால்துறவறவியல்தவம் 
264ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.அறப்பால்துறவறவியல்தவம் 
265வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.அறப்பால்துறவறவியல்தவம் 
266தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு.அறப்பால்துறவறவியல்தவம் 
267சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.அறப்பால்துறவறவியல்தவம் 
268தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய னுயிர் எல்லாம் தொழும்.அறப்பால்துறவறவியல்தவம் 
269கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.அறப்பால்துறவறவியல்தவம் 
270இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.அறப்பால்துறவறவியல்தவம் 
271வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.அறப்பால்துறவறவியல் கூடாவொழுக்கம் 
272வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றம் படின்.அறப்பால்துறவறவியல் கூடாவொழுக்கம் 
273வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந்து அற்று.அறப்பால்துறவறவியல் கூடாவொழுக்கம் 
274தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று.அறப்பால்துறவறவியல் கூடாவொழுக்கம் 
275பற்றுஅற்றேம் என்பார் படிறுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்ற ஏதம் பலவும் தரும்.அறப்பால்துறவறவியல் கூடாவொழுக்கம் 
276நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.அறப்பால்துறவறவியல் கூடாவொழுக்கம் 
277புறம்குன்றி கண்டுஅனையர் ஏனும் அகம்குன்றி மூக்கின் கரியார் உடைத்து.அறப்பால்துறவறவியல் கூடாவொழுக்கம் 
278மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.அறப்பால்துறவறவியல் கூடாவொழுக்கம் 
279கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்.அறப்பால்துறவறவியல் கூடாவொழுக்கம் 
280மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.அறப்பால்துறவறவியல் கூடாவொழுக்கம் 
281எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.அறப்பால்துறவறவியல்கள்ளாமை 
282உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.அறப்பால்துறவறவியல்கள்ளாமை 
283களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.அறப்பால்துறவறவியல்கள்ளாமை 
284களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.அறப்பால்துறவறவியல்கள்ளாமை 
285அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.அறப்பால்துறவறவியல்கள்ளாமை 
286அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காதல் அவர்.அறப்பால்துறவறவியல்கள்ளாமை 
287களவுஎன்னும் கார்அறிவு ஆண்மை அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்.அறப்பால்துறவறவியல்கள்ளாமை 
288அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.அறப்பால்துறவறவியல்கள்ளாமை 
289அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றாத வர்.அறப்பால்துறவறவியல்கள்ளாமை 
290கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.அறப்பால்துறவறவியல்கள்ளாமை 
291வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.அறப்பால்துறவறவியல்வாய்மை 
292பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.அறப்பால்துறவறவியல்வாய்மை 
293தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.அறப்பால்துறவறவியல்வாய்மை 
294உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.அறப்பால்துறவறவியல்வாய்மை 
295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.அறப்பால்துறவறவியல்வாய்மை 
296பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்.அறப்பால்துறவறவியல்வாய்மை 
297பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.அறப்பால்துறவறவியல்வாய்மை 
298புறம்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.அறப்பால்துறவறவியல்வாய்மை 
299எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.அறப்பால்துறவறவியல்வாய்மை 
300யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும் வாய்மையின் நல்ல பிற.அறப்பால்துறவறவியல்வாய்மை 
301செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்?அறப்பால்துறவறவியல்வெகுளாமை 
302செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற.அறப்பால்துறவறவியல்வெகுளாமை 
303மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.அறப்பால்துறவறவியல்வெகுளாமை 
304நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.அறப்பால்துறவறவியல்வெகுளாமை 
305தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.அறப்பால்துறவறவியல்வெகுளாமை 
306சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.அறப்பால்துறவறவியல்வெகுளாமை 
307சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.அறப்பால்துறவறவியல்வெகுளாமை 
308இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.அறப்பால்துறவறவியல்வெகுளாமை 
309உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.அறப்பால்துறவறவியல்வெகுளாமை 
310இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.அறப்பால்துறவறவியல்வெகுளாமை 
311சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.அறப்பால்துறவறவியல்இன்னாசெய்யாமை 
312கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.அறப்பால்துறவறவியல்இன்னாசெய்யாமை 
313செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும்.அறப்பால்துறவறவியல்இன்னாசெய்யாமை 
314இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.அறப்பால்துறவறவியல்இன்னாசெய்யாமை 
315அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.அறப்பால்துறவறவியல்இன்னாசெய்யாமை 
316இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.அறப்பால்துறவறவியல்இன்னாசெய்யாமை 
317எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.அறப்பால்துறவறவியல்இன்னாசெய்யாமை 
318தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்.அறப்பால்துறவறவியல்இன்னாசெய்யாமை 
319பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.அறப்பால்துறவறவியல்இன்னாசெய்யாமை 
320நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.அறப்பால்துறவறவியல்இன்னாசெய்யாமை 
321அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.அறப்பால்துறவறவியல்கொல்லாமை 
322பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.அறப்பால்துறவறவியல்கொல்லாமை 
323ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.அறப்பால்துறவறவியல்கொல்லாமை 
324நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.அறப்பால்துறவறவியல்கொல்லாமை 
325நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.அறப்பால்துறவறவியல்கொல்லாமை 
326கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று.அறப்பால்துறவறவியல்கொல்லாமை 
327தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.அறப்பால்துறவறவியல்கொல்லாமை 
328நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை.அறப்பால்துறவறவியல்கொல்லாமை 
329கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து.அறப்பால்துறவறவியல்கொல்லாமை 
330உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.அறப்பால்துறவறவியல்கொல்லாமை 
331நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.அறப்பால்துறவறவியல் நிலையாமை 
332கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.அறப்பால்துறவறவியல் நிலையாமை 
333அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்.அறப்பால்துறவறவியல் நிலையாமை 
334நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.அறப்பால்துறவறவியல் நிலையாமை 
335நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்அறப்பால்துறவறவியல் நிலையாமை 
336நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.அறப்பால்துறவறவியல் நிலையாமை 
337ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.அறப்பால்துறவறவியல் நிலையாமை 
338குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.அறப்பால்துறவறவியல் நிலையாமை 
339உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.அறப்பால்துறவறவியல் நிலையாமை 
340புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.அறப்பால்துறவறவியல் நிலையாமை 
341யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.அறப்பால்துறவறவியல்துறவு 
342வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல.அறப்பால்துறவறவியல்துறவு 
343அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.அறப்பால்துறவறவியல்துறவு 
344இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து.அறப்பால்துறவறவியல்துறவு 
345மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை.அறப்பால்துறவறவியல்துறவு 
346யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.அறப்பால்துறவறவியல்துறவு 
347பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்குஅறப்பால்துறவறவியல்துறவு 
348தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்.அறப்பால்துறவறவியல்துறவு 
349பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.அறப்பால்துறவறவியல்துறவு 
350பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.அறப்பால்துறவறவியல்துறவு 
351பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.அறப்பால்துறவறவியல்மெய்யுணர்தல் 
352இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.அறப்பால்துறவறவியல்மெய்யுணர்தல் 
353ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து.அறப்பால்துறவறவியல்மெய்யுணர்தல் 
354ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.அறப்பால்துறவறவியல்மெய்யுணர்தல் 
355எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.அறப்பால்துறவறவியல்மெய்யுணர்தல் 
356கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.அறப்பால்துறவறவியல்மெய்யுணர்தல் 
357ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.அறப்பால்துறவறவியல்மெய்யுணர்தல் 
358பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.அறப்பால்துறவறவியல்மெய்யுணர்தல் 
359சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.அறப்பால்துறவறவியல்மெய்யுணர்தல் 
360காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.அறப்பால்துறவறவியல்மெய்யுணர்தல் 
361அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.அறப்பால்துறவறவியல்
362வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்.அறப்பால்துறவறவியல்அவாவறுத்தல் 
363வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்.அறப்பால்துறவறவியல்அவாவறுத்தல் 
364தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்.அறப்பால்துறவறவியல்அவாவறுத்தல் 
365அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர்.அறப்பால்துறவறவியல்அவாவறுத்தல் 
366அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா.அறப்பால்துறவறவியல்அவாவறுத்தல் 
367அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும்.அறப்பால்துறவறவியல்அவாவறுத்தல் 
368அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.அறப்பால்துறவறவியல்அவாவறுத்தல் 
369இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.அறப்பால்துறவறவியல்அவாவறுத்தல் 
370ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.அறப்பால்துறவறவியல்அவாவறுத்தல் 
371ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.அறப்பால்ஊழியல்ஊழ் 
372பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை.அறப்பால்ஊழியல்ஊழ் 
373நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்.அறப்பால்ஊழியல்ஊழ் 
374இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.அறப்பால்ஊழியல்ஊழ் 
375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.அறப்பால்ஊழியல்ஊழ் 
376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.அறப்பால்ஊழியல்ஊழ் 
377வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.அறப்பால்ஊழியல்ஊழ் 
378துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.அறப்பால்ஊழியல்ஊழ் 
379நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்?அறப்பால்ஊழியல்ஊழ் 
380ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.அறப்பால்ஊழியல்ஊழ் 
381படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.பொருட்பால் அரசியல்இறைமாட்சி 
382அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.பொருட்பால் அரசியல்இறைமாட்சி 
383தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவற்கு.பொருட்பால் அரசியல்இறைமாட்சி 
384அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு.பொருட்பால் அரசியல்இறைமாட்சி 
385இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு.பொருட்பால் அரசியல்இறைமாட்சி 
386காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்பொருட்பால் அரசியல்இறைமாட்சி 
387இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் கண்டனைத்து வுலகு.பொருட்பால் அரசியல்இறைமாட்சி 
388முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்.பொருட்பால் அரசியல்இறைமாட்சி 
389செவி கைப்பச்  சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.பொருட்பால் அரசியல்இறைமாட்சி 
390கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி.பொருட்பால் அரசியல்இறைமாட்சி 
391கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.பொருட்பால் அரசியல்கல்வி 
392எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.பொருட்பால் அரசியல்கல்வி 
393கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.பொருட்பால் அரசியல்கல்வி 
394உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.பொருட்பால் அரசியல்கல்வி 
395உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்.பொருட்பால் அரசியல்கல்வி 
396தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.பொருட்பால் அரசியல்கல்வி 
397யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு.பொருட்பால் அரசியல்கல்வி 
398ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.பொருட்பால் அரசியல்கல்வி 
399தாம்இன்பு உறுவது உலகுஇன் புறக் கண்டு காமுறுவர் கற்றுஅறிந் தார்.பொருட்பால் அரசியல்கல்வி 
400கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.பொருட்பால் அரசியல்கல்வி 
401அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.பொருட்பால் அரசியல்கல்லாமை 
402கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.பொருட்பால் அரசியல்கல்லாமை 
403கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின்.பொருட்பால் அரசியல்கல்லாமை 
404கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடை யார்.பொருட்பால் அரசியல்கல்லாமை 
405கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.பொருட்பால் அரசியல்கல்லாமை 
406உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர்.பொருட்பால் அரசியல்கல்லாமை 
407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று.பொருட்பால் அரசியல்கல்லாமை 
408நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட் ட திருபொருட்பால் அரசியல்கல்லாமை 
409மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு.பொருட்பால் அரசியல்கல்லாமை 
410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.பொருட்பால் அரசியல்கல்லாமை 
411செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.பொருட்பால் அரசியல்கேள்வி 
412செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.பொருட்பால் அரசியல்கேள்வி 
413செவிஉணவின் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.பொருட்பால் அரசியல்கேள்வி 
414கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.பொருட்பால் அரசியல்கேள்வி 
415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.பொருட்பால் அரசியல்கேள்வி 
416எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.பொருட்பால் அரசியல்கேள்வி 
417பிழைத்துஉணர்ந்தும்  பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்.பொருட்பால் அரசியல்கேள்வி 
418கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.பொருட்பால் அரசியல்கேள்வி 
419நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது.பொருட்பால் அரசியல்கேள்வி 
420செவியின் சுவையுணரா வாய்உணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?பொருட்பால் அரசியல்கேள்வி 
421அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.பொருட்பால் அரசியல்அறிவுடைமை 
422சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.பொருட்பால் அரசியல்அறிவுடைமை 
423எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.பொருட்பால் அரசியல்அறிவுடைமை 
424எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு.பொருட்பால் அரசியல்அறிவுடைமை 
425உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு.பொருட்பால் அரசியல்அறிவுடைமை 
426எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.பொருட்பால் அரசியல்அறிவுடைமை 
427அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.பொருட்பால் அரசியல்அறிவுடைமை 
428அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.பொருட்பால் அரசியல்அறிவுடைமை 
429எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்.பொருட்பால் அரசியல்அறிவுடைமை 
430அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடையர்  ஏனும் இலர்.பொருட்பால் அரசியல்அறிவுடைமை 
431செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.பொருட்பால் அரசியல்குற்றங்கடிதல் 
432இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.பொருட்பால் அரசியல்குற்றங்கடிதல் 
433தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.பொருட்பால் அரசியல்குற்றங்கடிதல் 
434குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம்  தரூஉம்  பகை.பொருட்பால் அரசியல்குற்றங்கடிதல் 
435வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.பொருட்பால் அரசியல்குற்றங்கடிதல் 
436தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கில்பின்  என்குற்றம் ஆகும் இறைக்கு?பொருட்பால் அரசியல்குற்றங்கடிதல் 
437செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக்     கெடும்.பொருட்பால் அரசியல்குற்றங்கடிதல் 
438பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதுஒன்று அன்று.பொருட்பால் அரசியல்குற்றங்கடிதல் 
439வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.பொருட்பால் அரசியல்குற்றங்கடிதல் 
440காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்.பொருட்பால் அரசியல்குற்றங்கடிதல் 
441அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.பொருட்பால் அரசியல்பெரியாரைத் துணைக்கோடல் 
442உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.பொருட்பால் அரசியல்பெரியாரைத் துணைக்கோடல் 
443அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.பொருட்பால் அரசியல்பெரியாரைத் துணைக்கோடல் 
444தம்மில் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை.பொருட்பால் அரசியல்பெரியாரைத் துணைக்கோடல் 
445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.பொருட்பால் அரசியல்பெரியாரைத் துணைக்கோடல் 
446தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல்.பொருட்பால் அரசியல்பெரியாரைத் துணைக்கோடல் 
447இடிக்கும் துணையாரை ஆள்வாரை  யாரே கெடுக்கும் தகைமை யவர்.பொருட்பால் அரசியல்பெரியாரைத் துணைக்கோடல் 
448இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்.பொருட்பால் அரசியல்பெரியாரைத் துணைக்கோடல் 
449முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்புஇலார்க்கு இல்லை நிலை.பொருட்பால் அரசியல்பெரியாரைத் துணைக்கோடல் 
450பல்லார் பகைகொளலில் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர் கை விடல்.பொருட்பால் அரசியல்பெரியாரைத் துணைக்கோடல் 
451சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.பொருட்பால் அரசியல்சிற்றினஞ்சேராமை 
452நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பு அதுஆகும் அறிவு.பொருட்பால் அரசியல்சிற்றினஞ்சேராமை 
453மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல்.பொருட்பால் அரசியல்சிற்றினஞ்சேராமை 
454மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துஉளது ஆகும் அறிவு.பொருட்பால் அரசியல்சிற்றினஞ்சேராமை 
455மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும்.பொருட்பால் அரசியல்சிற்றினஞ்சேராமை 
456மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனந்தூயார்க்கு இல்லைநன்று ஆகா வினை.பொருட்பால் அரசியல்சிற்றினஞ்சேராமை 
457மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.பொருட்பால் அரசியல்சிற்றினஞ்சேராமை 
458மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து.பொருட்பால் அரசியல்சிற்றினஞ்சேராமை 
459மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து.பொருட்பால் அரசியல்சிற்றினஞ்சேராமை 
460நல்இனத்தின் ஊங்குத் துணையில்லை தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல்.பொருட்பால் அரசியல்சிற்றினஞ்சேராமை 
461அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.பொருட்பால் அரசியல்தெரிந்துசெயல்வகை 
462தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்பொருட்பால் அரசியல்தெரிந்துசெயல்வகை 
463ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்.பொருட்பால் அரசியல்தெரிந்துசெயல்வகை 
464தெளிவுஇல் அதனை தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.பொருட்பால் அரசியல்தெரிந்துசெயல்வகை 
465வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதுஓர் ஆறுபொருட்பால் அரசியல்தெரிந்துசெயல்வகை 
466செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.பொருட்பால் அரசியல்தெரிந்துசெயல்வகை 
467எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.பொருட்பால் அரசியல்தெரிந்துசெயல்வகை 
468ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்.பொருட்பால் அரசியல்தெரிந்துசெயல்வகை 
469நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர் பண்புஅறிந்து  ஆற்றாக் கடை.பொருட்பால் அரசியல்தெரிந்துசெயல்வகை 
470எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு.பொருட்பால் அரசியல்தெரிந்துசெயல்வகை 
471வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.பொருட்பால் அரசியல்வலியறிதல் 
472ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.பொருட்பால் அரசியல்வலியறிதல் 
473உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.பொருட்பால் அரசியல்வலியறிதல் 
474அமைந்துஆங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.பொருட்பால் அரசியல்வலியறிதல் 
475பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.பொருட்பால் அரசியல்வலியறிதல் 
476நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்.பொருட்பால் அரசியல்வலியறிதல் 
477ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி.பொருட்பால் அரசியல்வலியறிதல் 
478ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.பொருட்பால் அரசியல்வலியறிதல் 
479அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.பொருட்பால் அரசியல்வலியறிதல் 
480உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக் கெடும்.பொருட்பால் அரசியல்வலியறிதல் 
481பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.பொருட்பால் அரசியல்காலமறிதல் 
482பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு.பொருட்பால் அரசியல்காலமறிதல் 
483அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து  செயின்.பொருட்பால் அரசியல்காலமறிதல் 
484ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்.பொருட்பால் அரசியல்காலமறிதல் 
485காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.பொருட்பால் அரசியல்காலமறிதல் 
486ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து.பொருட்பால் அரசியல்காலமறிதல் 
487பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.பொருட்பால் அரசியல்காலமறிதல் 
488செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை.பொருட்பால் அரசியல்காலமறிதல் 
489எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல்.பொருட்பால் அரசியல்காலமறிதல் 
490கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த இடத்து.பொருட்பால் அரசியல்காலமறிதல் 
491தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது.பொருட்பால் அரசியல்இடனறிதல் 
492முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும்.பொருட்பால் அரசியல்இடனறிதல் 
493ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.பொருட்பால் அரசியல்இடனறிதல் 
494எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.பொருட்பால் அரசியல்இடனறிதல் 
495நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.பொருட்பால் அரசியல்இடனறிதல் 
496கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து.பொருட்பால் அரசியல்இடனறிதல் 
497அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்.பொருட்பால் அரசியல்இடனறிதல் 
498சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்.பொருட்பால் அரசியல்இடனறிதல் 
499சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.பொருட்பால் அரசியல்இடனறிதல் 
500காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாழ் முகத்த களிறு.பொருட்பால் அரசியல்இடனறிதல் 
501அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும்.பொருட்பால் அரசியல்தெரிந்துதெளிதல் 
502குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு.பொருட்பால் அரசியல்தெரிந்துதெளிதல் 
503அரிய கற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு.பொருட்பால் அரசியல்தெரிந்துதெளிதல் 
504குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.பொருட்பால் அரசியல்தெரிந்துதெளிதல் 
505பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.பொருட்பால் அரசியல்தெரிந்துதெளிதல் 
506அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி.பொருட்பால் அரசியல்தெரிந்துதெளிதல் 
507காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும்.பொருட்பால் அரசியல்தெரிந்துதெளிதல் 
508தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.பொருட்பால் அரசியல்தெரிந்துதெளிதல் 
509தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.பொருட்பால் அரசியல்தெரிந்துதெளிதல் 
510தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.பொருட்பால் அரசியல்தெரிந்துதெளிதல் 
511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.பொருட்பால் அரசியல்தெரிந்துவினையாடல் 
512வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை.பொருட்பால் அரசியல்தெரிந்துவினையாடல் 
513அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.பொருட்பால் அரசியல்தெரிந்துவினையாடல் 
514எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.பொருட்பால் அரசியல்தெரிந்துவினையாடல் 
515அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற்று அன்று.பொருட்பால் அரசியல்தெரிந்துவினையாடல் 
516செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்.பொருட்பால் அரசியல்தெரிந்துவினையாடல் 
517இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.பொருட்பால் அரசியல்தெரிந்துவினையாடல் 
518வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை அதற்குஉரிய னாகச் செயல்.பொருட்பால் அரசியல்தெரிந்துவினையாடல் 
519வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு.பொருட்பால் அரசியல்தெரிந்துவினையாடல் 
520நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு.பொருட்பால் அரசியல்தெரிந்துவினையாடல் 
521பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.பொருட்பால் அரசியல்சுற்றந்தழால் 
522விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா  ஆக்கம் பலவும் தரும்.பொருட்பால் அரசியல்சுற்றந்தழால் 
523அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடுஇன்றி நீர்நிறைந்து அற்று.பொருட்பால் அரசியல்சுற்றந்தழால் 
524சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்.பொருட்பால் அரசியல்சுற்றந்தழால் 
525கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்.பொருட்பால் அரசியல்சுற்றந்தழால் 
526பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்.பொருட்பால் அரசியல்சுற்றந்தழால் 
527காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள.பொருட்பால் அரசியல்சுற்றந்தழால் 
528பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.பொருட்பால் அரசியல்சுற்றந்தழால் 
529தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும்.பொருட்பால் அரசியல்சுற்றந்தழால் 
530உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத் திருந்து எண்ணிக் கொளல்.பொருட்பால் அரசியல்சுற்றந்தழால் 
531இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.பொருட்பால் அரசியல்பொச்சாவாமை 
532பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.பொருட்பால் அரசியல்பொச்சாவாமை 
533பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு.பொருட்பால் அரசியல்பொச்சாவாமை 
534அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப்பு     உடையார்க்கு நன்கு.பொருட்பால் அரசியல்பொச்சாவாமை 
535முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.பொருட்பால் அரசியல்பொச்சாவாமை 
536இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல்.பொருட்பால் அரசியல்பொச்சாவாமை 
537அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.பொருட்பால் அரசியல்பொச்சாவாமை 
538புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.பொருட்பால் அரசியல்பொச்சாவாமை 
539இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.பொருட்பால் அரசியல்பொச்சாவாமை 
540உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.பொருட்பால் அரசியல்பொச்சாவாமை 
541ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை.பொருட்பால் அரசியல்செங்கோன்மை 
542வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி.பொருட்பால் அரசியல்செங்கோன்மை 
543அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.பொருட்பால் அரசியல்செங்கோன்மை 
544குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.பொருட்பால் அரசியல்செங்கோன்மை 
545இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு.பொருட்பால் அரசியல்செங்கோன்மை 
546வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉம் கோடாது எனின்பொருட்பால் அரசியல்செங்கோன்மை 
547இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.பொருட்பால் அரசியல்செங்கோன்மை 
548எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.பொருட்பால் அரசியல்செங்கோன்மை 
549குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்.பொருட்பால் அரசியல்செங்கோன்மை 
550கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.பொருட்பால் அரசியல்செங்கோன்மை 
551கொலைமேற்கொண் டாரில் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.பொருட்பால் அரசியல்கொடுங்கோன்மை 
552வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.பொருட்பால் அரசியல்கொடுங்கோன்மை 
553நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்.பொருட்பால் அரசியல்கொடுங்கோன்மை 
554கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.பொருட்பால் அரசியல்கொடுங்கோன்மை 
555அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் நீர்அன்றே  செல்வத்தைத் தேய்க்கும் படைபொருட்பால் அரசியல்கொடுங்கோன்மை 
556மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளிபொருட்பால் அரசியல்கொடுங்கோன்மை 
557துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.பொருட்பால் அரசியல்கொடுங்கோன்மை 
558இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின்.பொருட்பால் அரசியல்கொடுங்கோன்மை 
559முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.பொருட்பால் அரசியல்கொடுங்கோன்மை 
560ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.பொருட்பால் அரசியல்கொடுங்கோன்மை 
561தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.பொருட்பால் அரசியல்வெருவந்தசெய்யாமை 
562கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்.பொருட்பால் அரசியல்வெருவந்தசெய்யாமை 
563வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.பொருட்பால் அரசியல்வெருவந்தசெய்யாமை 
564இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்.பொருட்பால் அரசியல்வெருவந்தசெய்யாமை 
565அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து.பொருட்பால் அரசியல்வெருவந்தசெய்யாமை 
566கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்.பொருட்பால் அரசியல்வெருவந்தசெய்யாமை 
567கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்.பொருட்பால் அரசியல்வெருவந்தசெய்யாமை 
568இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு.பொருட்பால் அரசியல்வெருவந்தசெய்யாமை 
569செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.பொருட்பால் அரசியல்வெருவந்தசெய்யாமை 
570கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.பொருட்பால் அரசியல்வெருவந்தசெய்யாமை 
571கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு.பொருட்பால் அரசியல்கண்ணோட்டம் 
572கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.பொருட்பால் அரசியல்கண்ணோட்டம் 
573பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.பொருட்பால் அரசியல்கண்ணோட்டம் 
574உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்.பொருட்பால் அரசியல்கண்ணோட்டம் 
575கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்பொருட்பால் அரசியல்கண்ணோட்டம் 
576மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்துகண் ணோடா தவர்.பொருட்பால் அரசியல்கண்ணோட்டம் 
577கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.பொருட்பால் அரசியல்கண்ணோட்டம் 
578கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.பொருட்பால் அரசியல்கண்ணோட்டம் 
579ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை.பொருட்பால் அரசியல்கண்ணோட்டம் 
580பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.பொருட்பால் அரசியல்கண்ணோட்டம் 
581ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.பொருட்பால் அரசியல்ஒற்றாடல் 
582எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.பொருட்பால் அரசியல்ஒற்றாடல் 
583ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல்.பொருட்பால் அரசியல்ஒற்றாடல் 
584வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.பொருட்பால் அரசியல்ஒற்றாடல் 
585கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.பொருட்பால் அரசியல்ஒற்றாடல் 
586துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று.பொருட்பால் அரசியல்ஒற்றாடல் 
587மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.பொருட்பால் அரசியல்ஒற்றாடல் 
588ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்.பொருட்பால் அரசியல்ஒற்றாடல் 
589ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்.பொருட்பால் அரசியல்ஒற்றாடல் 
590சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை.பொருட்பால் அரசியல்ஒற்றாடல் 
591உடைமை  எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார் உடையது உடையரோ மற்று.பொருட்பால் அரசியல்ஊக்கமுடைமை 
592ஊக்கம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.பொருட்பால் அரசியல்ஊக்கமுடைமை 
593ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துஉடை யார்.பொருட்பால் அரசியல்ஊக்கமுடைமை 
594ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை.பொருட்பால் அரசியல்ஊக்கமுடைமை 
595வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு.பொருட்பால் அரசியல்ஊக்கமுடைமை 
596உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.பொருட்பால் அரசியல்ஊக்கமுடைமை 
597சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு.பொருட்பால் அரசியல்ஊக்கமுடைமை 
598உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு.பொருட்பால் அரசியல்ஊக்கமுடைமை 
599பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூ/உம்  புலிதாக் குறின்.பொருட்பால் அரசியல்ஊக்கமுடைமை 
600உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்கள் ஆதலே வேறு.பொருட்பால் அரசியல்ஊக்கமுடைமை 
601குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.பொருட்பால் அரசியல்மடியின்மை 
602மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.பொருட்பால் அரசியல்மடியின்மை 
603மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து.பொருட்பால் அரசியல்மடியின்மை 
604குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்று இ லவர்க்கு.பொருட்பால் அரசியல்மடியின்மை 
605நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.பொருட்பால் அரசியல்மடியின்மை 
606படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.பொருட்பால் அரசியல்மடியின்மை 
607இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்று இ லவர்.பொருட்பால் அரசியல்மடியின்மை 
608மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.பொருட்பால் அரசியல்மடியின்மை 
609குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.பொருட்பால் அரசியல்மடியின்மை 
610மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு.பொருட்பால் அரசியல்மடியின்மை 
611அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.பொருட்பால் அரசியல்ஆள்வினையுடைமை 
612வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.பொருட்பால் அரசியல்ஆள்வினையுடைமை 
613தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.பொருட்பால் அரசியல்ஆள்வினையுடைமை 
614தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.பொருட்பால் அரசியல்ஆள்வினையுடைமை 
615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்.பொருட்பால் அரசியல்ஆள்வினையுடைமை 
616முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.பொருட்பால் அரசியல்ஆள்வினையுடைமை 
617மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள்.பொருட்பால் அரசியல்ஆள்வினையுடைமை 
618பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.பொருட்பால் அரசியல்ஆள்வினையுடைமை 
619தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.பொருட்பால் அரசியல்ஆள்வினையுடைமை 
620ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.பொருட்பால் அரசியல்ஆள்வினையுடைமை 
621இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்.பொருட்பால் அரசியல்இடுக்கணழியாமை 
622வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.பொருட்பால் அரசியல்இடுக்கணழியாமை 
623இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.பொருட்பால் அரசியல்இடுக்கணழியாமை 
624மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.பொருட்பால் அரசியல்இடுக்கணழியாமை 
625அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும்.பொருட்பால் அரசியல்இடுக்கணழியாமை 
626அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர்.பொருட்பால் அரசியல்இடுக்கணழியாமை 
627இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக் கைஆறாக் கொள்ளாதாம் மேல்.பொருட்பால் அரசியல்இடுக்கணழியாமை 
628இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.பொருட்பால் அரசியல்இடுக்கணழியாமை 
629இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.பொருட்பால் அரசியல்இடுக்கணழியாமை 
630இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு.பொருட்பால் அரசியல்இடுக்கணழியாமை 
631கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.பொருட்பால் அமைச்சியல்அமைச்சு 
632வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.பொருட்பால் அமைச்சியல்அமைச்சு 
633பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு.பொருட்பால் அமைச்சியல்அமைச்சு 
634தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு.பொருட்பால் அமைச்சியல்அமைச்சு 
635அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை.பொருட்பால் அமைச்சியல்அமைச்சு 
636மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை.பொருட்பால் அமைச்சியல்அமைச்சு 
637செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.பொருட்பால் அமைச்சியல்அமைச்சு 
638அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்.பொருட்பால் அமைச்சியல்அமைச்சு 
639பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.பொருட்பால் அமைச்சியல்அமைச்சு 
640முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.பொருட்பால் அமைச்சியல்அமைச்சு 
641நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.பொருட்பால் அமைச்சியல்சொல்வன்மை 
642ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.பொருட்பால் அமைச்சியல்சொல்வன்மை 
643கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.பொருட்பால் அமைச்சியல்சொல்வன்மை 
644திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.பொருட்பால் அமைச்சியல்சொல்வன்மை 
645சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.பொருட்பால் அமைச்சியல்சொல்வன்மை 
646வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள்.பொருட்பால் அமைச்சியல்சொல்வன்மை 
647சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.பொருட்பால் அமைச்சியல்சொல்வன்மை 
648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.பொருட்பால் அமைச்சியல்சொல்வன்மை 
649பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு  அற்ற சிலசொல்லல் தேற்றாது அவர்.பொருட்பால் அமைச்சியல்சொல்வன்மை 
650இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துஉரையா தார்.பொருட்பால் அமைச்சியல்சொல்வன்மை 
651துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும்.பொருட்பால் அமைச்சியல்வினைத்தூய்மை 
652என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.பொருட்பால் அமைச்சியல்வினைத்தூய்மை 
653ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.பொருட்பால் அமைச்சியல்வினைத்தூய்மை 
654இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி அவர்.பொருட்பால் அமைச்சியல்வினைத்தூய்மை 
655எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று.பொருட்பால் அமைச்சியல்வினைத்தூய்மை 
656ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.பொருட்பால் அமைச்சியல்வினைத்தூய்மை 
657பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.பொருட்பால் அமைச்சியல்வினைத்தூய்மை 
658கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்.பொருட்பால் அமைச்சியல்வினைத்தூய்மை 
659அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பின்பயக்கும் நற்பால் அவை.பொருட்பால் அமைச்சியல்வினைத்தூய்மை 
660சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ அற்று.பொருட்பால் அமைச்சியல்வினைத்தூய்மை 
661வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றவை எல்லாம் பிற.பொருட்பால் அமைச்சியல்வினைத்திட்பம் 
662ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறுஎன்ப  ஆய்ந்தவர் கோள்.பொருட்பால் அமைச்சியல்வினைத்திட்பம் 
663கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்.பொருட்பால் அமைச்சியல்வினைத்திட்பம் 
664சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.பொருட்பால் அமைச்சியல்வினைத்திட்பம் 
665வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும்.பொருட்பால் அமைச்சியல்வினைத்திட்பம் 
666எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.பொருட்பால் அமைச்சியல்வினைத்திட்பம் 
667உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.பொருட்பால் அமைச்சியல்வினைத்திட்பம் 
668கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்.பொருட்பால் அமைச்சியல்வினைத்திட்பம் 
669துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.பொருட்பால் அமைச்சியல்வினைத்திட்பம் 
670எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு.பொருட்பால் அமைச்சியல்வினைத்திட்பம் 
671சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.பொருட்பால் அமைச்சியல்வினைசெயல்வகை 
672தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.பொருட்பால் அமைச்சியல்வினைசெயல்வகை 
673ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.பொருட்பால் அமைச்சியல்வினைசெயல்வகை 
674வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்.பொருட்பால் அமைச்சியல்வினைசெயல்வகை 
675பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.பொருட்பால் அமைச்சியல்வினைசெயல்வகை 
676முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல்.பொருட்பால் அமைச்சியல்வினைசெயல்வகை 
677செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.பொருட்பால் அமைச்சியல்வினைசெயல்வகை 
678வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.பொருட்பால் அமைச்சியல்வினைசெயல்வகை 
679நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.பொருட்பால் அமைச்சியல்வினைசெயல்வகை 
680உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து.பொருட்பால் அமைச்சியல்வினைசெயல்வகை 
681அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் பண்புடைமை தூதுஉரைப்பான் பண்பு.பொருட்பால் அமைச்சியல்தூது 
682அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு இன்றி அமையாத மூன்று.பொருட்பால் அமைச்சியல்தூது 
683நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு.பொருட்பால் அமைச்சியல்தூது 
684அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு.பொருட்பால் அமைச்சியல்தூது 
685தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது.பொருட்பால் அமைச்சியல்தூது 
686கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது.பொருட்பால் அமைச்சியல்தூது 
687கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை.பொருட்பால் அமைச்சியல்தூது 
688தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.பொருட்பால் அமைச்சியல்தூது 
689விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன்பொருட்பால் அமைச்சியல்தூது 
690இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது.பொருட்பால் அமைச்சியல்தூது 
691அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.பொருட்பால் அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல் 
692மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும்.பொருட்பால் அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல் 
693போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.பொருட்பால் அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல் 
694செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல் ஆன்ற பெரியார் அகத்துபொருட்பால் அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல் 
695எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை.பொருட்பால் அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல் 
696குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்.பொருட்பால் அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல் 
697வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்.பொருட்பால் அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல் 
698இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.பொருட்பால் அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல் 
699கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்குஅற்ற காட்சி யவர்.பொருட்பால் அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல் 
700பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.பொருட்பால் அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல் 
701கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி.பொருட்பால் அமைச்சியல்குறிப்பறிதல் 
702ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.பொருட்பால் அமைச்சியல்குறிப்பறிதல் 
703குறிப்பின்  குறிப்புஉணர் வாரை உறுப்பினுள் யாதும் கொடுத்தும் கொளல்.பொருட்பால் அமைச்சியல்குறிப்பறிதல் 
704குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்புஓர் அனையரால் வேறு.பொருட்பால் அமைச்சியல்குறிப்பறிதல் 
705குறிப்பின்  குறிப்புஉணர் வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்?பொருட்பால் அமைச்சியல்குறிப்பறிதல் 
706அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.பொருட்பால் அமைச்சியல்குறிப்பறிதல் 
707முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்.பொருட்பால் அமைச்சியல்குறிப்பறிதல் 
708முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின்.பொருட்பால் அமைச்சியல்குறிப்பறிதல் 
709பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்.பொருட்பால் அமைச்சியல்குறிப்பறிதல் 
710நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற.பொருட்பால் அமைச்சியல்குறிப்பறிதல் 
711அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.பொருட்பால் அமைச்சியல்அவையறிதல் 
712இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்.பொருட்பால் அமைச்சியல்அவையறிதல் 
713அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல்.பொருட்பால் அமைச்சியல்அவையறிதல் 
714ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்.பொருட்பால் அமைச்சியல்அவையறிதல் 
715நன்றுஎன்று அவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.பொருட்பால் அமைச்சியல்அவையறிதல் 
716ஆற்றின் நிலைதளர்ந்து  அற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.பொருட்பால் அமைச்சியல்அவையறிதல் 
717கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடுஅறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து.பொருட்பால் அமைச்சியல்அவையறிதல் 
718உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று.பொருட்பால் அமைச்சியல்அவையறிதல் 
719புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள் நன்குசெலச் சொல்லு வார்.பொருட்பால் அமைச்சியல்அவையறிதல் 
720அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல்.பொருட்பால் அமைச்சியல்அவையறிதல் 
721வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர்.பொருட்பால் அமைச்சியல்அவையஞ்சாமை 
722கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.பொருட்பால் அமைச்சியல்அவையஞ்சாமை 
723பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்.பொருட்பால் அமைச்சியல்அவையஞ்சாமை 
724கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.பொருட்பால் அமைச்சியல்அவையஞ்சாமை 
725ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு.பொருட்பால் அமைச்சியல்அவையஞ்சாமை 
726வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு.பொருட்பால் அமைச்சியல்அவையஞ்சாமை 
727பகைஅகத்துப் பேடிகை ஒள்வாள் அவைஅகத்து அஞ்சும் அவன்கற்ற நூல்.பொருட்பால் அமைச்சியல்அவையஞ்சாமை 
728பல்லவை கற்றும் பயம்இலரே நல்அவையுள் நன்கு செலச்சொல்லா தார்.பொருட்பால் அமைச்சியல்அவையஞ்சாமை 
729கல்லா தவரின் கடைஎன்ப கற்றுஅறிந்தும் நல்லார் அவைஅஞ்சு வார்.பொருட்பால் அமைச்சியல்அவையஞ்சாமை 
730உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்.பொருட்பால் அமைச்சியல்அவையஞ்சாமை 
731தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.பொருட்பால் அரணியல்நாடு 
732பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி அரும்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.பொருட்பால் அரணியல்நாடு 
733பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு.பொருட்பால் அரணியல்நாடு 
734உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு.பொருட்பால் அரணியல்நாடு 
735பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு.பொருட்பால் அரணியல்நாடு 
736கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளம்குன்றா நாடுஎன்ப  நாட்டின் தலை.பொருட்பால் அரணியல்நாடு 
737இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.பொருட்பால் அரணியல்நாடு 
738பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து.பொருட்பால் அரணியல்நாடு 
739நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளம்தரும் நாடு.பொருட்பால் அரணியல்நாடு 
740ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே வேந்துஅமைவு இல்லாத நாடு.பொருட்பால் அரணியல்நாடு 
741ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித் தன்  போற்று பவர்க்கும் பொருள்.பொருட்பால் அரணியல்அரண் 
742மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண்.பொருட்பால் அரணியல்அரண் 
743உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்.பொருட்பால் அரணியல்அரண் 
744சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண்.பொருட்பால் அரணியல்அரண் 
745கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார் நிலைக்குஎளிதாம் நீரது அரண்.பொருட்பால் அரணியல்அரண் 
746எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும் நல்ஆள் உடையது அரண்.பொருட்பால் அரணியல்அரண் 
747முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் பற்றற்கு அரியது அரண்.பொருட்பால் அரணியல்அரண் 
748முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப் பற்றியார் வெல்வது அரண்.பொருட்பால் அரணியல்அரண் 
749முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறுஎய்தி மாண்டது அரண்.பொருட்பால் அரணியல்அரண் 
750எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண்.பொருட்பால் அரணியல்அரண் 
751பொருள் அல்லவரைப் பொருள்ஆகச் செய்யும் பொருள்அல்லது இல்லை பொருள்.பொருட்பால் கூழியல்பொருள்செயல்வகை 
752இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.பொருட்பால் கூழியல்பொருள்செயல்வகை 
752பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று.பொருட்பால் கூழியல்பொருள்செயல்வகை 
754அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள்.பொருட்பால் கூழியல்பொருள்செயல்வகை 
755அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.பொருட்பால் கூழியல்பொருள்செயல்வகை 
756உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்.பொருட்பால் கூழியல்பொருள்செயல்வகை 
757அருள்என்னும் அன்ப ஈன் குழவி பொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு.பொருட்பால் கூழியல்பொருள்செயல்வகை 
758குன்றுஏறி யானைப்போர் கண்டுஅற்றுஆல் தன்கைத்துஒன்று உண்டாகச் செய்வான் வினை.பொருட்பால் கூழியல்பொருள்செயல்வகை 
759செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும் எஃகுஅதனில் கூரியது இல்.பொருட்பால் கூழியல்பொருள்செயல்வகை 
760ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு.பொருட்பால் கூழியல்பொருள்செயல்வகை 
761உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை.பொருட்பால் படையியல்படைமாட்சி 
762உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடத்துத் தொல்படைக் கல்லால் அரிது.பொருட்பால் படையியல்படைமாட்சி 
763ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.பொருட்பால் படையியல்படைமாட்சி 
764அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்த வன்கண் அதுவே படை.பொருட்பால் படையியல்படைமாட்சி 
765கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.பொருட்பால் படையியல்படைமாட்சி 
766மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.பொருட்பால் படையியல்படைமாட்சி 
767தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து.பொருட்பால் படையியல்படைமாட்சி 
768அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்.பொருட்பால் படையியல்படைமாட்சி 
769சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.பொருட்பால் படையியல்படைமாட்சி 
770நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்.பொருட்பால் படையியல்படைமாட்சி 
771என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர்.பொருட்பால் படையியல்படைச்செருக்கு 
772கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.பொருட்பால் படையியல்படைச்செருக்கு 
773பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு.பொருட்பால் படையியல்படைச்செருக்கு 
774கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.பொருட்பால் படையியல்படைச்செருக்கு 
775விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின் ஓட்டுஅன்றோ வன்கண் அவர்க்குபொருட்பால் படையியல்படைச்செருக்கு 
776விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து.பொருட்பால் படையியல்படைச்செருக்கு 
777சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து.பொருட்பால் படையியல்படைச்செருக்கு 
778உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்.பொருட்பால் படையியல்படைச்செருக்கு 
779இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்.பொருட்பால் படையியல்படைச்செருக்கு 
780புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து.பொருட்பால் படையியல்படைச்செருக்கு 
781செயற்குஅரிய யா உள நட்பின் அதுபோல் வினைக்கரிய யா உள காப்பு.பொருட்பால் நட்பியல்நட்பு 
782நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு.பொருட்பால் நட்பியல்நட்பு 
783நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.பொருட்பால் நட்பியல்நட்பு 
784நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தல் பொருட்டு.பொருட்பால் நட்பியல்நட்பு 
785புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.பொருட்பால் நட்பியல்நட்பு 
786முகநக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.பொருட்பால் நட்பியல்நட்பு 
787அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.பொருட்பால் நட்பியல்நட்பு 
788உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.பொருட்பால் நட்பியல்நட்பு 
789நட்பிற்கு வீற்று இருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.பொருட்பால் நட்பியல்நட்பு 
790இனையர் இவர் எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு.பொருட்பால் நட்பியல்நட்பு 
791நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின் வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு.பொருட்பால் நட்பியல்நட்பாராய்தல் 
792ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்.பொருட்பால் நட்பியல்நட்பாராய்தல் 
793குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்துயாக்க நட்பு.பொருட்பால் நட்பியல்நட்பாராய்தல் 
794குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.பொருட்பால் நட்பியல்நட்பாராய்தல் 
795அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.பொருட்பால் நட்பியல்நட்பாராய்தல் 
796கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.பொருட்பால் நட்பியல்நட்பாராய்தல் 
797ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.பொருட்பால் நட்பியல்நட்பாராய்தல் 
798உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு.பொருட்பால் நட்பியல்நட்பாராய்தல் 
799கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை உள்ளினும் உள்ளம் சுடும்.பொருட்பால் நட்பியல்நட்பாராய்தல் 
800மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.பொருட்பால் நட்பியல்நட்பாராய்தல் 
801பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.பொருட்பால் நட்பியல்பழைமை 
802நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.பொருட்பால் நட்பியல்பழைமை 
803பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை செய்துஆங்கு அமையாக் கடை.பொருட்பால் நட்பியல்பழைமை 
804விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்.பொருட்பால் நட்பியல்பழைமை 
805பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்.பொருட்பால் நட்பியல்பழைமை 
806எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.பொருட்பால் நட்பியல்பழைமை 
807அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர்.பொருட்பால் நட்பியல்பழைமை 
808கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள்இழுக்கம் நட்டார் செயின்.பொருட்பால் நட்பியல்பழைமை 
809கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு.பொருட்பால் நட்பியல்பழைமை 
810விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.பொருட்பால் நட்பியல்பழைமை 
811பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.பொருட்பால் நட்பியல்தீ நட்பு 
812உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்?பொருட்பால் நட்பியல்தீ நட்பு 
813உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.பொருட்பால் நட்பியல்தீ நட்பு 
814அமர்அகத்து ஆற்றுஅறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் தனிமை தலை.பொருட்பால் நட்பியல்தீ நட்பு 
815செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று.பொருட்பால் நட்பியல்தீ நட்பு 
816பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்.பொருட்பால் நட்பியல்தீ நட்பு 
817நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.பொருட்பால் நட்பியல்தீ நட்பு 
818ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.பொருட்பால் நட்பியல்தீ நட்பு 
819கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.பொருட்பால் நட்பியல்தீ நட்பு 
820எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு.பொருட்பால் நட்பியல்தீ நட்பு 
821சீர்இடம் காணின் எறிதற்குப் பட் டடை நேரா நிரந்தவர் நட்பு.பொருட்பால் நட்பியல்கூடாநட்பு 
822இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்.பொருட்பால் நட்பியல்கூடாநட்பு 
823பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.பொருட்பால் நட்பியல்கூடாநட்பு 
824முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப் படும்.பொருட்பால் நட்பியல்கூடாநட்பு 
825மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று.பொருட்பால் நட்பியல்கூடாநட்பு 
826நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்.பொருட்பால் நட்பியல்கூடாநட்பு 
827சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்.பொருட்பால் நட்பியல்கூடாநட்பு 
828தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.பொருட்பால் நட்பியல்கூடாநட்பு 
829மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று.பொருட்பால் நட்பியல்கூடாநட்பு 
830பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்.பொருட்பால் நட்பியல்கூடாநட்பு 
831பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.பொருட்பால் நட்பியல்பேதைமை 
832பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல்.பொருட்பால் நட்பியல்பேதைமை 
833நாணாமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும் பேணாமை பேதை தொழில்பொருட்பால் நட்பியல்பேதைமை 
834ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப் பேதையின் பேதையார் இல்.பொருட்பால் நட்பியல்பேதைமை 
835ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு.பொருட்பால் நட்பியல்பேதைமை 
836பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப் பேதை வினைமேற் கொளின்.பொருட்பால் நட்பியல்பேதைமை 
837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை.பொருட்பால் நட்பியல்பேதைமை 
838மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.பொருட்பால் நட்பியல்பேதைமை 
839பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதுஒன்று இல்.பொருட்பால் நட்பியல்பேதைமை 
840கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.பொருட்பால் நட்பியல்பேதைமை 
841அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை இன்மையா வையாது உலகுபொருட்பால் நட்பியல்புல்லறிவாண்மை 
842அறிவுஇலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம்.பொருட்பால் நட்பியல்புல்லறிவாண்மை 
843அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.பொருட்பால் நட்பியல்புல்லறிவாண்மை 
844வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.பொருட்பால் நட்பியல்புல்லறிவாண்மை 
845கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற வல்லதூஉம் ஐயம் தரும்.பொருட்பால் நட்பியல்புல்லறிவாண்மை 
846அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.பொருட்பால் நட்பியல்புல்லறிவாண்மை 
847அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெரும் மிறை தானே தனக்கு.பொருட்பால் நட்பியல்புல்லறிவாண்மை 
848ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய்.பொருட்பால் நட்பியல்புல்லறிவாண்மை 
849காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.பொருட்பால் நட்பியல்புல்லறிவாண்மை 
850உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.பொருட்பால் நட்பியல்புல்லறிவாண்மை 
851இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்புஇன்மை பாரிக்கும் நோய்.பொருட்பால் நட்பியல்இகல் 
852பகல்கருதிப் பற்றார் செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.பொருட்பால் நட்பியல்இகல் 
853இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்  தாவில் விளக்கம் தரும்.பொருட்பால் நட்பியல்இகல் 
854இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.பொருட்பால் நட்பியல்இகல் 
855இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர்.பொருட்பால் நட்பியல்இகல் 
856இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.பொருட்பால் நட்பியல்இகல் 
857மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்.பொருட்பால் நட்பியல்இகல் 
858இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு.பொருட்பால் நட்பியல்இகல் 
859இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு.பொருட்பால் நட்பியல்இகல் 
860இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு.பொருட்பால் நட்பியல்இகல் 
861வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.பொருட்பால் நட்பியல்பகைமாட்சி 
862அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு.பொருட்பால் நட்பியல்பகைமாட்சி 
863அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.பொருட்பால் நட்பியல்பகைமாட்சி 
864நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது.பொருட்பால் நட்பியல்பகைமாட்சி 
865வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது.பொருட்பால் நட்பியல்பகைமாட்சி 
866காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.பொருட்பால் நட்பியல்பகைமாட்சி 
867கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.பொருட்பால் நட்பியல்பகைமாட்சி 
868குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனன்இலனாம் ஏமாப் புடைத்து.பொருட்பால் நட்பியல்பகைமாட்சி 
869செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின்.பொருட்பால் நட்பியல்பகைமாட்சி 
870கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி.பொருட்பால் நட்பியல்பகைமாட்சி 
871பகைஎன்னும் பண்பில் அதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.பொருட்பால் நட்பியல்பகைத்திறந்தெரிதல் 
872வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.பொருட்பால் நட்பியல்பகைத்திறந்தெரிதல் 
873ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.பொருட்பால் நட்பியல்பகைத்திறந்தெரிதல் 
874பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு.பொருட்பால் நட்பியல்பகைத்திறந்தெரிதல் 
875தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.பொருட்பால் நட்பியல்பகைத்திறந்தெரிதல் 
876தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.பொருட்பால் நட்பியல்பகைத்திறந்தெரிதல் 
877நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து.பொருட்பால் நட்பியல்பகைத்திறந்தெரிதல் 
878வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு.பொருட்பால் நட்பியல்பகைத்திறந்தெரிதல் 
879இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து.பொருட்பால் நட்பியல்பகைத்திறந்தெரிதல் 
880உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்.பொருட்பால் நட்பியல்பகைத்திறந்தெரிதல் 
881நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.பொருட்பால் நட்பியல்உட்பகை 
882வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.பொருட்பால் நட்பியல்உட்பகை 
883உள்பகை அஞ்சித் தன் காக்க உலைவுஇடத்து மண்பகையின் மாணத் தெறும்.பொருட்பால் நட்பியல்உட்பகை 
884மனம்மாணா உள்பகை தோன்றின் இனம்மாணா ஏதம் பலவும் தரும்.பொருட்பால் நட்பியல்உட்பகை 
885உறல்முறையான் உள்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்.பொருட்பால் நட்பியல்உட்பகை 
886ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது.பொருட்பால் நட்பியல்உட்பகை 
887செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உள்பகை உற்ற குடி.பொருட்பால் நட்பியல்உட்பகை 
888அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உள்பகை உற்ற குடி.பொருட்பால் நட்பியல்உட்பகை 
889எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உள்பகை உள்ளதாம் கேடு.பொருட்பால் நட்பியல்உட்பகை 
890உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந்து அற்று.பொருட்பால் நட்பியல்உட்பகை 
891ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.பொருட்பால் நட்பியல்பெரியாரைப் பிழையாமை 
892பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும்.பொருட்பால் நட்பியல்பெரியாரைப் பிழையாமை 
893கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு.பொருட்பால் நட்பியல்பெரியாரைப் பிழையாமை 
894கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்.பொருட்பால் நட்பியல்பெரியாரைப் பிழையாமை 
895யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்.பொருட்பால் நட்பியல்பெரியாரைப் பிழையாமை 
896எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.பொருட்பால் நட்பியல்பெரியாரைப் பிழையாமை 
897வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்.பொருட்பால் நட்பியல்பெரியாரைப் பிழையாமை 
898குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து.பொருட்பால் நட்பியல்பெரியாரைப் பிழையாமை 
899ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்.பொருட்பால் நட்பியல்பெரியாரைப் பிழையாமை 
900இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்.பொருட்பால் நட்பியல்பெரியாரைப் பிழையாமை 
901மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது.பொருட்பால் நட்பியல்பெண்வழிச்சேறல் 
902பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்.பொருட்பால் நட்பியல்பெண்வழிச்சேறல் 
903இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்.பொருட்பால் நட்பியல்பெண்வழிச்சேறல் 
904மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் வினையாண்மை வீறுஎய்தல் இன்று.பொருட்பால் நட்பியல்பெண்வழிச்சேறல் 
905இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்.பொருட்பால் நட்பியல்பெண்வழிச்சேறல் 
906இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமைஆர்தோள் அஞ்சு பவர்.பொருட்பால் நட்பியல்பெண்வழிச்சேறல் 
907பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து.பொருட்பால் நட்பியல்பெண்வழிச்சேறல் 
908நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட் டாங்கு ஒழுகு பவர்.பொருட்பால் நட்பியல்பெண்வழிச்சேறல் 
909அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல்.பொருட்பால் நட்பியல்பெண்வழிச்சேறல் 
910எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.பொருட்பால் நட்பியல்பெண்வழிச்சேறல் 
911அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்.பொருட்பால் நட்பியல்வரைவின்மகளிர் 
912பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்புஇல் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்.பொருட்பால் நட்பியல்வரைவின்மகளிர் 
913பொருள்பெண்டிர்  பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று.பொருட்பால் நட்பியல்வரைவின்மகளிர் 
914பொருள்பொருளார்  புன்நலம்     தோயார் அருள்பொருள் ஆயும் அறிவி னவர்.பொருட்பால் நட்பியல்வரைவின்மகளிர் 
915பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்.பொருட்பால் நட்பியல்வரைவின்மகளிர் 
916தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள்.பொருட்பால் நட்பியல்வரைவின்மகளிர் 
917நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சின்  பேணிப் புணர்பவர் தோள்.பொருட்பால் நட்பியல்வரைவின்மகளிர் 
918ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப மாய மகளிர் முயக்கு.பொருட்பால் நட்பியல்வரைவின்மகளிர் 
919வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு.பொருட்பால் நட்பியல்வரைவின்மகளிர் 
920இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.பொருட்பால் நட்பியல்வரைவின்மகளிர் 
921உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்.பொருட்பால் நட்பியல்கள்ளுண்ணாமை 
922உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்.பொருட்பால் நட்பியல்கள்ளுண்ணாமை 
923ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.பொருட்பால் நட்பியல்கள்ளுண்ணாமை 
924நாண்என்னும் நல்ஆள் புறம்கொடுக்கும் கள்என்னும் பேணாப் பெரும்குற்றத் தார்க்கு.பொருட்பால் நட்பியல்கள்ளுண்ணாமை 
925கையறி யாமை உடைத்தே பொருட்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.பொருட்பால் நட்பியல்கள்ளுண்ணாமை 
926துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.பொருட்பால் நட்பியல்கள்ளுண்ணாமை 
927உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர்பொருட்பால் நட்பியல்கள்ளுண்ணாமை 
928களித்துஅறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.பொருட்பால் நட்பியல்கள்ளுண்ணாமை 
929களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று.பொருட்பால் நட்பியல்கள்ளுண்ணாமை 
930கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.பொருட்பால் நட்பியல்கள்ளுண்ணாமை 
931வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டில்பொன்     மீன்விழுங்கி அற்று.பொருட்பால் நட்பியல்சூது 
932ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் நன்றுஎய்தி வாழ்வதுஓர் ஆறு.பொருட்பால் நட்பியல்சூது 
933உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்  போஒய்ப் புறமே படும்.பொருட்பால் நட்பியல்சூது 
934சிறுமை பலசெய்து சீரழ஧க்கும் சூதின் வறுமை தருவதுஒன்று இல்.பொருட்பால் நட்பியல்சூது 
935கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.பொருட்பால் நட்பியல்சூது 
936அகடுஆரார் அல்லல் உழப்பர் சூதென்னும் முகடியான் மூடப்பட் டார்.பொருட்பால் நட்பியல்சூது 
937பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.பொருட்பால் நட்பியல்சூது 
938பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது.பொருட்பால் நட்பியல்சூது 
939உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின்.பொருட்பால் நட்பியல்சூது 
940இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்.பொருட்பால் நட்பியல்சூது 
941மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.பொருட்பால் நட்பியல்மருந்து 
942மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.பொருட்பால் நட்பியல்மருந்து 
943அற்றால் அளவுஅறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.பொருட்பால் நட்பியல்மருந்து 
944அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து.பொருட்பால் நட்பியல்மருந்து 
945மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு.பொருட்பால் நட்பியல்மருந்து 
946இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்.பொருட்பால் நட்பியல்மருந்து 
947தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோய்அளவு இன்றிப் படும்.பொருட்பால் நட்பியல்மருந்து 
948நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.பொருட்பால் நட்பியல்மருந்து 
949உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்.பொருட்பால் நட்பியல்மருந்து 
950உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து.பொருட்பால் நட்பியல்மருந்து 
951இல்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு.பொருட்பால் குடியியல்குடிமை 
952ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்.பொருட்பால் குடியியல்குடிமை 
953நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.பொருட்பால் குடியியல்குடிமை 
954அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.பொருட்பால் குடியியல்குடிமை 
955வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று.பொருட்பால் குடியியல்குடிமை 
956சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு  அற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார்.பொருட்பால் குடியியல்குடிமை 
957குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.பொருட்பால் குடியியல்குடிமை 
958நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்.பொருட்பால் குடியியல்குடிமை 
959நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.பொருட்பால் குடியியல்குடிமை 
960நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.பொருட்பால் குடியியல்குடிமை 
961இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்.பொருட்பால் குடியியல்மானம் 
962சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்.பொருட்பால் குடியியல்மானம் 
963பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு.பொருட்பால் குடியியல்மானம் 
964தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.பொருட்பால் குடியியல்மானம் 
965குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்.பொருட்பால் குடியியல்மானம் 
966புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை.பொருட்பால் குடியியல்மானம் 
967ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று.பொருட்பால் குடியியல்மானம் 
968மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து.பொருட்பால் குடியியல்மானம் 
969மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்.பொருட்பால் குடியியல்மானம் 
970இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.பொருட்பால் குடியியல்மானம் 
971ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல்.பொருட்பால் குடியியல்பெருமை 
972பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.பொருட்பால் குடியியல்பெருமை 
973மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும் கீழ்அல்லார் கீழ்அல் லவர்.பொருட்பால் குடியியல்பெருமை 
974ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.பொருட்பால் குடியியல்பெருமை 
975பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.பொருட்பால் குடியியல்பெருமை 
976சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள்வேம் என்னும் நோக்கு.பொருட்பால் குடியியல்பெருமை 
977இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான் சீர் அல் லவர்கண் படின்.பொருட்பால் குடியியல்பெருமை 
978பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.பொருட்பால் குடியியல்பெருமை 
979பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.பொருட்பால் குடியியல்பெருமை 
980அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்.பொருட்பால் குடியியல்பெருமை 
981கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.பொருட்பால் குடியியல்சான்றாண்மை 
982குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.பொருட்பால் குடியியல்சான்றாண்மை 
983அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு     ஊன்றிய தூண்.பொருட்பால் குடியியல்சான்றாண்மை 
984கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.பொருட்பால் குடியியல்சான்றாண்மை 
985ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை.பொருட்பால் குடியியல்சான்றாண்மை 
986சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்.பொருட்பால் குடியியல்சான்றாண்மை 
987இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.பொருட்பால் குடியியல்சான்றாண்மை 
988இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்.பொருட்பால் குடியியல்சான்றாண்மை 
989ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்.பொருட்பால் குடியியல்சான்றாண்மை 
990சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை.பொருட்பால் குடியியல்சான்றாண்மை 
991எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.பொருட்பால் குடியியல்பண்புடைமை 
992அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.பொருட்பால் குடியியல்பண்புடைமை 
993உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.பொருட்பால் குடியியல்பண்புடைமை 
994நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார் பண்புபா ராட்டும் உலகு.பொருட்பால் குடியியல்பண்புடைமை 
995நகைஉள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புஉள பாடுஅறிவார் மாட்டு.பொருட்பால் குடியியல்பண்புடைமை 
996பண்புடையார்ப் பட்டுஉண்டு  உலகம் அதுஇன்றேல் மண் புக்கு மாய்வது மன்.பொருட்பால் குடியியல்பண்புடைமை 
997அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கள்பண்பு  இல்லா தவர்.பொருட்பால் குடியியல்பண்புடைமை 
998நண்புஆற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும் பண்புஆற்றார் ஆதல் கடை.பொருட்பால் குடியியல்பண்புடைமை 
999நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம் பகலும்பால் பட்டன்று இருள்.பொருட்பால் குடியியல்பண்புடைமை 
1000பண்புஇலான் பெற்ற பெரும்செல்வம் நன்பால் கலம்தீமையால் திரிந்து அற்று.பொருட்பால் குடியியல்பண்புடைமை 
1001வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்.பொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம் 
1002பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்புபொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம் 
1003ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை.பொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம் 
1004எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.பொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம் 
1005கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண்டு ஆயினும் இல்.பொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம் 
1006ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான்.பொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம் 
1007அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத்து அற்று.பொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம் 
1008நச்சப் படாஅதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத்து அற்று.பொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம் 
1009அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்.பொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம் 
1010சீர்உடைச் செல்வர் சிறுதுனி மாரி வறம்கூர்ந்து அனையது உடைத்து.பொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம் 
1011கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற.பொருட்பால் குடியியல்நாணுடைமை 
1012ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம்  வேறுஅல்ல நாண்உடைமை மாந்தர் சிறப்பு.பொருட்பால் குடியியல்நாணுடைமை 
1013ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு.பொருட்பால் குடியியல்நாணுடைமை 
1014அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல் பிணிஅன்றோ பீடு நடை.பொருட்பால் குடியியல்நாணுடைமை 
1015பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு.பொருட்பால் குடியியல்நாணுடைமை 
1016நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்.பொருட்பால் குடியியல்நாணுடைமை 
1017நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர்.பொருட்பால் குடியியல்நாணுடைமை 
1018பிறர்நாணத் தக்கது தான்நாணான்  ஆயின் அறம்நாணத் தக்கது உடைத்து.பொருட்பால் குடியியல்நாணுடைமை 
1019குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும் நாண்இன்மை நின்றக் கடை.பொருட்பால் குடியியல்நாணுடைமை 
1020நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று.பொருட்பால் குடியியல்நாணுடைமை 
1021கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்.பொருட்பால் குடியியல்குடிசெயல்வகை 
1022ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி.பொருட்பால் குடியியல்குடிசெயல்வகை 
1023குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.பொருட்பால் குடியியல்குடிசெயல்வகை 
1024சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.பொருட்பால் குடியியல்குடிசெயல்வகை 
1025குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.பொருட்பால் குடியியல்குடிசெயல்வகை 
1026நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.பொருட்பால் குடியியல்குடிசெயல்வகை 
1027அமரகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.பொருட்பால் குடியியல்குடிசெயல்வகை 
1028குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்.பொருட்பால் குடியியல்குடிசெயல்வகை 
1029இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு.பொருட்பால் குடியியல்குடிசெயல்வகை 
1030இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும் நல்ஆள் இலாத குடி.பொருட்பால் குடியியல்குடிசெயல்வகை 
1031சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.பொருட்பால் குடியியல்உழவு 
1032உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.பொருட்பால் குடியியல்உழவு 
1033உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம் தொழுதுஉண்டு பின்செல் பவர்.பொருட்பால் குடியியல்உழவு 
1034பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுஉடை நீழ லவர்.பொருட்பால் குடியியல்உழவு 
1035இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது கைசெய்துஊண் மாலை யவர்.பொருட்பால் குடியியல்உழவு 
1036உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை.பொருட்பால் குடியியல்உழவு 
1037தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும் வேண்டாது சாலப் படும்.பொருட்பால் குடியியல்உழவு 
1038ஏரினும் நன்றால் எருஇடுதல்  கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.பொருட்பால் குடியியல்உழவு 
1039செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்.பொருட்பால் குடியியல்உழவு 
1040இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.பொருட்பால் குடியியல்உழவு 
1041இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.பொருட்பால் குடியியல்நல்குரவு 
1042இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.பொருட்பால் குடியியல்நல்குரவு 
1043தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை.பொருட்பால் குடியியல்நல்குரவு 
1044இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும்.பொருட்பால் குடியியல்நல்குரவு 
1045நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.பொருட்பால் குடியியல்நல்குரவு 
