ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வாக அறவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை :
வ.எண் | அணி | தேதி | நேரம் | இடம் |
---|---|---|---|---|
1 | CSK Vs RCB | மார்ச் 22 | மாலை 8 | சென்னை |
2 | PBKS vs DC | மார்ச் 23 | மாலை 3.30 | மொஹலி |
3 | KKR vs SRH | மார்ச் 23 | மாலை 7.30 | கொல்கத்தா |
4 | RR vs LSG | மார்ச் 24 | மாலை 3.30 | ஜெய்பூர் |
5 | GT vs MI | மார்ச் 24 | மாலை 7.30 | அஹமதாபாத் |
6 | RCB vs PBKS | மார்ச் 25 | மாலை 7.30 | பெங்களூரு |
7 | CSK vs GT | மார்ச் 26 | மாலை 7.30 | சென்னை |
8 | SRH vs MI | மார்ச் 27 | மாலை 7.30 | ஹைதராபாத் |
9 | RR vs DC | மார்ச் 28 | மாலை 7.30 | ஜெய்பூர் |
10 | RCB vs KKR | மார்ச் 29 | மாலை 7.30 | பெங்களூரு |
11 | LSG vs PBKS | மார்ச் 30 | மாலை 7.30 | லக்னோ |
12 | GT vs SRH | மார்ச் 31 | மாலை 3.30 | அஹமதாபாத் |
13 | DC vs CSK | மார்ச் 31 | மாலை 7.30 | விசாகப்பட்டினம் |
14 | MI vs RR | ஏப்ரல் 1 | மாலை 7.30 | மும்பை |
15 | RCB vs LSG | ஏப்ரல் 2 | மாலை 7.30 | பெங்களூரு |
16 | DC vs KKR | ஏப்ரல் 3 | மாலை 7.30 | விசாகப்பட்டினம் |
17 | GT vs PBKS | ஏப்ரல் 4 | மாலை 7.30 | அஹமதாபாத் |
18 | SRH vs CSK | ஏப்ரல் 5 | மாலை 7.30 | ஹைதராபாத் |
19 | RR vs RCB | ஏப்ரல் 6 | மாலை 7.30 | ஜெய்பூர் |
20 | MI vs DC | ஏப்ரல் 7 | மாலை 3.30 | மும்பை |
21 | LSG vs GT | ஏப்ரல் 7 | மாலை 7.30 | லக்னோ |
ஐபிஎல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். மொபைலில் ஜியோ சினிமா ஆப் மற்றும் jiocinema.com இணைய தளத்தில் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 74 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 60 நாட்களாக போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டிகள் 67 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது ஐபிஎல் போட்டி அதிக நாட்கள் நடத்தப்பட்டது. மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை அணி விளையாடும் முதல் 4 போட்டிகள்
- மார்ச் 22 சென்னையில் நடைபெறும் போட்டியில் பெங்களூருவுடனும்,
- மார்ச் 26 சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும்,
- மார்ச் 31 விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும்,
- ஏப்ரல் 5 ஐதரபாத்தில் சன்ரைசர்ஸ் அணியுடனும், சென்னை அணி மோதுகிறது.
இந்த போட்டிகள் அனைத்து மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.