ஒரு பக்கம் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் வரிசையாக ஏகப்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களின் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், சத்தமே இல்லாமல் நல்ல படங்களை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கி வெளியிட்டு வருகிறது.
மஞ்சுமெல் பாய்ஸ் OTT
Title | Manjummel Boys |
---|---|
Release Platform | Disney+ Hotstar |
Language | Malayalam |
Release Date | April 5, 2024 |
Theatrical Release | Approximately one month prior to OTT release |
Plot | Based on a true incident in 2006 at Kodaikanal, Tamil Nadu |
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் OTT உரிமை விற்பனையாகவில்லை என கலாய்க்க பட்டு வந்த நிலையில் அதன் OTT ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹனுமான்
இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது, தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான ஹனுமான் திரைப்படம் தான். இந்த ஆண்டு பொங்கலுக்கு மகேஷ்பாபு நடித்து வெளியான குண்டூர் காரம் படத்துடன் போட்டியாக வெளியான ஹனுமான் திரைப்படம் வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 300 கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபிஸில் அள்ளியது.
தென்னிந்தியாவை தாண்டி வட இந்தியாவில் தான் இந்த படம் அதிக வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. ராமர் கோயில் சிறப்பை முன்னிட்டு ஹனுமான் படம் வெளியான நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் அந்தப் படத்தைப் பார்த்து வெற்றி பெற செய்தனர்.
ஹனுமான் OTT வெளியீடு
ஜியோ சினிமாவில் இந்தியிலும், ஜீ சினிமாவில் தெலுங்கிலும் கடந்த வாரமே வெளியானது. ஆனால், அதில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழியில் படம் இல்லையே என ரசிகர்கள் தேடிப் பார்த்து கடுப்பாகி விட்டனர். இந்நிலையில், தற்போது வரும் ஏப்ரல் 5ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹனுமான் வெளியாகிறது என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு OTT நிறுவனத்துக்கும் ஒவ்வொரு மொழியில் பிரித்துக் கொடுத்து டிஜிட்டல் உரிமத்தில் மிகப்பெரிய தொகையை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது தெரிய வருகிறது.
மஞ்சுமெல் பாய்ஸ்
மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் படம் ரூ. 150 கோடி வசூலை தாண்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
மஞ்சுமெல் பாய்ஸ் OTT வெளியீடு
ஹனுமான் படம் மட்டுமல்ல 200 கோடி ரூபாய் வசூல் செய்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் OTT உரிமத்தையும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி உள்ளது. அந்த படமும் வரும் ஏப்ரல் 5ம் தேதி OTTயில் வெளியாகிறது. அடுத்த வாரம் ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே OTTயில் வெளியாகும் இந்த 2 படங்களையும் கண்டு ரசிக்கலாம்.