பழமொழி ஒரு எளிய, உறுதியான, பாரம்பரியமானது பொது அறிவு அல்லது அனுபவத்தின் அடிப்படையில் ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது.பழமொழிகள் பெரும்பாலும் உருவகம் மற்றும் சூத்திர மொழியைப் பயன்படுத்துகின்றன.
S.No | பழமொழி ஆங்கிலம் | பழமொழி தமிழ் |
---|---|---|
1 | Look before you leap | ஆழம் தெரியாமல் காலை விடாதே |
2 | As the fool thinks so the bell clinks | அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் |
3 | Put a beggar on horseback | அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான் |
4 | New brooms sweep well | புதிய துடைப்பம் நன்றாக பெருக்கும் |
5 | Tit for Tat | பழிக்கு பழி |
6 | Do in Rome as Romans do | ஊரோடு ஒத்து வாழ் |
7 | A closed mouth catches no flies | நுணலும் தன் வாயால் கெடும் |
8 | The face is the index of the mind | அகத்தின் அழகு முகத்தில் தெரியும் |
9 | The mills of God grind slow but sure | அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் |
10 | Empty vessels make the most noise | குறைகுடம் கூத்தாடும் |
11 | Art is long and life is short | கல்வி கரையில் கற்பவர் நாள் சில |
12 | A bird in the hand is worth two in the bush | அரசனை நம்பி புருஷனை கைவிடாதே /கிடைக்கப்போகும் பலாக்காயை விட, கையில் இருக்கும் களாக்காயே மேல் |
13 | All that glitters are not gold | மின்னுவதெல்லாம் பொன்னல்ல |
14 | A young calf knows no fear | இளங்கன்று பயமறியாது |
15 | Let patience have her perfect work | ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கணும் |
16 | Barking dogs seldom bite | குரைக்கிற நாய் கடிக்காது |
17 | Covert all, lose all | பேராசை பெரு நட்டம் |
18 | After a storm cometh a calm | புயலுக்குப் பின்னே அமைதி |
19 | A bad workman blames his tools | ஆட தெரியாதவள் தெருக்கோணல் என்றாள் |
20 | Adding fuel to the fire | எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல் |
21 | A wild goose never laid a tame egg | புலிக்குப் பிறந்தது பூனையாகாது |
22 | A wise enemy is better than a foolish friend | முட்டாள் நண்பனைவிட கற்றறிந்த பகைவனே மேல் |
23 | A burnt child dreads the fire | சூடு கண்ட பூனை அடுப்படி வராது |
24 | Pride comes before fall | அகம்பாவம் அழிவை தரும் |
25 | A guilty conscience needs no accuser | குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும் |
26 | A honey tongue and a heart of gall | அடி நாக்கிலே நஞ்சம், நுனி நாக்கிலே தேனும் |
27 | A hungry man is an anfry man | பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் |
28 | Call a spade a spade | உள்ளதை உள்ளவாறு சொல் |
29 | Don’t measure the worth of a person by their size | கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது /மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது |
30 | A Leopard Never Changes Its Spots | ஜென்ம புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது |
31 | Habits Die Hard | தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் |
32 | Cleanliness is next to Godliness | தூய்மையே இறைவனுக்கு அடுத்ததாகும் |
33 | Coming events cast their shadow before | ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே |
34 | Constant dripping wears away a stone | எறும்பு ஊரக் கல்லும் தேயும் |
35 | As you sow, So you reap | வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் |
36 | As the King is, so his subjects are | தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை / அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி |
37 | Bare words buy no barley | வெறுங்கை முழம்போடுமா? |
38 | Be just before you are generous | ஆற்றில் போட்டாலும் அளந்து போடு |
39 | Birds of a feather flock together | இனம் இனத்தைச் சேரும் |
40 | Bend the twig, Bend the tree/ You can’t teach an old dog new tricks | ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா |
41 | Distance lends enchantment to the view | இக்கரைக்கு அக்கரை பச்சை |
42 | Blood is thicker than water | தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் |
43 | Casting pearls before swine | குரங்கு கையில் பூ மாலை/ கழுதைக்கு தெறியுமா கற்பூர வாசனை |
44 | Better bend the neck than bruise the forehead | தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய் |
45 | Charity begins at home | தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் |
46 | Diamond cuts diamond | முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் / பாம்பின் கால் பாம்பறியும் |