1046நல்பொருள் நன்குஉணர்ந்து  சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.பொருட்பால் குடியியல்நல்குரவு 
1047அறம்சாரா நல்குரவு ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப் படும்.பொருட்பால் குடியியல்நல்குரவு 
1048இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.பொருட்பால் குடியியல்நல்குரவு 
1049நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.பொருட்பால் குடியியல்நல்குரவு 
1050துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று.பொருட்பால் குடியியல்நல்குரவு 
1051இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று.பொருட்பால் குடியியல்இரவு 
1052இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்.பொருட்பால் குடியியல்இரவு 
1053கரப்ப இலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து.பொருட்பால் குடியியல்இரவு 
1054இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு.பொருட்பால் குடியியல்இரவு 
1055கரப்புஇலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது.பொருட்பால் குடியியல்இரவு 
1056கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்.பொருட்பால் குடியியல்இரவு 
1057இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து.பொருட்பால் குடியியல்இரவு 
1058இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மா ஞாலம் மரப்பாவை சென்றுவந்து அற்று.பொருட்பால் குடியியல்இரவு 
1059ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை.பொருட்பால் குடியியல்இரவு 
1060இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி.பொருட்பால் குடியியல்இரவு 
1061கரவாது உவந்துஈயும் கண்அன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.பொருட்பால் குடியியல்இரவச்சம் 
1062இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகுஇயற்றி யான்.பொருட்பால் குடியியல்இரவச்சம் 
1063இன்மை இடும்பை இரந்துதீர்வாம் என்னும் வன்மையின் வன்பாட்டது இல்.பொருட்பால் குடியியல்இரவச்சம் 
1064இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக் காலும் இரவுஒல்லாச்     சால்பு.பொருட்பால் குடியியல்இரவச்சம் 
1065தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள் தந்தது உண்ணலின் ஊங்குஇனியது இல்.பொருட்பால் குடியியல்இரவச்சம் 
1066ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல்.பொருட்பால் குடியியல்இரவச்சம் 
1067இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று.பொருட்பால் குடியியல்இரவச்சம் 
1068இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும் பார்தாக்கப் பக்கு விடும்.பொருட்பால் குடியியல்இரவச்சம் 
1069இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.பொருட்பால் குடியியல்இரவச்சம் 
1070கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும்  கொல்லோ இரப்பவர் சொல்ஆடப் போஒம் உயிர்.பொருட்பால் குடியியல்இரவச்சம் 
1071மக்களே போல்வர் கயவர் அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்டது இல்.பொருட்பால் குடியியல்கயமை 
1072நன்று அறிவாரின் கயவர் திருஉடையர் நெஞ்சத்து அவலம் இலர்.பொருட்பால் குடியியல்கயமை 
1073தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்துஒழுக லான்.பொருட்பால் குடியியல்கயமை 
1074அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.பொருட்பால் குடியியல்கயமை 
1075அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல்  உண்டாம் சிறிது.பொருட்பால் குடியியல்கயமை 
1076அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான்.பொருட்பால் குடியியல்கயமை 
1077ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு.பொருட்பால் குடியியல்கயமை 
1078சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்.பொருட்பால் குடியியல்கயமை 
1079உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ்.பொருட்பால் குடியியல்கயமை 
1080எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து.பொருட்பால் குடியியல்கயமை 
1081அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.காமத்துப்பால்களவியல்தகையணங்குறுத்தல்
1082நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து.காமத்துப்பால்களவியல்தகையணங்குறுத்தல்
1083பண்டுஅறியேன் கூற்று என்பதனை இனிஅறிந்தேன் பெண்தகையாள் பேர்அமர்க் கட்டு.காமத்துப்பால்களவியல்தகையணங்குறுத்தல்
1084கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண்.காமத்துப்பால்களவியல்தகையணங்குறுத்தல்
1085கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து.காமத்துப்பால்களவியல்தகையணங்குறுத்தல்
1086கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர் செய்யல மன்இவள் கண்.காமத்துப்பால்களவியல்தகையணங்குறுத்தல்
1087கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்.காமத்துப்பால்களவியல்தகையணங்குறுத்தல்
1088ஒள்நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு.காமத்துப்பால்களவியல்தகையணங்குறுத்தல்
1089பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணிஎவனோ ஏதில தந்து.காமத்துப்பால்களவியல்தகையணங்குறுத்தல்
1090உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.காமத்துப்பால்களவியல்தகையணங்குறுத்தல்
1091இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்குஒன்று     அந்நோய் மருந்து.காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்
1092கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது.காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்
1093நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்
1094யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்.காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்
1095குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்
1096உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்
1097செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்
1098அசையியற்கு உண்டுஆண்டுஓர் ஏர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்.காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்
1099ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்
1100கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்
1101கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.காமத்துப்பால்களவியல்புணர்ச்சிமகிழ்தல்
1102பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து.காமத்துப்பால்களவியல்புணர்ச்சிமகிழ்தல்
1103தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.காமத்துப்பால்களவியல்புணர்ச்சிமகிழ்தல்
1104நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்?காமத்துப்பால்களவியல்புணர்ச்சிமகிழ்தல்
1105வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோடுஆர் கதுப்பினாள் தோள்.காமத்துப்பால்களவியல்புணர்ச்சிமகிழ்தல்
1106உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்.காமத்துப்பால்களவியல்புணர்ச்சிமகிழ்தல்
1107தம்இல் இருந்து தமதுபாத்து உண்டுஅற்றால் அம்மா அரிவை முயக்கு.காமத்துப்பால்களவியல்புணர்ச்சிமகிழ்தல்
1108வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.காமத்துப்பால்களவியல்புணர்ச்சிமகிழ்தல்
1109ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன்.காமத்துப்பால்களவியல்புணர்ச்சிமகிழ்தல்
1110அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.காமத்துப்பால்களவியல்புணர்ச்சிமகிழ்தல்
1111நல்நீரை வாழி அனிச்சமே நின்னினும் மெல்நீரள் யாம்வீழ் பவள்.காமத்துப்பால்களவியல்நலம்புனைந்துரைத்தல்
1112மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூஒக்கும் என்று.காமத்துப்பால்களவியல்நலம்புனைந்துரைத்தல்
1113முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல்உண்கண் வேய்த்தோள் அவட்கு.காமத்துப்பால்களவியல்நலம்புனைந்துரைத்தல்
1114காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாண்இழை கண்ஒவ்வேம் என்று.காமத்துப்பால்களவியல்நலம்புனைந்துரைத்தல்
1115அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை.காமத்துப்பால்களவியல்நலம்புனைந்துரைத்தல்
1116மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்.காமத்துப்பால்களவியல்நலம்புனைந்துரைத்தல்
1117அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுஉண்டோ மாதர் முகத்து.காமத்துப்பால்களவியல்நலம்புனைந்துரைத்தல்
1118மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி.காமத்துப்பால்களவியல்நலம்புனைந்துரைத்தல்
1119மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி.காமத்துப்பால்களவியல்நலம்புனைந்துரைத்தல்
1120அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.காமத்துப்பால்களவியல்நலம்புனைந்துரைத்தல்
1121பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்.காமத்துப்பால்களவியல்காதற்சிறப்புரைத்தல்
1122உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.காமத்துப்பால்களவியல்காதற்சிறப்புரைத்தல்
1123கருமணியின் பாவாய்நீ போதாய் யாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம்.காமத்துப்பால்களவியல்காதற்சிறப்புரைத்தல்
1124வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல் அதற்குஅன்னள் நீங்கும் இடத்து.காமத்துப்பால்களவியல்காதற்சிறப்புரைத்தல்
1125உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.காமத்துப்பால்களவியல்காதற்சிறப்புரைத்தல்
1126கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காதல் அவர்.காமத்துப்பால்களவியல்காதற்சிறப்புரைத்தல்
1127கண்உள்ளார் காதல் அவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து.காமத்துப்பால்களவியல்காதற்சிறப்புரைத்தல்
1128நெஞ்சத்தார் காதல் அவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து.காமத்துப்பால்களவியல்காதற்சிறப்புரைத்தல்
1129இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர்.காமத்துப்பால்களவியல்காதற்சிறப்புரைத்தல்
1130உவந்துஉறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துஉறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர்.காமத்துப்பால்களவியல்காதற்சிறப்புரைத்தல்
1131காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம மடல்அல்லது இல்லை வலி.காமத்துப்பால்களவியல்நாணுத்துறவுரைத்தல்
1132நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.காமத்துப்பால்களவியல்நாணுத்துறவுரைத்தல்
1133நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்.காமத்துப்பால்களவியல்நாணுத்துறவுரைத்தல்
1134காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை.காமத்துப்பால்களவியல்நாணுத்துறவுரைத்தல்
1135தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர்.காமத்துப்பால்களவியல்நாணுத்துறவுரைத்தல்
1136மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்குஎன் கண்.காமத்துப்பால்களவியல்நாணுத்துறவுரைத்தல்
1137கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்.காமத்துப்பால்களவியல்நாணுத்துறவுரைத்தல்
1138நிறைஅரியர் மன்அளியர் என்னாதுஎன் காமம் மறைஇறந்து மன்று படும்.காமத்துப்பால்களவியல்நாணுத்துறவுரைத்தல்
1139அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.காமத்துப்பால்களவியல்நாணுத்துறவுரைத்தல்
1140யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு.காமத்துப்பால்களவியல்நாணுத்துறவுரைத்தல்
1141அலர்எழ  ஆருயிர் நிற்கும் அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால்.காமத்துப்பால்கற்பியல்அலரறிவுறுத்தல்
1142மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர்.காமத்துப்பால்கற்பியல்அலரறிவுறுத்தல்
1143உறாஅதோ ஊர்அறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து.காமத்துப்பால்கற்பியல்அலரறிவுறுத்தல்
1144கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து.காமத்துப்பால்கற்பியல்அலரறிவுறுத்தல்
1145களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது.காமத்துப்பால்கற்பியல்அலரறிவுறுத்தல்
1146கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.காமத்துப்பால்கற்பியல்அலரறிவுறுத்தல்
1147ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்.காமத்துப்பால்கற்பியல்அலரறிவுறுத்தல்
1148நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.காமத்துப்பால்கற்பியல்அலரறிவுறுத்தல்
1149அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஒம்பு  என்றார் பலர்நாண நீத்தக் கடை.காமத்துப்பால்கற்பியல்அலரறிவுறுத்தல்
1150தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர்.காமத்துப்பால்கற்பியல்அலரறிவுறுத்தல்
1151செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை.காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை
1152இன்கண்  உடைத்துஅவர் பார்வல் பிரிவுஅஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு.காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை
1153அரிதுஅரோ  தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோர் இடத்துஉண்மை யான்.காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை
1154அளித்துஅஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு.காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை
1155ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு.காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை
1156பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை.காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை
1157துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை.காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை
1158இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு.காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை
1159தொடின்சுடின்  அல்லது காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ.காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை
1160அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவுஆற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர்.காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை
1161மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.காமத்துப்பால்கற்பியல்படர்மெலிந்திரங்கல்
1162கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.காமத்துப்பால்கற்பியல்படர்மெலிந்திரங்கல்
1163காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து.காமத்துப்பால்கற்பியல்படர்மெலிந்திரங்கல்
1164காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்.காமத்துப்பால்கற்பியல்படர்மெலிந்திரங்கல்
1165துப்பின் எவன்ஆவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்.காமத்துப்பால்கற்பியல்படர்மெலிந்திரங்கல்
1166இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனில் பெரிது.காமத்துப்பால்கற்பியல்படர்மெலிந்திரங்கல்
1167காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்.காமத்துப்பால்கற்பியல்படர்மெலிந்திரங்கல்
1168மன்உயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா என்னல்லது இல்லை துணை.காமத்துப்பால்கற்பியல்படர்மெலிந்திரங்கல்
1169கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா.காமத்துப்பால்கற்பியல்படர்மெலிந்திரங்கல்
1170உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.காமத்துப்பால்கற்பியல்படர்மெலிந்திரங்கல்
1171கண்தாம் கழுல்வது எவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.காமத்துப்பால்கற்பியல்கண்விதுப்பழிதல்
1172தெரிந்துஉணரா நோக்கிய உண்கண் பரிந்துஉணராப் பைதல் உழப்பது எவன்?காமத்துப்பால்கற்பியல்கண்விதுப்பழிதல்
1173கதும்எனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து.காமத்துப்பால்கற்பியல்கண்விதுப்பழிதல்
1174பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா உய்வுஇல்நோய் என்கண் நிறுத்து.காமத்துப்பால்கற்பியல்கண்விதுப்பழிதல்
1175படல்ஆற்றாப் பைதல் உழக்கும் கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண்.காமத்துப்பால்கற்பியல்கண்விதுப்பழிதல்
1176ஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது.காமத்துப்பால்கற்பியல்கண்விதுப்பழிதல்
1177உழந்துஉழந்து உள்நீர் அறுக விழைந்துஇழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்.காமத்துப்பால்கற்பியல்கண்விதுப்பழிதல்
1178பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றுஅவர்க் காணாது அமைவில கண்.காமத்துப்பால்கற்பியல்கண்விதுப்பழிதல்
1179வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்.காமத்துப்பால்கற்பியல்கண்விதுப்பழிதல்
1180மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.காமத்துப்பால்கற்பியல்கண்விதுப்பழிதல்
1181நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன் பண்புயார்க்கு உரைக்கோ பிற.காமத்துப்பால்கற்பியல்பசப்புறுபருவரல்
1182அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்துஎன் மேனிமேல் ஊரும் பசப்பு.காமத்துப்பால்கற்பியல்பசப்புறுபருவரல்
1183சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து.காமத்துப்பால்கற்பியல்பசப்புறுபருவரல்
1184உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு.காமத்துப்பால்கற்பியல்பசப்புறுபருவரல்
1185உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்புஊர் வது.காமத்துப்பால்கற்பியல்பசப்புறுபருவரல்
1186விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு.காமத்துப்பால்கற்பியல்பசப்புறுபருவரல்
