பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி மற்றும் பால் கேன்களை காரைக்கால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார் நிகழ்ச்சியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக பொதுமேலாளர் மாறன் பால் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் நாகராஜ் ஆவின் மேலாளர் சரவணக்குமார் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக சமூக பொறுப்பு திட்ட அலுவலர் விஜய்கண்ணன் உதவி பொறியாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 17 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி மற்றும் பால் கேன்களை காரைக்கால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்
திருவாரூர் மாவட்டத்தில் நலிவுற்றிருந்த பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு உதவிகள் செய்து அதன் மூலம் சங்கங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி மற்றும் பால் கேன்கள் வழங்கப்பட்டுள்ளது இதன் மதிப்பு 9.8 இலட்சம் ஆகும். இவற்றை கொண்டு சங்கங்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு உற்பத்தியாளர்களுக்கும் உதவி செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.