47 | Make hay while the Sun shines/ Strike the iron while it is hot | காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் |
48 | Too much of anything is good for nothing | அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு |
49 | Failure is the stepping stone to success | தோல்வியே வெற்றிக்கு அடிப்படை |
50 | Do not look a gift horse in the mouth | தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே |
51 | Good homer sometime nods | யானைக்கும் அடி சறுக்கும் |
52 | Do not rob peter to pay paul | கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே |
53 | A cat may look at a king | யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் |
54 | Eagles don’t catch flies | பலி பசித்தாலும் புல் தின்னுமா? |
55 | Every ass loves his bray | காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு |
56 | Forgive and forget | மறப்போம் மன்னிப்போம் |
57 | Fish and guests stick in three days | விருந்தும். மருந்தும் மூன்று நாளைக்கு தான் |
58 | Familiarity breeds contempt | பழகப் பழகப் பாலும் புளிக்கும் |
59 | Every jack has his Jill | விரலுக்கு ஏற்ற வீக்கம்/ ராமனுக்கு ஏற்ற சீதை / பூட்டுக்கு ஏத்த சாவி |
60 | Not even a leaf moves without god’s will | அவனின்றி ஒரு அணுவும் அசையாது |
61 | First deserve, then desire | முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? |
62 | God is love | அன்பே கடவுள் |
63 | Love is blind | காதலுக்கு கண் இல்லை |
64 | Think before you act | எண்ணித் துணிக கருமம் |
65 | A constant guest is never welcome | விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு |
66 | Haste makes waste | பதறிய காரியம் சிதறும் |
67 | The pot calls the kettle black | ஈயத்தைப் பார்த்து பல் இளித்ததாம் பித்தளை |
68 | Health is wealth | நொயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் |
69 | Honesty is the best policy | நேர்மையே சிறந்த கொள்கை |
70 | Hitch your wagon to a star | உள்ளுவதெல்லாம் உணர்வுள்ளல் |
71 | Lamb at home and a lion at the chase | வீட்டில எலி, வெளியில புலி |
72 | It is no use crying over split milk | முடிந்த காரியத்தை நினைத்து பயன் இல்லை |
73 | Necessity has no law | ஆபத்துக்கு பாவமில்லை |
74 | Prevention is better than cure | வரும் முன் காப்பதே சிறந்தது |
75 | Slow and steady wins the race | நிதானம் வெற்றியை தரும் |
76 | The pen is mightier than sword | கத்தி முனையைவிட பேனாமுனை வலிமையானது |
77 | Spare the rod and spoil the child | அடியாத மாடு பணியாது |
78 | Where there is a will, there is a way | மனம் இருந்தால் மார்க்கமுண்டு |
79 | The lawmaker should not be a lawbreaker | வேலியே பயிரை மேய்ந்தது போல |
80 | No rains, no grains | மழை இல்லையேல் தானியமில்லை / உழைப்பில்லையேல் ஊதியமில்லை |
81 | If you run after two hares you will catch neither | இரண்டு படகில் காலை வைப்பவன் கரை சேருவதில்லை |
82 | Jack of all trade is master of none | பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான் |
83 | Money makes many | பணம் பத்தும் செய்யும் |
84 | Man proposes, god disposes | தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் |
85 | Laughter is the best medicine | வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் |
86 | Misfortunes never come single | பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் |
87 | Old is gold | பழமையே சிறந்தது |
88 | Penny wise and pound foolish | கடுகு போன இடம் தெரியும், ஆனால் பூசணிக்காய் போன இடம் தெரியாது |
89 | No smoke without fire | நெருப்பின்றி புகையாது |
90 | Union is strength | ஒற்றுமையே பலம் |
91 | Truth alone triumphs | வாய்மையே வெல்லும் |
92 | Work while your work, play while you play | காலத்தை பயிர் செய் |
93 | The old fox is caught at last | பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் |
94 | Work is worship | செய்யும் தொழிலே தெய்வம் |
95 | Time and tide wait for no man | ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா? |
96 | United we stand, divided we fall | ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு |
97 | Known is a drop, unknown is an Ocean | கற்றது கை அளவு , கல்லாதது உலகளவு |
98 | A friend in need is a friend indeed | ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் |
99 | The worth of shade is only known when the sun is beating down hot | நிழலின் அருமை வெயிலில் தெரியும் |
100 | A contented mind is a continual feast | போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து |