1187புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.காமத்துப்பால்கற்பியல்பசப்புறுபருவரல்
1188பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல்.காமத்துப்பால்கற்பியல்பசப்புறுபருவரல்
1189பசக்கமன் பட்டாங்குஎன் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின்.காமத்துப்பால்கற்பியல்பசப்புறுபருவரல்
1190பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்.காமத்துப்பால்கற்பியல்பசப்புறுபருவரல்
1191தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி.காமத்துப்பால்கற்பியல்தனிப்படர்மிகுதி
1192வாழ்வார்க்கு வானம் பயந்துஅற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.காமத்துப்பால்கற்பியல்தனிப்படர்மிகுதி
1193வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு.காமத்துப்பால்கற்பியல்தனிப்படர்மிகுதி
1194வீழப் படுவார் கெழீஇஇலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்.காமத்துப்பால்கற்பியல்தனிப்படர்மிகுதி
1195நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை.காமத்துப்பால்கற்பியல்தனிப்படர்மிகுதி
1196ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது.காமத்துப்பால்கற்பியல்தனிப்படர்மிகுதி
1197பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்.காமத்துப்பால்கற்பியல்தனிப்படர்மிகுதி
1198வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்.காமத்துப்பால்கற்பியல்தனிப்படர்மிகுதி
1199நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு.காமத்துப்பால்கற்பியல்தனிப்படர்மிகுதி
1200உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு.காமத்துப்பால்கற்பியல்தனிப்படர்மிகுதி
1201உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.காமத்துப்பால்கற்பியல்நினைந்தவர்புலம்பல்
1202எனைத்துஒன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதுஒன்று ஏல்.காமத்துப்பால்கற்பியல்நினைந்தவர்புலம்பல்
1203நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்.காமத்துப்பால்கற்பியல்நினைந்தவர்புலம்பல்
1204யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்.காமத்துப்பால்கற்பியல்நினைந்தவர்புலம்பல்
1205தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.காமத்துப்பால்கற்பியல்நினைந்தவர்புலம்பல்
1206மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன்.காமத்துப்பால்கற்பியல்நினைந்தவர்புலம்பல்
1207மறப்பின் எவன்ஆவன் மன்கொல் மறப்புஅறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.காமத்துப்பால்கற்பியல்நினைந்தவர்புலம்பல்
1208எனைத்து நினைப்பினும் காயார் அனைத்துஅன்றோ காதலர் செய்யும் சிறப்பு.காமத்துப்பால்கற்பியல்நினைந்தவர்புலம்பல்
1209விளியும்என் இன்உயிர் வேறுஅல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து.காமத்துப்பால்கற்பியல்நினைந்தவர்புலம்பல்
1210விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.காமத்துப்பால்கற்பியல்நினைந்தவர்புலம்பல்
1211காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்
1212கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சில் கலந்தார்க்கு உயல்உண்மை சாற்றுவேன் மன்.காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்
1213நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்
1214கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்
1215நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்
1216நனவென ஒன்றில்லை ஆயின் கனவினான் காதலர் நீங்கலர் மன்.காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்
1217நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்எம்மைப் பீழிப் பது.காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்
1218துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்
1219நனவினான் நல்காரை நோவர் கனவினான் காதலர்க் காணா தவர்.காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்
1220நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான் காணார்கொல் இவ்வூ ரவர்.காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்
1221மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.காமத்துப்பால்கற்பியல்பொழுதுகண்டிரங்கல்
1222புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை.காமத்துப்பால்கற்பியல்பொழுதுகண்டிரங்கல்
1223பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.காமத்துப்பால்கற்பியல்பொழுதுகண்டிரங்கல்
1224காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.காமத்துப்பால்கற்பியல்பொழுதுகண்டிரங்கல்
1225காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை?காமத்துப்பால்கற்பியல்பொழுதுகண்டிரங்கல்
1226மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்.காமத்துப்பால்கற்பியல்பொழுதுகண்டிரங்கல்
1227காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.காமத்துப்பால்கற்பியல்பொழுதுகண்டிரங்கல்
1228அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை.காமத்துப்பால்கற்பியல்பொழுதுகண்டிரங்கல்
1229பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.காமத்துப்பால்கற்பியல்பொழுதுகண்டிரங்கல்
1230பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.காமத்துப்பால்கற்பியல்பொழுதுகண்டிரங்கல்
1231சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண்.காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்
1232நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்.காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்
1233தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்.காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்
1234பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்.காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்
1235கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள்.காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்
1236தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்
1237பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்குஎன் வாடுதோள்  பூசல் உரைத்து.காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்
1238முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்.காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்
1239முயக்குஇடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்.காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்
1240கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு.காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்
1241நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுகிளத்தல்
1242காதல் அவர்இலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுகிளத்தல்
1243இருந்துஉள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்துஉள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல்.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுகிளத்தல்
1244கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுகிளத்தல்
1245செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுகிளத்தல்
1246கலந்துஉணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துஉணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுகிளத்தல்
1247காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுகிளத்தல்
1248பரிந்துஅவர் நல்கார்என்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுகிளத்தல்
1249உள்ளத்தார் காதல் அவரால் உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுகிளத்தல்
1250துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின்.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுகிளத்தல்
1251காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு.காமத்துப்பால்கற்பியல்நிறையழிதல்
1252காமம் எனஒன்றோ கண்இன்றுஎன் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்.காமத்துப்பால்கற்பியல்நிறையழிதல்
1253மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.காமத்துப்பால்கற்பியல்நிறையழிதல்
1254நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும்.காமத்துப்பால்கற்பியல்நிறையழிதல்
1255செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று.காமத்துப்பால்கற்பியல்நிறையழிதல்
1256செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்.காமத்துப்பால்கற்பியல்நிறையழிதல்
1257நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்பச் செயின்.காமத்துப்பால்கற்பியல்நிறையழிதல்
1258பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை.காமத்துப்பால்கற்பியல்நிறையழிதல்
1259புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு.காமத்துப்பால்கற்பியல்நிறையழிதல்
1260நிணம்தீயில் இ்ட்டுஅன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்துஊடி நிற்போம் எனல்.காமத்துப்பால்கற்பியல்நிறையழிதல்
1261வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.காமத்துப்பால்கற்பியல்அவர்வயின்விதும்பல்
1262இலங்குஇழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலம்கழியும் காரிகை நீத்து.காமத்துப்பால்கற்பியல்அவர்வயின்விதும்பல்
1263உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன்.காமத்துப்பால்கற்பியல்அவர்வயின்விதும்பல்
1264கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக் கோடுகொடு ஏறும்என் நெஞ்சு.காமத்துப்பால்கற்பியல்அவர்வயின்விதும்பல்
1265காண்கமன் கொண்கனைக் கண்ஆரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு.காமத்துப்பால்கற்பியல்அவர்வயின்விதும்பல்
1266வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட.காமத்துப்பால்கற்பியல்அவர்வயின்விதும்பல்
1267புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின்.காமத்துப்பால்கற்பியல்அவர்வயின்விதும்பல்
1268வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து.காமத்துப்பால்கற்பியல்அவர்வயின்விதும்பல்
1269ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.காமத்துப்பால்கற்பியல்அவர்வயின்விதும்பல்
1270பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்.காமத்துப்பால்கற்பியல்அவர்வயின்விதும்பல்
1271கரப்பினும் கையிகந்து ஒல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதுஒன்று உண்டுகாமத்துப்பால்கற்பியல்குறிப்பறிவுறுத்தல்
1272கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது.காமத்துப்பால்கற்பியல்குறிப்பறிவுறுத்தல்
1273மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு.காமத்துப்பால்கற்பியல்குறிப்பறிவுறுத்தல்
1274முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.காமத்துப்பால்கற்பியல்குறிப்பறிவுறுத்தல்
1275செறிதொடி செய்துஇறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்துஒன்று உடைத்து.காமத்துப்பால்கற்பியல்குறிப்பறிவுறுத்தல்
1276பெரிதுஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிதுஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து.காமத்துப்பால்கற்பியல்குறிப்பறிவுறுத்தல்
1277தண்ணம் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை.காமத்துப்பால்கற்பியல்குறிப்பறிவுறுத்தல்
1278நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து.காமத்துப்பால்கற்பியல்குறிப்பறிவுறுத்தல்
1279தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதுஆண்டு அவள்செய் தது.காமத்துப்பால்கற்பியல்குறிப்பறிவுறுத்தல்
1280பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு.காமத்துப்பால்கற்பியல்குறிப்பறிவுறுத்தல்
1281உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்குஇல் காமத்திற் குண்டு.காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்
1282தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்.காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்
1283பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண்.காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்
1284ஊடல்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடல்கண் சென்றதுஎன் நெஞ்சுகாமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்
1285எழுதும்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்
1286காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறுஅல் லவை.காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்
1287உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து.காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்
1288இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்அற்றே கள்வநின் மார்பு.காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்
1289மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்.காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்
1290கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப்பு உற்று.காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்
1291அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்
1292உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅர் எனச் சேறிஎன் நெஞ்சு.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்
12983கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்
1294இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்
1295பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்
1296தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்
1297நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சில் பட்டு.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்
1298எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்
1299துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்
1300தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய நெஞ்சம் தமர்அல் வழி.காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்
1301புல்லாது இராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம்காமத்துப்பால்கற்பியல்புலவி
1302உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.காமத்துப்பால்கற்பியல்புலவி
1303அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.காமத்துப்பால்கற்பியல்புலவி
1304ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல்அரிந் தற்று.காமத்துப்பால்கற்பியல்புலவி
1305நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து.காமத்துப்பால்கற்பியல்புலவி
1306துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.காமத்துப்பால்கற்பியல்புலவி
1307ஊடலின் உண்டாங்குஓர் துன்பம் புணர்வது நீடுவது அன்றுகொல் என்று.காமத்துப்பால்கற்பியல்புலவி
1308நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.காமத்துப்பால்கற்பியல்புலவி
1309நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.காமத்துப்பால்கற்பியல்புலவி
1310ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா.காமத்துப்பால்கற்பியல்புலவி
1311பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு.காமத்துப்பால்கற்பியல்புலவிநுணுக்கம்
1312ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்துகாமத்துப்பால்கற்பியல்புலவிநுணுக்கம்
1313கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.காமத்துப்பால்கற்பியல்புலவிநுணுக்கம்
1314யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.காமத்துப்பால்கற்பியல்புலவிநுணுக்கம்
1315இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.காமத்துப்பால்கற்பியல்புலவிநுணுக்கம்
1316உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.காமத்துப்பால்கற்பியல்புலவிநுணுக்கம்
1317வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்துஅழுதாள் யார்உள்ளித் தும்மினீர் என்று.காமத்துப்பால்கற்பியல்புலவிநுணுக்கம்
1318தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று.காமத்துப்பால்கற்பியல்புலவிநுணுக்கம்
1319தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.காமத்துப்பால்கற்பியல்புலவிநுணுக்கம்
1320நினைத்துஇருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர் யாருள்ளி நோக்கினீர் என்று.காமத்துப்பால்கற்பியல்புலவிநுணுக்கம்
1321இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு.காமத்துப்பால்கற்பியல்ஊடலுவகை
1322ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்.காமத்துப்பால்கற்பியல்ஊடலுவகை
1323புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீர்இயைந்து அன்னார் அகத்து.காமத்துப்பால்கற்பியல்ஊடலுவகை
1324புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை.காமத்துப்பால்கற்பியல்ஊடலுவகை
1325தவறுஇலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள் அகறலின் ஆங்குஒன்று உடைத்து.காமத்துப்பால்கற்பியல்ஊடலுவகை
1326உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.காமத்துப்பால்கற்பியல்ஊடலுவகை
1327ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும்.காமத்துப்பால்கற்பியல்ஊடலுவகை
1328ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு.காமத்துப்பால்கற்பியல்ஊடலுவகை
1329ஊடுக மன்னோ ஒளிஇழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா.காமத்துப்பால்கற்பியல்ஊடலுவகை
1330ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.கா
மத்துப்பால்
கற்பியல்ஊடலுவகை

