திருவாரூர் ஆழித் தேரோட்டம் இன்று
திருவாரூர்: திருவாரூர் ஆழித் தேரோட்டம் இன்று, ஆசியாவில் மிகப்பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் ஆழித்தேர், 96 அடி உயரம், அலங்காரத்துடன், 360 டன் எடை கொண்டது. மொத்தம், 3 நிலைகள் கொண்ட தேரை சுற்றி அடிப்பக்கத்தில், 200க்கும் அதிகமான சிவப்பெருமான் திருவிளையாடல்களை மையப்படுத்திய அழகிய மரச்சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆழித்தேர் வரலாறு
1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைப்பெற்ற தேர்த்திருவிழா, 1927ஆம் ஆண்டு ஆழித்தேரோட்டத்தின்போது தேர் முற்றிலும் எரிந்துவிட்டது. கமல வசந்த வீதிவிடங்கப் பெருமானை (தியாகேசர்) முத்துக் கொத்தனார் என்பவர் காப்பாற்றினார்.
நின்றுபோன தேர்த் திருவிழா, பிறகு 1930ஆம் ஆண்டு புதிய தேர் உருவாக்கப்பட்டு மீண்டும் நடைபெற்றது. தேரோட்டம் , 1948ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. அதன்பிறகு ஏதேதோ காரணங்களால் நின்று போனது.