திருவாரூர் மாவட்ட ஆட்சியர்: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தல் பணி ஆலோசனை கூட்டம்

5/5 - (3 votes)

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு தலைமையேற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்!

வாக்காளர்‌ அடையாள அட்டையுடன்‌ ஆதார்‌ எண்‌ இணைப்பு திட்டமானது

எதிர்வரும்‌ மார்ச்‌ 2023க்குள்‌ 100 சதவீதம்‌ செயல்படுத்திட திட்டமிடப்பட்டூள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தல் பணி ஆலோசனை கூட்டம்

திருவாரூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ வாக்காளர்களிடமிருந்து ஆதார்‌ தரவுகளை பெற்று வாக்காளர்‌ அடையாள அட்டையுடன்‌ இணைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல்‌ கட்சி பிரதிநிதிகஞுடனான ஆலோசனை கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்‌ இ.ஆ.ப.,அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது…

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ அறிவுரைப்படி வாக்காளர்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ள வாக்காளர்கள்‌ ஆதார்‌ எண்ணை படிவம்‌-68-இல்‌ விண்ணப்பம்‌ பெற்று ஆதார்‌ எண்ணை இணைக்க வேண்டூம்‌.

வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்‌ இணைப்பது சம்பந்தப்பட்ட நபரின்‌ தன்‌ விருப்பத்துடன்‌ செய்திட வேண்டூம்‌. வாக்காளர்‌ அடையாள எண்ணுடன்‌ ஆதார்‌ எண்‌ இணைப்பது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்‌ வீடு வீடாக சென்று கருடா செயலி (கறத தற) மூலமாகவும்‌,படிவம்‌ 6டி-இல்‌ கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டூம்‌.

வாக்காளர்‌ பட்டியலில்‌ ஆதார்‌ எண்ணை இணைப்பதற்கு வாக்காளர்‌ பதிவு
அலுவலர்களுக்கு முழு அதிகாரம்‌ வழங்கப்பட்டூள்ளது.

படிவம்‌ 6£8-யை இணையதளத்தில்‌ சமர்ப்பித்திட 017, ரகபற க, ரர,
314 ஆகிய செயலிகளை (&17) பயன்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்‌
பட்டியலில்‌ சிறப்பு சுருக்கத்‌ திருத்தம்‌ முகாம்களில்‌ படிவம்‌ 6 வழங்கி ஆதார்‌
எண்ணை வாக்காளர்‌ பட்டியலில்‌ இணைத்திட வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படும்‌.

வாக்காளர்‌ ஆதார்‌ எண்ணை அரசு இ-சேவை மையங்கள்‌ மற்றும்‌ குடிமக்கள்‌ சேவை
மையங்கள்‌ மூலமாகவும்‌ இணைக்க முடியும்‌.வாக்காளர்‌ பதிவு அலுவலர்கள்‌
வாக்காளர்களிடமிருந்து ஆதார்‌ எண்ணை பெறுவதன்‌ நோக்கம்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌
உள்ள அவரது பதிவுகளை அங்கீகரிப்பதற்காகவும்‌, எதிர்காலத்தில்‌ அவர்களுக்கு
சிறந்த தோதல்‌ சேவைகளை வழங்குவதற்காக மட்டுமே.

அதன்படி

  • 166-திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில்‌ 1,15,354 ஆண்‌ வாக்காளர்களும்‌, 1,20,442 பெண்‌ வாக்காளர்களும்‌, 4 இதர வாக்காளர்களும்‌,
  • 167-மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில்‌ 1,22,670 ஆண்‌ வாக்காளர்களும்‌, 1,30,945 பெண்‌ வாக்காளர்களும்‌, 8 இதர வாக்காளர்களும்‌,
  • 168-திருவாரூர்‌ சட்டமன்ற தொகுதியில்‌ 1,34,662 ஆண்‌ வாக்காளர்களும்‌, 1,42,827 பெண்‌ வாக்காளர்களும்‌, 29 இதர வாக்காளாகளும்‌,
  • 169-நன்னிலம்‌ சட்டமன்ற தொகுதியில்‌ 1,33,588 ஆண்‌ வாக்காளர்களும்‌, 1,35,110 பெண்‌ வாக்காளர்களும்‌, 21 இதர வாக்காளர்களும்‌ ஆக மொத்தம்‌ 5,06,274 ஆண்‌
    வாக்காளர்களும்‌, 5,29,324 பெண்‌ வாக்காளர்களும்‌, 62 இதர வாக்காளர்களும்‌
    வாக்காளர்‌ பட்டியலில்‌ இடம்‌ பெற்றுள்ளனர்‌.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தல் பணி இணைப்பு திட்டமானது எதிர்வரும்‌ மார்ச்‌ 2023க்குள்‌ 100 சதவீதம்‌ செயல்படுத்திட திட்டமிடப்பட்டூள்ளது.

எனவே இந்திய தோதல்‌ ஆணையத்தின்‌ அறிவுரைகளை பின்பற்றி வாக்காளர்‌
பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ திட்டத்திற்கு அரசியல்‌ கட்சியினர்‌, அரசு
சாரா அமைப்பினர்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என
மாவட்ட ஆட்சியர்‌ திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்‌ இ.ஆ.ப,,அவர்கள்‌ தெரிவித்தார்‌.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அங்கீகாரம் அளிக்கும் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021 டிசம்பரில் குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Source: Twitter

You may also like...

1 Response

  1. August 7, 2022

    […] திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் அவ்ரகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்! […]