அதிகாரங்கள்/Chapters/Adhigarangal – Thirukkural

#TamilEnglishTransliterationKurals
1கடவுள் வாழ்த்துThe Praise of GodKatavul VaazhththuKurals
2வான்சிறப்புThe Blessing of RainVaansirappuKurals
3நீத்தார் பெருமைThe Greatness of AsceticsNeeththaar PerumaiKurals
4அறன் வலியுறுத்தல்Assertion of the Strength of VirtueAran ValiyuruththalKurals
5இல்வாழ்க்கைDomestic LifeIlvaazhkkaiKurals
6வாழ்க்கைத் துணைநலம்The Worth of a WifeVaazhkkaith ThunainalamKurals
7மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்The Wealth of ChildrenPudhalvaraip PerudhalKurals
8அன்புடைமைThe Possession of LoveAnpudaimaiKurals
9விருந்தோம்பல்HospitalityVirundhompalKurals
10இனியவைகூறல்The Utterance of Pleasant WordsIniyavaikooralKurals
11செய்ந்நன்றி அறிதல்GratitudeSeynnandri AridhalKurals
12நடுவு நிலைமைImpartialityNatuvu NilaimaiKurals
13அடக்கமுடைமைThe Possession of Self-restraintAdakkamudaimaiKurals
14ஒழுக்கமுடைமைThe Possession of DecorumOzhukkamudaimaiKurals
15பிறனில் விழையாமைNot coveting another’s WifePiranil VizhaiyaamaiKurals
16பொறையுடைமைThe Possession of Patience, ForbearancePoraiyudaimaiKurals
17அழுக்காறாமைNot EnvyingAzhukkaaraamaiKurals
18வெஃகாமைNot CovetingVeqkaamaiKurals
19புறங்கூறாமைNot BackbitingPurangooraamaiKurals
20பயனில சொல்லாமைAgainst Vain SpeakingPayanila SollaamaiKurals
21தீவினையச்சம்Dread of Evil DeedsTheevinaiyachchamKurals
22ஒப்புரவறிதல்Duty to SocietyOppuravaridhalKurals
23ஈகைGivingEekaiKurals
24புகழ்RenownPukazhKurals
25அருளுடைமைCompassionAruludaimaiKurals
26புலான்மறுத்தல்Abstinence from FleshPulaanmaruththalKurals
27தவம்PenanceThavamKurals
28கூடாவொழுக்கம்ImpostureKoodaavozhukkamKurals
29கள்ளாமைThe Absence of FraudKallaamaiKurals
30வாய்மைVeracityVaaimaiKurals
31வெகுளாமைRestraining AngerVekulaamaiKurals
32இன்னாசெய்யாமைNot doing EvilInnaaseyyaamaiKurals
33கொல்லாமைNot killingKollaamaiKurals
34நிலையாமைInstabilityNilaiyaamaiKurals
35துறவுRenunciationThuravuKurals
36மெய்யுணர்தல்Truth-ConciousnessMeyyunardhalKurals
37அவாவறுத்தல்Curbing of DesireAvaavaruththalKurals
38ஊழ்FateOozhKurals
39இறைமாட்சிThe Greatness of a KingIraimaatchiKurals
40கல்விLearningKalviKurals
41கல்லாமைIgnoranceKallaamaiKurals
42கேள்விHearingKaelviKurals
43அறிவுடைமைThe Possession of KnowledgeArivudaimaiKurals
44குற்றங்கடிதல்The Correction of FaultsKutrangatidhalKurals
45பெரியாரைத் துணைக்கோடல்Seeking the Aid of Great MenPeriyaaraith ThunaikkotalKurals
46சிற்றினஞ்சேராமைAvoiding mean AssociationsSitrinanjeraamaiKurals
47தெரிந்துசெயல்வகைActing after due ConsiderationTherindhuseyalvakaiKurals
48வலியறிதல்The Knowledge of PowerValiyaridhalKurals
49காலமறிதல்Knowing the fitting TimeKaalamaridhalKurals
50இடனறிதல்Knowing the PlaceIdanaridhalKurals
51தெரிந்துதெளிதல்Selection and ConfidenceTherindhudhelidhalKurals
52தெரிந்துவினையாடல்Selection and EmploymentTherindhuvinaiyaatalKurals
53சுற்றந்தழால்Cherishing KinsmenSutrandhazhaalKurals
54பொச்சாவாமைUnforgetfulnessPochchaavaamaiKurals
55செங்கோன்மைThe Right SceptreSengonmaiKurals
56கொடுங்கோன்மைThe Cruel SceptreKotungonmaiKurals
57வெருவந்தசெய்யாமைAbsence of TerrorismVeruvandhaseyyaamaiKurals
58கண்ணோட்டம்BenignityKannottamKurals
59ஒற்றாடல்DetectivesOtraadalKurals
60ஊக்கமுடைமைEnergyOokkamudaimaiKurals
61மடியின்மைUnsluggishnessMatiyinmaiKurals
62ஆள்வினையுடைமைManly EffortAalvinaiyudaimaiKurals
63இடுக்கணழியாமைHopefulness in TroubleIdukkan AzhiyaamaiKurals
64அமைச்சுThe Office of Minister of stateAmaichchuKurals
65சொல்வன்மைPower of SpeechSolvanmaiKurals
66வினைத்தூய்மைPurity in ActionVinaiththooimaiKurals
67வினைத்திட்பம்Power in ActionVinaiththitpamKurals
68வினைசெயல்வகைModes of ActionVinaiseyalvakaiKurals
69தூதுThe EnvoyThoodhuKurals
70மன்னரைச் சேர்ந்தொழுதல்Conduct in the Presence of the KingMannaraich CherndhozhudhalKurals
71குறிப்பறிதல்The Knowledge of IndicationsKuripparidhalKurals
72அவையறிதல்The Knowledge of the Council ChamberAvaiyaridhalKurals
73அவையஞ்சாமைNot to dread the CouncilAvaiyanjaamaiKurals
74நாடுThe LandNaaduKurals
75அரண்The FortificationAranKurals
76பொருள்செயல்வகைWay of Accumulating WealthPorulseyalvakaiKurals
77படைமாட்சிThe Excellence of an ArmyPadaimaatchiKurals
78படைச்செருக்குMilitary SpiritPataichcherukkuKurals
79நட்புFriendshipNatpuKurals
80நட்பாராய்தல்Investigation in forming FriendshipsNatpaaraaidhalKurals
81பழைமைFamiliarityPazhaimaiKurals
82தீ நட்புEvil FriendshipThee NatpuKurals
83கூடாநட்புUnreal FriendshipKootaanatpuKurals
84பேதைமைFollyPaedhaimaiKurals
85புல்லறிவாண்மைIgnorancePullarivaanmaiKurals
86இகல்HostilityIkalKurals
87பகைமாட்சிThe Might of HatredPakaimaatchiKurals
88பகைத்திறந்தெரிதல்Knowing the Quality of HatePakaiththirandheridhalKurals
89உட்பகைEnmity withinUtpakaiKurals
90பெரியாரைப் பிழையாமைNot Offending the GreatPeriyaaraip PizhaiyaamaiKurals
91பெண்வழிச்சேறல்Being led by WomenPenvazhichcheralKurals
92வரைவின்மகளிர்Wanton WomenVaraivinmakalirKurals
93கள்ளுண்ணாமைNot Drinking Palm-WineKallunnaamaiKurals
94சூதுGamblingSoodhuKurals
95மருந்துMedicineMarundhuKurals
96குடிமைNobilityKutimaiKurals
97மானம்HonourMaanamKurals
98பெருமைGreatnessPerumaiKurals
99சான்றாண்மைPerfectnessSaandraanmaiKurals
100பண்புடைமைCourtesyPanpudaimaiKurals
101நன்றியில்செல்வம்Wealth without BenefactionNandriyilselvamKurals
102நாணுடைமைShameNaanudaimaiKurals
103குடிசெயல்வகைThe Way of Maintaining the FamilyKutiseyalvakaiKurals
104உழவுFarmingUzhavuKurals
105நல்குரவுPovertyNalkuravuKurals
106இரவுMendicancyIravuKurals
107இரவச்சம்The Dread of MendicancyIravachchamKurals
108கயமைBasenessKayamaiKurals
109தகையணங்குறுத்தல்The Pre-marital loveThakaiyananguruththalKurals
110குறிப்பறிதல்Recognition of the SignsKuripparidhalKurals
111புணர்ச்சிமகிழ்தல்Rejoicing in the EmbracePunarchchimakizhdhalKurals
112நலம்புனைந்துரைத்தல்The Praise of her BeautyNalampunaindhuraiththalKurals
113காதற்சிறப்புரைத்தல்Declaration of Love’s special ExcellenceKaadharsirappuraiththalKurals
114நாணுத்துறவுரைத்தல்The Abandonment of ReserveNaanuththuravuraiththalKurals
115அலரறிவுறுத்தல்The Announcement of the RumourAlararivuruththalKurals
116பிரிவாற்றாமைSeparation unendurablePirivaatraamaiKurals
117படர்மெலிந்திரங்கல்ComplainingsPatarmelindhirangalKurals
118கண்விதுப்பழிதல்Eyes consumed with GriefKanvidhuppazhidhalKurals
119பசப்புறுபருவரல்The Pallid HuePasapparuparuvaralKurals
120தனிப்படர்மிகுதிThe Solitary AnguishThanippatarmikudhiKurals
121நினைந்தவர்புலம்பல்Sad MemoriesNinaindhavarpulampalKurals
122கனவுநிலையுரைத்தல்The Visions of the NightKanavunilaiyuraiththalKurals
123பொழுதுகண்டிரங்கல்Lamentations at EventidePozhudhukantirangalKurals
124உறுப்புநலனழிதல்Wasting AwayUruppunalanazhidhalKurals
125நெஞ்சொடுகிளத்தல்SoliloquyNenjotukilaththalKurals
126நிறையழிதல்Reserve OvercomeNiraiyazhidhalKurals
127அவர்வயின்விதும்பல்Mutual DesireAvarvayinvidhumpalKurals
128குறிப்பறிவுறுத்தல்The Reading of the SignsKuripparivuruththalKurals
129புணர்ச்சிவிதும்பல்Desire for ReunionPunarchchividhumpalKurals
130நெஞ்சொடுபுலத்தல்Expostulation with OneselfNenjotupulaththalKurals
131புலவிPoutingPulaviKurals
132புலவி நுணுக்கம்Feigned AngerPulavi NunukkamKurals
133ஊடலுவகைThe Pleasures of Temporary VarianceOodaluvakaiKurals

Thirukkural ~ Kural – திருக்குறள்: Thirukkural in Tamil, English. Written by Thiruvalluvar. திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற

Thiruvakkural Excel Download – Coming Soon

You may also like...

5 Responses

  1. June 27, 2022

    […] The first train will leave Ernakulam on June 4 at 12:35 pm. From there to Kottayam, Chenganassery, Tirvalla, Chengannur, Mavelikara, Kayankulam, Sasthankotta, Kollam, Kundara, Kottarakara, Punalur, […]

  2. June 28, 2022

    […] Kanyakumari, Tamil Nadu […]

  3. June 28, 2022

    […] Kanyakumari, Tamil Nadu […]

  4. June 29, 2022

    […] about the date and timing of LIVE grand finale of Super Singer Junior, it was telecast on 26th June 2022 from 3pm onwards […]

  5. July 1, 2022

    […] To type in Tamil font you need to install the font in your computer system and when you start typing select the name of Tamil font from drop down list of text editor (i.e. MS Word). You will see whatever you type is comes in Tamil language. […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *