திருத்துறைப்பூண்டி காய்கறி அங்காடி கட்டுமான பணி – ஆட்சியர்ஆய்வு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி, புதிய பேருந்து
நிலையத்தில் ரூ. 2 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில்
தினசரி காய்கறி அங்காடி கட்டட கட்டுமான பணிகளை மாவட்ட
ஆட்சியர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்.,இ,ஆ.ப., அவர்கள் நேரில்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறி அங்காடி கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur pic.twitter.com/0mn00ALHmQ
— Collector Thiruvarur (@CollectorTVR) July 27, 2022
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி, புதிய பேருந்து
நிலையத்தில் ரூ. 2 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் தினசரி
காய்கறி அங்காடி கட்டட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர்
திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்.,இ,ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார். இவ்ஆய்வில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்
திரு.க.மாரிமுத்து அவர்கள் உடனிருந்தார்கள்.
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் ரூ.
2 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் சதுர அடி
பரப்பளவில் தினசரி காய்கறி அங்காடி கட்டடமானது சிறு உணவகம்,
கழிவறை, தானியங்கி வங்கி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் 44
கடைகள் கட்ட தமிழக அரசால் ஆணையிடப்பட்டு அதன்படி முதற்கட்ட
கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர்
அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் தொடா்பாக நகராட்சி
பொறியாளரிடம் கேட்டறிந்தார்.