101 | A good beginning makes a good ending | முதல் கோணல் முற்றும் கோணல் |
102 | Set a thief to catch a thief | பாம்பின் கால் பாம்பறியும் |
103 | Spare the rod and spoil the child அடி | உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் |
104 | Every tide has its ebb | ஏற்ற இறக்கம் வாழ்க்கையில் சகஜம்/ ஏற்றம் உண்டு என்றால் இறக்கமும் உண்டு |
105 | Knowledge is power | புத்திமான் பலவான் ஆவான் |
106 | All are not saints that go to Church | வெளுத்தது எல்லாம் பாலாகுமா? கருத்தது எல்லாம் நீராகுமா? |
107 | Little drops of water make a mighty ocean | சிறு துளி பெரு வெள்ளம் |
108 | A kick from the wise is better than a kiss from a fool | குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டு படவேண்டும் |
109 | The anger of a good man is the hardest to bear | சாது மிரண்டால் காடு கொள்ளாது |
110 | The child is the father of man | விளையும் பயிர் முளையிலேயே தெரியும் |
111 | The early bird catches the worm | முந்தி முயல்வோர்க்கே முதல் வெற்றி |
112 | Self help is the best help | தன் கையே தனக்கு உதவி |
113 | It takes two to make a quarrel | இரண்டு கைகள் தட்டினால் தான் சத்தம் வரும் |
114 | Rome was not built in a day/Nothing is impossible | ஒரே நாளில் கோட்டையை பிடிக்க முடியாது |
115 | One flower makes no garland./A single tree doesn’t make an orchard | தனிமரம் தோப்பு ஆகாது |
116 | A penny saved is a penny earned | சிறுதுளி பெருவெள்ளம் |
117 | Practice makes perfect | சித்திரமும் கைப்பழக்கம் |
118 | Dawn and truth will always become visible | உண்மை ஒருநாள் வெளிவரும் |
119 | Silence means consent | மௌனம் சம்மதம் |
120 | Frost and fraud have foul ends | கெடுவான் கேடு நினைப்பான் |
121 | Never do things by halves | செய்வன திருந்தச் செய் |
122 | Never judge a book by its cover | ஆடையைக் கண்டு எடை போடாதே! |
123 | A good horse often needs a good spur | சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் |
124 | A journey of a thousand miles begins with a single step | அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் |
125 | Every bird must hatch its own eggs | அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும் |
126 | An idle brain is devil’s workshop | பயனாகாத மூளை பூதத்தின் பணி மனை |
127 | Love well, whip well | அடிக்கிற கைதான் அணைக்கும் |
128 | A sound mind in a sound body | உடல் வலிமையானால், உள்ளமும் வலுப்பெரும் |
129 | A snake could make an army panic | பாம்பென்றால் படையும் நடுங்கும் |
130 | Actions speak louder than words | சொல்லை விட செயலுக்கு வலிமை உண்டு |
131 | A rolling stone gathers no moss | நிறைகுடம் தழும்பாது |
132 | Better bend the neck than bruise the fore head | தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய் |
133 | Do not make a mountain out of a mole hill | மடுவை மலையாக்காதே |
134 | People who live in glass houses shouldn’t throw stones | கண்ணாடி வீட்டில் இருந்து கால் எறியாதே |
135 | Anything is fair in love and war | ஆபத்துக்கு பாவம் இல்லை |
136 | Faults are thick when love is thin | வேண்டாத பெண்டாட்டி கைபட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் |
137 | Justice delayed is justice denied | தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும் |
138 | Many a slip between the cup and the lip | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை |
139 | Money makes many things | பணம் பாதளம் வரைக்கும் பாயும் |
140 | Necessity is the mother of invention | தேவையே கண்டுபிடிப்பின் தாய் |
141 | A poor man’s words are not heard | ஏழை சொல் அம்பலம் ஏறாது |
142 | Spare the rod and spoil the child | அடியாத மாடு பணியாது |
143 | Stones and sticks are thrown only at fruit-bearing trees | கனிந்த மரம் தான் கல்லடி படும் |
144 | Work while your work, play while you play | காலத்தை பயிர் செய் |
145 | The old fox is caught at last | பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் |
146 | Chickens come home to roost | தன் வினை தன்னைச்சுடும் |
147 | Contentment is more than a kingdom | போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து |
148 | Work is worship | செய்யும் தொழிலே தெய்வம். |
149 | Let patience have her perfect work | ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கணும் |
150 | Effort never fails | முயற்ச்சி திருவினையாக்கும் |
Pingback: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் மார்ச் 25-ம் தேதி முதல் நடைபெறும் | கல்வி Latest