திருவாரூர்: வரலாறு படைக்க வரலாற்று பாடம் அவசியம்
வரலாறு படைக்க வரலாற்று பாடம்: திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் +1 சேரும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் வரலாற்று பாடப்பிரிவு இனி இல்லை என்று வாய்ப்பு மறுக்கபடுகிறது.
11,12 ஆம் வகுப்பு வரலாற்று பிரிவு பாடத்தை நீக்கத்தை திரும்ப பெற வேண்டி அதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்.
மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடமும் முன்னாள் மாணவர்கள், அரசியல் கட்சியினர் அனைவரும் இணைந்து வரலாற்றுப் பிரிவு பாடத்தை மீண்டும் தொடர்ந்து நடத்த வலியுறுத்தி மனு அளிக்க பட்டது.
திருவாரூர் பகுதியில் பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மேல் கல்வி படிப்பதற்கு இந்த வரலாற்று பிரிவு பாடம் மிகப்பெரும் துணையாக இருந்தது.
வரலாறு படைக்க வரலாற்று பாடம் அவசியம்
– முன்னாள் மாணவர்கள்
இதன் மூலம் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்லூரிக்குச் சென்று படிப்பதற்கும், ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கும் இந்த வரலாறு பிரிவு பாடம் ஒரு வாய்ப்பாக இருந்தது.
கடந்த காலத்தில் இந்தப் பள்ளியில் இந்த வரலாற்றுப் பிரிவு பாடத்தை எடுத்து படித்தவர்கள் இன்று தமிழகத்தின் பல துறைகளில் முன்னணி அதிகாரிகளாக பல துறைகளிலும் பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வரலாறு படைக்க வரலாற்று பாடம்
இந்த வரலாற்றுப் பிரிவு பாடத்தை நிறுத்திவிட்டால் மாணவர்கள் தொடர்ந்து மேற்கல்வி செல்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படும்.
அதனால் பள்ளி நிர்வாகம் இந்த கல்வி ஆண்டில் வரலாற்றுப் பாடத்தை படிப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ,திருவாரூர் பகுதி மக்கள் , அரசியல் கட்சிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
வரலாறு என்பது மாற்றங்களின் மனித அறிவு. வரலாறு என்பது நாம் வாழும் இச்சமூகத்தின் கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரை நடந்துள்ள மாற்றங்களை அறிய உதவுகின்றது.
வரலாறு கற்பதால் உள்ள பயன்கள் :
- நமது கடந்த காலம் பற்றிய அறிவு அதனுடன் கூடிய நிகழ்கால ஒப்பீட்டு அறிவு.
- நம் கலாச்சாரத்தின் தொடக்கம் மற்றும் அதைக் குறித்த உள்நோக்குப்பார்வை.
- நமது கலாச்சாரம் மற்றும் வேற்றுக் கலாச்சாரம் பற்றிய அறிவு.
- அவர்களுடனான ஒற்றுமை, வேற்றுமை பற்றி அறிந்து கொள்ளலாம்.
- வேற்று நாட்டவர் மற்றும் அவரின் சமூகவியல் பற்றி அறியலாம்.
- மாறிக்கொண்டிருக்கும் இவ்வுலகின் மாற்றத்தை வைத்து நிகழ்கால நிலையை தெளிவற அறியலாம்.
- கடந்த கால வெற்றி மற்றும் தோல்வி நிகழ்வுகளை ஆராய்ந்து அதன் மூலம் நமது நிகழ்கால தவறுகளை திருத்திகொள்ளலாம்.
- நம் எதிர்காலத்திற்காக நம் முன்னோர்கள் எழுதி வைத்தவைகளும், விதைத்தவைகளையும் ஞாபகம் வைத்து அவற்றினை பேணிக்காப்பதால் நல்ல சமூகம் உருவாக வாய்ப்புகள் அமையும்
- நம் வாழ்க்கையும் ஒரு வரலாறாக மாறப்போகிறது என்கின்ற முனைப்பும், முயற்சியும் உருவாக நம் முன்னோர்களின் வரலாற்றினையும், அவர்கள் தந்த அனுபவப் பாடங்களும் உதவும்
- வரலாற்றினை படிப்பதன் மூலமாக நம் வளங்களை எவ்வாறு பாதுகாப்பது, எதிர்கால சந்ததியினருக்கு எவ்வாறு அவற்றை பரிசாகக் கொடுப்பது என்பதைப் பற்றிய புரிதல் கிடைக்கும்
- வரலாற்றினை பதிவு செய்தல் எவ்வளவு அவசியம் என்பதை வரலாற்று நிகழ்வுகளை படிக்கின்ற போது தான் நமக்கு புரிய வரும்
- வரலாறு நாம் வாழும் வாழ்க்கையையும், அனுபவங்களையும் எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் வாழ்க்கைக் குறிப்புகள்.
- வரலாற்றுத் தவறுகளை நாமும் செய்யாமல் தவிர்க்கலாம். (நெப்போலியன் செய்த அதே தவறினையே(கடுங் குளிர் காலத்தில் ரஷ்யா மீது படையெடுத்தது), ஹிட்லரும் செய்து, நெப்போலியனைப் போலவே வீழ்ச்சி அடைந்தான்.)
- இந்த உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நாடும், இனமும் மிகப்பெரும் வல்லரசாக விளங்கி, பின் மாபெரும் வீழ்ச்சி அடைந்துள்ளன. ‘மாறும் என்பதே மாறாதது’ எனும் கோட்பாடு, நிலையாமை தத்துவம் போன்றவற்றை வரலாறு நமக்கு நன்கு விளக்கும்.
- அறிவியலின் மகத்துவத்தை நமக்கு மனித வரலாறு அழகாக எடுத்துச் சொல்லும். (அதே நேரத்தில் அதன் தீமையையும்!)
- நம் முன்னோர்களின் வரலாறு, நமக்குப் பெருமையும், வலிமையும், அற உணர்வும் சேர்க்கும்.
- அனைத்திற்கும் மேலாக, வரலாற்றை நன்கு புரிந்து கொண்டவர்களால், எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க முடியும்.
வரலாறு என்பது கடந்த காலத்தின் பதிவேடு. அவற்றை நாம் கவனமாக ஆராய்ந்தால் அவற்றில் இருந்து நாம பல பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இக் கோரிக்கைக்கு ஆதரவு அளித்து இந்த வரலாற்று பாடத்தை தொடர முன் முயற்சி எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
-முன்னாள் மாணவர்கள்